Friday, September 21, 2018

பிக்பாஸ் மும்தாஜுக்கு உடலில் என்ன பிரச்சனை இருக்கு தெரியுமா? பரிதாபப்பட்ட சரவணன் மீனாட்சி ஸ்ரீஜா!

September 21, 2018

   
தமிழில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் 2 நிகழ்ச்சியில் போட்டியாளராக பிரபல திரைப்பட நடிகையான மும்தாஜ் கலந்து கொண்டார்.
இவர் சமீபத்தில் வெளியேற்றப்பட்டார். அதற்கு காரணம் இவருக்கு என்று தனியாக ஸ்பெஷல் பால். எண்ணெய், தயிர் போன்றவைகள் இருக்கும். அதுமட்டுமின்றி கழிப்பறையில் கூட இவருக்கு என்று தனியாக இருக்கும்.

நேர்மறையான பேச்சும் செயல்களும் பலருக்கும் பிடித்திருந்தாலும், அவர் முகத்தில் அடிப்பது போல சில நேரங்களில் பேசியது ரசிகர்களுக்கு கோபத்தை ஏற்படுத்தியது.

டாஸ்க்குகள் கொடுக்கப்படும் போது, சில டாஸ்க்குகள் தன்னால் முடியாது என்று ஒதுங்கிக் கொள்வார். இதனால் மற்ற போட்டியாளர் சிரமப்படுவார்கள், சண்டை கூட சில நேரங்களில் வந்ததுண்டு.

அப்படி ஒரு டாஸ்க்கின் போது, மும்தாஜின் தலையில் கலர் அடிக்க வேண்டும், அப்படி அவர் கலர் அடித்தால் ரித்விகா காப்பாற்றப்படுவார் என்று இருந்தது.

ஆனால் மும்தாஜோ இது என்னால் முடியாது, என் உடல்நிலை இதற்கு சரிபட்டு வராது என்று அதை திட்டவட்டமாக மறுத்தார்.

இதைக் கண்ட பலரும் இதில் என்ன இருக்கு, கலர் தானே என்று கூட திட்டினர்.

இந்நிலையில் தமிழில் ஒளிபரப்பாகிய சரவணன் மீனாட்சி நாடகத்தில் நடித்த நடிகை ஸ்ரீஜா மும்தாஜை திட்டாதீர்கள் அவருக்கு இருக்கும் பிரச்சனை உண்மைதான் என்று கூறியுள்ளார்.

அதில், இதை ருமட்டாய்டு ஆர்த்ரைட்டிஸ் என்று சொல்வார்கள். என் அம்மாவிற்கும் இதே பிரச்சனை உண்டு. இந்த பிரச்சனை இருந்தால் பால் பொருட்கள் உட்கொள்ளும் போது மும்தாஜ் போலவே கவனமாக தான் செயல்பட வேண்டும்.

இந்த பிரச்சனை இருந்தால் படுக்கையில் இருந்து எழுந்ததும் உடல் விரைப்பாக இருக்கும். சிறிது நேரம் கழித்து தான் சரிவர நடமாட முடியும். சில குறிப்பிட்ட கெமிக்கல்கள் ஒத்துக்கொள்ளாது. அதனால் தான் மும்தாஜ் முடியை கலர் செய்ய மறுத்திருக்கிறார்.

தண்ணீரில் அதிக நேரம் நிற்க கூடாது. கண்ணாடி பொருள்களை கையாளும் போது தடுமாற்றம் ஏற்படும். மும்தாஜை பிக் பாஸ் ரசிகரகள் திட்டும் போதெல்லாம் எனக்கு என் அம்மாவின் நினைவு தான் வரும். அவர் பாவம் மும்தாஜ் சொன்னது எல்லாம் உண்மைதான் மிகைப்படுத்துதல் அல்ல என பரிதாபத்துடன் கூறியுள்ளார்

0 comments:

Post a Comment