Wednesday, September 19, 2018

காதல் மயக்கத்தில் தனது வாழ்க்கையை இழந்த 16 வயது மாணவி – பாடசாலை மாணவிகளே எச்சரிக்கை!

September 20, 2018

பாடசாலை மாணவியின் ஆபாச வீடியோவை இணையத்தில் வெளியிட்டு அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்திய மாணவன் ஒருவர் காலி பொலிஸ் பிரிவு மற்றும் சிறுவர் விவகார பணியகத்தினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

பாடசாலை மாணவியை ஆபாசமாக வீடியோவை பதிவிட்டு அதனை இணையத்தில் வெளியிட்டமை தொடர்பில் 17 வயதான பாடசாலை மாணவனே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

பாடசாலை மாணவியை துஷ்பிரயோகம் செய்து அதனை வீடியோவாக பதிவிட்டு இணையத்தில் வெளியிட்ட மாணவன், குறித்த மாணவியை தொடர்ந்து பாலியல் நடவடிக்கையில் ஈடுபடுமாறு அச்சுறுத்தியுள்ளார்.

குறித்த மாணவனுடன், 16 வயதான மாணவிக்கு காதல் தொடர்பு காணப்பட்டுள்ள நிலையில் இவ்வாறான வீடியோ பதிவு செய்யப்பட்டுள்ளது.

காதலியான மாணவியை மீண்டும் மீண்டும் தனிப்பட்ட அறைக்கு வருமாறு மாணவன் அழைத்துள்ளார்.

எனினும், அதற்கு மாணவி மறுத்தமையினால் அந்த வீடியோவை மாணவன் நண்பர்களுடன் பகிர்ந்துள்ளதுடன் அவர் அதனை இணையத்தில் வெளியிட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

எனவே, பாடசாலை மாணவிகளே! இது உங்களின் கவனத்திற்கான பதிவு. பெற்றோர்களே இது உங்களின் கவனத்திற்கான பதிவு. இன்னும் சில மாணவிகள் பெண்கள் காப்பாற்றப்படவேண்டுமாயின்
பெற்றோர்கள் அவதானத்துடன்

0 comments:

Post a Comment