Friday, September 21, 2018

கத்தாருக்கு FREE VISAவில் புதிதாக வருகின்றீர்களா! அப்படியாயின் உங்களுக்கான 33 அறிவுரைகள்

September 21, 2018 

முதன்முதலாக நான் வேலைக்காக வெளிநாடு வரவிருக்கிறேன் என்போர் கவனத்துக்கு! என்னால் முடிந்ததை பகிர்கிறேன் கேளுங்கள்..

1. படிக்காம வந்தா தொழில் எடுக்கலாம்’ என்ற நினைப்பை தூக்கியெறியுங்கள். நாட்டிலே குறைந்தது 4-6 மாசங்களாவது தொழில் செய்து அனுபவத்துடன் வாருங்கள்.

2. என்னை விட கெட்டித்தனம் குறைந்த அவன் வேலை எடுத்திருக்கான். நானும் எடுப்பேன் என்று யோசிப்பதில் நியாயம். ஆனால் அதற்கேற்றவாறு படித்தும் அனுபவத்துடனும் வாருங்கள். அனுபவம் வேறு. பாடசாலைப் படிப்பு வேறு.

3. எல்லாவற்றுக்கும் மேலாக ‘வேலை எடுக்கனும் என்ற வெறியும் வேட்கையும்’ திடமாய் மனதில் இருக்க வேண்டும்..

4. நீங்கள் கற்றது கொஞ்சம் தான். Free நேரங்களில் இணையங்களிலோ நண்பர்கள் மூலமாகவோ தொழில் அறிவை மேலும் விருத்தி செய்ய முயலுங்கள்..

5. இறைபக்தி கட்டாயம். எப்பவுமே படைத்தவனை நோக்குங்கள். கண்ணீர்த்துளி பெறுமதி வாய்ந்தது.

6. CVஐ நன்கு ஆங்கிலமும் புலமையும் தெரிந்த ஒருவரிடம் கொடுத்து சமகாலத்துக்கு ஏற்றவாறு திருத்தம் செய்யுங்கள்.

7. CV கம்பனி கம்பனியா ஏறி இறங்கி கொடுக்குறது Waste அல்ல. அனுபவசாலிகளுக்கு இது பொருந்தாமல் இருக்கலாம். உங்களுக்கு வெற்றி கிடைக்கலாம்..

8. தொழில் தேடுவதற்கு பல வழிகள் இருக்கின்றன. நண்பர்கள் சொல்லித்தந்திருப்பார்கள். அத்தனை வழிகளிலும் முடியுமானவரை முயற்சியுங்கள்.

9. நண்பர்கள் வேலை தேடு!. ஓடு!.. படி!.. CV எடுத்து வெளியேறு! என்று ஏசுவார்கள். தொந்தரவு செய்வார்கள்.. . எல்லாம் உங்கள் நலனுக்கே . பொறுத்துக்கொள்ளுங்கள்..

10. அதற்காக எல்லா நேரங்களிலும் வேலை தேடனுமா என்றால் இல்லை. வெள்ளி சனிகளில் முடியுமானால் ஓய்வு எடுங்கள். கொஞ்ச காலத்துக்குத் தானே!

11.நள்ளிரவு வரை படம் பார்த்துக்கொண்டு காலை 11 மணிக்கி எழும்பாமல் நேர முகாமைத்துவத்தை கச்சிதமாக கையாளுங்கள். உங்களுக்குள் ஒரு நேரசூசியை உருவாக்கிக் கொள்ளுங்கள்.

12. நேரம் அமையும் போதெல்லாம் ஆங்கில அறிவை விருத்தி செய்யுங்கள். ஏனெனில் தொழிலின் அடிப்படை அறிவைக்கற்று ஆங்கில அறிவால் வென்றவர்களும் உண்டு.

13. காசு செலவாகுதே என்று பின்வாங்காதீர்கள். வேலை எடுத்தால் இங்கே செலவான மேலதிக கடன்களை ஓரிரு மாதங்களுக்குள் அடைக்கலாம்.

14. அள்ளி எறிந்துவிட்டு நாட்டுக்குப்போவோமா என மனசு சலனப்படும். எல்லாருக்கும் இது நடக்கும். வந்த நோக்கத்தை மாற்றிவிடாதீர்கள். ‘துணிந்தால் சாதிக்கனும்’ என்ற வாய்ப்பாட்டை ஆழமாக மனதில் இறக்குங்கள்.

15. வேலை தேடலில் வரும் கஷ்டங்களை வீட்டார்களிடம் பகிராதீர்கள்.

16. கூட்டாளி இருக்கான் தானே. அவன் பாத்துப்பான் தானே என்று நாட்களை வீணாக்கி சோம்பேறியாகாதீர்கள். அவர்களும் உழைக்கத்தான் வந்திருக்கிறார்கள் . ஒவ்வொரு நாட்களும் பெறுமதியானவை.

17. வந்திருக்கிறேன் என அதே துறையில் இருக்கும் அத்தனை தெரிந்த நண்பர்களுக்கும் எத்திவையுங்கள். முடியுமாயின் வேறு துறைகளில் இருக்கும் நண்பர்களுக்கும் எத்திவையுங்கள். அவர்களின் கம்பனிகளில் வெற்றிடம் இருந்தால் தகவல் சொல்வார்கள்.

18. அவர்கள் விரும்பியோ விரும்பாமலோ உங்கள் CVஐ அவர்களிடம் போய்ச்சேர வழி செய்யுங்கள்

19. ஒரு கம்பனியில் சேரும்போது காசை mind பண்ணாதீர்கள். சில கம்பனிகளில் நல்ல சம்பளம். ஆனால் வேலைத் தரமின்மை. சிலவற்றில் சராசரி சம்பளம். ஆனால் தரமான வேலை.  நீங்கள் இன்னொரு கம்பனிக்கு மாறும் பட்சத்தில் வேலை முழுவதுமாய் தெரியுமாயின் உங்களுக்கென்றே ஒரு துணிவும் டிமாண்டும் நீங்களாகவே உருவாக்கிக் கொள்வீர்கள்.

20. 2500க்கு தொழிலில் சேர்ந்து ஒரு வருச அனுபவம் பெற்று புதிய கம்பனிக்கு 10,000க்கு சேர்ந்தவர்களும் உண்டு

21. என் கூட வந்தவர்களோ, நான் வந்ததற்குப் பின்னால் வந்தவர்களோ வேலை எடுத்துவிட்டார்கள் என யோசிக்காதீர்கள், மனம் தளராதீர்கள்.. எல்லாம் ஒரு நலவுக்கே அன்றி வேறில்லை. முயற்சியைக் கைவிடாதீர்கள். அவர்களை விடவும் உங்களுக்கு நல்ல வாய்ப்பு கிடைக்கப் பெறலாம்.

22. ஒரு interview வில் விட்ட பிழையை அடுத்த interviewக்கு விடாதீர்கள். ஒவ்வொரு interviewலும் புது படிப்பினைகளை கற்றுக்கொள்ளுங்கள்

23. interviewல் அவர்கள் கேட்கும் கேள்விக்கு விடை தெரியாவிட்டாலும் ஏதாவதொன்றை சொல்லி சமாளியுங்கள். . மௌனத்தைவிட இது சிறந்த யுக்தி

24. அடிக்கடி செல்லும் சில இடங்களுக்கு புது நண்பர்களை அறிமுகமாக்கி நீங்கள் வேலை தேடுகிறீர்கள் என்பதை எத்தி வையுங்கள். . உதாரணம். பள்ளிவாயல்

25. எனக்கு எந்த Responseஉம் வரவில்லை என பின் வாங்காதீர்கள் . தைரியம் இழக்காதீர்கள். 15வது முயற்சியில் அறவே கிடைக்கவில்லை என்றால் 16வதில் அதிஷ்டம் சட்டெனக் கிடைக்கலாம்.

26. இங்கே தொழிலில் உள்ளவர்கள் உங்களை விட வயது குறைவாகவோ அல்லது படிப்பில் குறைவாகவோ இருந்தாலும் வெட்கப்படாமல் அறிவுரை கேளுங்கள். அவர்களிடம் படியுங்கள் . வெட்கத்தையும் ஈகோவையும் தொழில் எடுக்கும் வரை தூக்கியெறியுங்கள்.

27. Offer letter வந்து கம்பனிக்கு சேருமுன்பு கம்பனியின் Staffஇல் ஓரிருவரைப் பிடித்து கம்பனியின் தன்மை பற்றி அறியுங்கள். Salary Pending பலமாசம் இருக்கும் கம்பனிகளும் உண்டு.

28. சிலநேரங்களில் வேலைதேடும் நண்பருக்கு ஒரு Offer திருப்தியில்லாமல் அதை உங்களிடம் சொல்வாராயின் உங்களுக்கு அதில் திருப்தியிருந்தால் சந்தர்ப்பத்தை பயன்படுத்துங்கள்.

29. சிலநேரங்களில் சாதாரண சம்பளத்துக்கு ஆள் எடுத்து வருசாவருசம் Increment வழங்கும் கம்பனிகளும் உண்டு. 2000க்கு சேர்ந்து 5000 எடுப்போரும் உண்டு. 4000க்கு சேர்ந்து அதே 4000 எடுப்போரும் உண்டு.

30. பொறுமை மிக அவசியம். கண்ட நின்றோரின் நக்கல்களுக்கோ வசைபாடல்களுக்கோ குத்திக்காட்டலுக்கோ ஆளாக நேர்ந்தால் அதைப் போட்டு மனதைக் குழப்பாதீர்கள். தொழில் எடுத்தபின் அவர்களுக்கு பாடம் கற்றுக்கொடுங்கள்.

31. முயற்சித்தேன். ஆனால் மூன்று மாத காலங்கள் கடந்து விட்டன என்றாலும் நம்பிக்கையை இழக்காதீர்கள். எல்லாம் நன்மைக்கே.!

32. சம்பளங்களை தயவு செய்து ஒப்பிடாதீர்கள். குறைவான சம்பளம் எடுக்கும் நீங்கள், கூடிய சம்பளம் எடுக்கும் அவன், அடையாத இலக்குகளையும் மனநிறைவையும் அடையலாம்.

33. சம்பளம் உங்களுக்கு திருப்தியாயின் முன்னேறுங்கள். யாராவது என்னடா சம்பளம் என்று கேட்டால் ‘அல்ஹம்துலில்லாஹ். பரகத்டா’ என்று கடந்து விடுங்கள்.

#அடிக்கடி சொல்லும் வாசகம்
“உங்களுக்கு என்றே ஒரு சீட் மத்திய கிழக்கில் இருக்குமென்றால் அந்த சீட்டில் நீங்கள் தான் உட்காரலாம். எந்தக் கொம்பனும் அதில் உட்கார முடியாது. முயற்சியைக் கைவிடாதீர்கள்.

நன்றி
(கவி. அப்துர் ரஹ்மான் - அக்கரைப்பற்று)

0 comments:

Post a Comment