Sunday, September 30, 2018

ஒலுவிலில் தாருஸ்ஸலாம்: காற்றில் பறந்த, மு.கா. தலைவரின் வாக்குறுதி


October 1, 2018

ஒலுவில் பிரதேசத்தில் முஸ்லிம் காங்கிரசின் அம்பாறை மாவட்டத்துக்கான தலைமைக் காரியம் ‘தாருஸ்ஸலாம்’ எனும் பெயரில் உள்ளுராட்சித் தேர்தல் முடிந்தவுடன் அமைக்கப்படும் என்று, அந்தக் கட்சின் தலைவர் ரஊப் ஹக்கீம் தெரிவித்திருந்த நிலையில், குறித்த வாக்குறுதி – காற்றில் விடப்பட்டுள்ளதாக மு.கா. ஆதரவாளர்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

கடந்த உள்ளுராட்சித் தேர்தல் காலத்தில், அம்பாறை மாவட்டத்தில் இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டமொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே, மு.கா. தலைவர் மேற்படி வாக்குறுதியை வழங்கியிருந்தார்.

வெளிநாடுகளில் நன்கொடை வசூலித்தாவது, அம்பாறை மாவட்டத்துக்கான ‘தாருஸ்ஸலாம்’ அமைக்கப்படும் என்றும் மு.கா. தலைவர் ஹக்கீம் இதன் போது உறுதியளித்தார்.

எவ்வாறாயினும் தேர்தல் நிறைவடைந்து ஏழு மாதங்கள் கடந்து விட்ட நிலையில், மு.கா. தலைவர் வழங்கிய வாக்குறுதி தொடர்பாக, அவர் எவ்வித சொரணையுமற்று இருப்பது, அம்பாறை மாவட்ட மக்களை தொடர்ந்தும் ஏமாளிகளாக்கும் செயற்பாடாகும் என்று, மு.காங்கிரசின் அம்பாறை மாவட்ட முக்கியஸ்தர் ஒருவர் கூறினார்.

வாக்குறுதி வழங்குவதும், பின்னர் அதை நிறைவேற்றாமல் ஏமாற்றுவதும், மு.கா. தலைவர் ஹக்கீமுக்கு புதிதல்ல எனவும், அந்த முக்கியஸ்தர் மேலும் கூறினார்.

நன்றி

புதிது
அஹமட்

பெண் தப்பியோடியதால் ஒரு இன்ஸ்பெக்டர் , ரெண்டு கான்ஸ்டபிள் பதவி நீக்கம் செய்யப்பட்ட சம்பவம்.

   October 01, 2018

ஹிக்கடுவை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த பெண் சந்தேகநபரொருவர், பொலிஸ் தடுப்பிலிருந்து
தப்பிச் சென்ற சம்பவம் தொடர்பில், பொலிஸ் பரிசோதகர், இரண்டு பொலிஸ் கான்ஸ்டபிள்கள் ஆகியோர்  பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

காலி உதவி பொலிஸ் அத்தியட்சகரால் உடன் அமுலுக்கு வரும் வகையில் இவர்கள் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

ஹிக்கடுவை- களுப்பே பிரதேசத்தில் வசித்து வந்த சந்தேகநபரான பெண், 1400 மில்லிகிராம் ஹெரோய்ன் வைத்திருந்த குற்றச்சாட்டின் கீழ் கைதுசெய்யப்பட்டு, நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்காக, பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த போதே, தப்பிச் சென்றுள்ளார்.

தப்பியோடிய சந்தேகநபர் இதுவரை கைதுசெய்யப்படாத நிலையில், காலி உதவி பொலிஸ் அத்தியட்சகர் காமினி இஹலவெலவின் ஆலோசனைக்கமைய விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

உலக சிறுவர், முதியோர் தினம் இன்று

01.10. 2018-

உலக சிறுவர் தினம் மற்றும் உலக முதியோர் தினம் இன்று இலங்கையில் கொண்டாடப்பட்டு வருகின்றது.

1954ம் ஆண்டு டிசம்பர் மாதம் 14 ஆம் திகதி ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட யோசனைக்கமைய உலக சிறுவர் தினத்தைக் கொண்டாடும் நிகழ்வு ஆரம்பமானது.

சிறுவர் உரிமைகளைப் பாதுகாத்து அவர்களுக்கு மிகவும் சிறந்த வாழ்க்கையை ஏற்படுத்திக் கொடுப்பதற்காக 1989 ஆம் ஆண்டு நவம்பர் 29 ஆம் திகதி சிறுவர் உரிமைகள் தொடர்பான சாசனம் நிறைவேற்றப்பட்டது.

அந்த சாசனத்திற்கமைய, சட்டத்தின் மூலம் குறைந்த வயதில் முழுமையடைந்தாலேயொழிய 18 வயதிற்கு உட்பட்ட அனைத்துப் பிரஜைகளும் சிறுவர்களாகக் கருதப்படுவார்கள்.

இதேவேளை, உலக வயோதிபர் தினமும் இன்றாகும். 1990 ஆம் ஆண்டு டிசம்பர் 14 ஆம் திகதி ஐக்கிய நாடுகளின் பொதுச் சபை கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட யோசனைக்கு அமைய இந்த தினம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

2025 ஆம் ஆண்டளவில் உலகில் 1200 கோடி மக்கள் வயோதிபர்களாக இருப்பார்கள் என எதிர்வுகூறப்பட்டுள்ளது. நாம் அனுபவிக்கும் பல உரிமைகளை எமக்கு பெற்றுத் தந்த வயோதிபர்களை கௌரவத்துடன் நன்றி கூற வேண்டியதன் முக்கியத்துவத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சுட்டிக்காட்டியுள்ளார்.

ஜனாதிபதி, பிரதமர் தலைமையில் இன்று சர்வதேச சிறுவர்தினம்

சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு தேசிய வைபவம் தினம்  இன்று ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் அலரிமாளிகையில் இடம்பெறவுள்ளது.

“தன் முனைப்பாற்றலுடன் முன்னோக்கி செல்லுங்கள் - சிறுவர் பருவத்திற்கு ஊக்கமளியுங்கள்” என்ற தொனிப்பொருளின் கீழ் இந்த நிகழ்வு இடம்பெறவுள்ளது.

மகளீர் மற்றும் சிறுவர்கள் அலுவல்கள் அமைச்சர் சந்திராணி பண்டாரவின் ஆலோசனைக்கு அமைய இந்த அமைச்சினால் இந்த வைபவம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கொழும்பு மாவட்டத்தை கேந்திரமாக கொண்டு நடைபெறவுள்ள இந்த வைபவத்தில் சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு முத்திரையும் கடித்த உறையும் வெளியிடப்படவுள்ளது.

விசேட ஆற்றல்களை கொண்ட சிறுவர்கள் 9 பேருக்கும் மற்றும் சர்வதேச சிறுவர் தினத்திற்கான முத்திரைக்கான படத்தை தயாரித்த மாணவர்களுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்களை வழங்குவதுடன், விசேட தேவைகள் உடைய சிறுவர்களின் கலாசார நிகழ்வுகளும் ,பாடசாலை மாணவர்களின் சிறப்பு நிகழ்ச்சிகளும் குறித்த நிகழ்வில் இடம்பெறவுள்ளது.

இந்த வைபவத்தில் முக்கிய உரையை சிரேஷ்ட மனோவியல் தொடர்பான விசேட வைத்தியரான சமிந்த வீரசிறிவர்தன நிகழ்த்தவுள்ளார்.

சிறுவர் தினத்தை முன்னிட்டு மாவட்டம் மற்றும் பிரதேச மட்டத்திலும் பல்வேறு நிகழ்ச்சிகள் இடம்பெறவுள்ளன. இதற்கான ஏற்பாடுகளை மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சு ஒழுங்குபடுத்தியுள்ளது.

பிரச்சனை மற்றும் அனர்த்தத்திற்கு உள்ளான ஆயிரம் சிறுவர்களுக்கு இதற்கான நிகழ்ச்சிகள் 22 மாவட்டத்தில் இடம்பெறவுள்ளன. தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை இதற்கான ஒழுங்குகளை மேற்கொண்டுள்ளது.

இந்த பிரதேச செயலக மட்டத்தில் தலா 3 மாணவர்கள் வீதம் இதற்காக தெரிவுசெய்யப்பட்டுள்ளனர். 2 ஆயேிரம் ரூபா பெறுமதியான கல்வி உபகரணங்கள் ஆயிரம் ரூபாவுகளுக்கான சேமிப்பு கணக்கு புத்தகம் தமிழ் சிங்கள மற்றும் ஆங்கில அகராதிகள் தமிழ் சிங்கள மாணவர்களுக்கும் வழங்குவதற்கு கல்வி அமைச்சு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

இந்த பிரதேச செயலக மட்டத்தில் தலா 3 மாணவர்கள் வீதம் இதற்காக தெரிவுசெய்யப்பட்டுள்ளனர். 2 ஆயேிரம் ரூபா பெறுமதியான கல்வி உபகரணங்கள் ஆயிரம் ரூபாவுகளுக்கான சேமிப்பு கணக்கு புத்தகம் தமிழ் சிங்கள மற்றும் ஆங்கில அகராதிகள் தமிழ் சிங்கள மாணவர்களுக்கும் வழங்குவதற்கு கல்வி அமைச்சு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

சிறுவர் பராமரிப்பு மற்றும் சிறுவர் சேவைகள் திணைக்களத்தின் மூலம் சிறுவர் மத்தியில் சேகரிக்கப்பட்ட தயாரிப்புக்கள் குறித்த நிகழ்வும் 331 பிரதேச செயலக பிரிவில் நடைபெறவுள்ளது. ஒரு வேலை திட்டத்திட்டக்காக 5000 ரூபா நிதி உதவி வழங்கப்படவுள்ளது.

நேற்று (30 ம் திகதி) விஹாரமஹாதேவி பூங்கவில் தேசிய தொலைக்காட்சியான ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் மூலம் நடத்தப்பட்ட சிறுவர் தின கொண்டாட்டத்தில் சிறுவர் பராமரிப்பு மற்றும் சிறுவர் சேவை திணைக்களத்திற்கென கூடம் ஒன்று ஒதுக்கப்பட்டிருந்தது.

இதில் பராமரிப்பு மற்றும் சிறுவர் சேவை திணைக்களத்த்தின் மூலம் வேலைத்திட்டம் குறித்து விபரங்கள் அதாவது நிதியுதவி பாதுகாப்பு திட்டத்தை தயாரித்த்தால் சிறுவர் சமூக சிறுவர் சபை வேலைத்திட்டம், சிறுவர் அபிவிருத்தி குழுவின் வேலைத்திட்டம் சிறுவர்களை பராமரித்தல் போன்றவைகள் தொடர்பில் விளக்கமளிக்கப்பட்டது.

ஜனாதிபதியின் சிறுவர் தின வாழ்த்துச் செய்தியில்,

சிறுவர்களை தொழிலில் ஈடுபடுத்துவதைத் தவிர்த்து அனைத்து சிறுவர்களினதும் கல்வி உரிமையை உறுதிப்படுத்தி சிறுவர் உரிமைகள் பற்றிய சகலவித சர்வதேச உடன்பாடுகள் மற்றும் பிரகடனங்களுக்கு அமைவாக செயற்பட எம்மால் முடிந்துள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி வெளியிட்டுள்ள சிறுவர் தின வாழ்த்துச்செய்தியில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

'வீரியத்துடன் முன்னோக்கி செல்க – சிறுவர்களை பலப்படுத்துக' என்றும் தொனிப்பொருளில் இம்முறை சர்வதேச சிறுவர் தினக்கொண்டாட்டங்கள் ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளன. சிறுவர் தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி வெளியிட்டுள்ள வாழ்த்துச்செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

இதேவேளை, மனிதர்களாகிய நாம் இன்று அனுபவிக்கும் பல உரிமைகளை எமக்காக வென்றெடுத்தவர்கள் இன்றைய எமது சமூகத்திலுள்ள சிரேஷ்ட பிரஜைகளே என்பதை நாம் கௌரவத்துடன் நினைவில் வைத்துக்கொள்ளவேண்டும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது முதியோர் தின செய்தியில் தெரிவித்துள்ளார்.

முதியோர் தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி வெளியிட்டுள்ள வாழ்த்துச்செய்தியில் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அந்த வாழ்த்து செய்தியில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் வாழ்த்துச் செய்தியில்,

உலக சிறுவர் முதியோர் தினத்தைக் கொண்டாடும் இன்றைய தினத்தில் சிறுவர் உலகினைப் பாதுகாப்பதற்காக அர்ப்பணிப்புடன் செயற்படுவதற்கும், வயதான முதியோருக்குக் கிடைக்க வேண்டிய அன்பு, கண்ணியம், அவதானத்தினை வழங்கவும் திடசங்கற்பம் பூணுவோம் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

பிரதமர் வெளியிட்டுள்ள உலக சிறுவர் மற்றும் முதியோர் தினச்செய்தியில்  இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

மனிதனிடம் காணப்படும் மிகவும் உன்னதமான வளம் பிள்ளைகள் என்பதில் இரு கருத்துக்கு இடமில்லை. அவர்களது வாழ்வினை மேம்படுத்துவதற்கு எந்தவொரு அர்ப்பணிப்பினையும் செய்ய பெற்றோர் தயாராக உள்ளனர். முழு வாழ்வினையும் தமது பிள்ளைகள் மற்றும் சமூகத்திற்காக அர்ப்பணித்த இரண்டாவது குழந்தைப் பருவத்தில் வாழ்வோர் எனக் கருதப்படும் முதியோரையும் அவ்வாறே கவனித்துப் பராமரிப்பது எமது பொறுப்பாகும்.

துணிச்சலுடன் முன்னோக்கிப் பயணிக்க சிறுவர்களுக்குப் பக்கபலமாக இருங்கள்' என்பது உலக சிறுவர் தினக் கருப்பொருளாகக் காணப்படும்போது, 'மனித உரிமைகளுக்காக முன்னின்ற மூத்த பிரஜைகளை கௌரவிப்போம்' என்பது உலக முதியோர் தினக் கருப்பொருளாகக் காணப்படுகிறது. சிறுவர்கள் மற்றும் முதியோர் தொடர்பாக எமது கடமைப் பொறுப்பு யாது என்பதைப் புதிதாக சிந்திப்பதற்கு இக்கருப்பொருள்கள் எம்மை ஊக்குவிக்கின்றன.

ஒருபுறத்தில் போட்டித்தன்மை வாய்ந்த கல்வி ஒழுங்கின் பிடியில் குழந்தைப் பருவம் சிக்கியுள்ளதுடன், மறுபுறத்தில் நவீன தொடர்பாடல், தொழிநுட்ப முன்னேற்றம் சிறுவர் உலகினை ஆக்கிரமித்து வருகிறது.

மதுபானம், போதைப் பொருட்களின் அச்சுறுத்தல், சிறுவர் துஷ்பிரயோகங்கள், சிறுவர்களைத் தவறான வழியில் பயன்படுத்தல் போன்றனவும் சிறுவர்களுக்கு எதிராக இடம்பெறுகின்றன. இந்த எல்லா வகையான தடைகளின் மத்தியிலும் வாழ்வினை ஒழுங்கமைப்பதற்கு வளர்ந்தோரான எமது உதவியும் வழிகாட்டலும் பிள்ளைகளுக்குக் கிடைக்க வேண்டியுள்ளது.

வேறுபட்ட சமூக, பொருளாதாரப் பிரச்சினைகள் மத்தியில் ஆதரவற்றவர்களாக மாறும் வயதான முதியோரைக் கவனித்துப் பராமரிப்பதற்கு மனிதாபிமானரீதியில் பங்களிக்க வேண்டும் என்பதுடன், சர்வதேசரீதியான முதியோர் பராமரிப்புச் சேவையிலிருந்து அறிவு மற்றும் அனுபவங்களைப் பெற்றுக்கொண்டு அதற்கு விரிவான வேலைத்திட்டமொன்றை செயற்படுத்துவதும் அத்தியாவசியமானதாகும்.

உலக சிறுவர் முதியோர் தினத்தைக் கொண்டாடும் இன்றைய தினத்தில் சிறுவர் உலகினைப் பாதுகாப்பதற்காக அர்ப்பணிப்புடன் செயற்படுவதற்கும், வயதான முதியோருக்குக் கிடைக்க வேண்டிய அன்பு, கண்ணியம், அவதானத்தினை வழங்கவும் திடசங்கற்பம் பூணுவோம்.

இதேவேளை, உலக அளவில் சிறுவர்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியத்தினால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின்படி, ஒவ்வொரு நாளும் உலகிலுள்ள சிறுவர்களில் 16 ஆயிரம் பேர் மரணிக்கின்றனர். 10 வயதிற்கும் 19 வயதிற்கும் இடைப்பட்ட 2 மில்லியன் பேர்வரையில் எச்.ஐ.வி தொற்றுக்கு உள்ளாவதுடன், அவர்களில் 56 சதவீதமானவர்கள் சிறுமிகளாக உள்ளனர்.

ஒவ்வொரு 10 நிமிடத்திற்கும் ஒரு பெண் குழந்தை காரணமின்றி அல்லது வன்முறையினால் உயிரிழக்கின்றது. உலகம் முழுவதிலும் மரணிக்கின்ற ஐந்து வயதுக்கு உட்பட்ட சிறுவர்களில் 50 சதவீதமானவர்கள் போசாக்கின்மையால் மரணிப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதேவேளை, உலகம் முழுவதிலும் இடம்பெறுகின்ற வன்முறைகள், மற்றும் பாலியல் ரீதியிலான துன்புறுத்தல்கள் காரணமாக பெரும் எண்ணிக்கையிலான சிறுவர்கள் பாதிக்கப்படுகின்றனர். இத்தகைய வன்முறைகளில் நம் நாட்டு சிறுவர்களை பாதுகாப்பது நம் அனைவரினதும் கடமையாகும்.

இதேவேளை, பாடசாலை முறைமையினுள் சிறுவர்களுக்கு ஏற்படும் உடலியல் ரீதியான தண்டனைகளை 2020ஆம் ஆண்டாகின்றபோது முழுமையாக ஒழிப்பதை வலியுறுத்தி ஏற்பாடு செய்யப்பட்டிருந்த 'உண்மையான மாற்றத்தை நோக்கி' என்னும் தொனிப்பொருளில் நடைபவனி நேற்று இடம்பெற்றது.

கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் நேற்று ஆரம்பமான இந்த நடைபவனியில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.

சிறுவர்களுக்கும் அவர்களது எதிர்காலத்திற்கும் ஏற்படும் பாதிப்புகளை அடிப்படையாகக் கொண்டு, உலகளாவிய ரீதியில் இலங்கை உட்பட 131 நாடுகள் சிறுவர் துன்புறுத்தல்களுக்கு எதிராக நடவடிக்கை எடுத்துள்ளதுடன், இந்த அனைத்து அம்சங்களையும் கருத்திற்கொண்டு சிவில் அமைப்பான சிறுவர் துன்புறுத்தல்களை ஒழிப்பதற்கான அமைப்பினால் இந்த நடைபவனி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

சிறுவர்களுக்கெதிரான கொடூரமான தண்டனைகள் அவர்கள் மத்தியில் உள ரீதியாகவும் உடலியல் ரீதியாகவும் பாதிப்புகளை ஏற்படுத்துவதுடன், இப்பாதிப்புக்கள் அவர்களது இளமைப் பருவத்திலும் அதிகளவு தாக்கம் செலுத்துவதாக ஆய்வு மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் கூச்சல், குழப்பங்களை விளைவிக்கும் வகையிலான தீய நடத்தைகள், பல்கலைக்கழகங்களில் இடம்பெறும் பகிடிவதைகள் போன்ற நடவடிக்கைகளுக்கும் காரணமாக அமைவதாக குறிப்பிடப்படுகின்றது.

இலங்கையில் உடலியல் ரீதியான தண்டனைகளை ஒழித்துக்கட்டுவதற்கான ஐந்து அம்ச முன்மொழிவும் 3,000 கையொப்பங்களைக்கொண்ட அறிக்கையொன்றும் சிறுவர் துன்புறுத்தல்களுக்கு எதிரான அமைப்பின் திருமதி. ஒடாரா குணவர்தனவினால் ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டது.

இந்த நிகழ்வில் அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ, சிறுவர் துன்புறுத்தல்களுக்கு எதிரான அமைப்பின் தலைவர் வைத்தியர் துஷ் விக்ரமநாயக்க, வைத்தியர் தாரா டி மெல் ஆகியோர் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

இறக்காமம் ரோயல் கல்லூரியில் சிறுவர் தின நிகழ்வு

(படங்கள்)

01.10.2018

ஒக்டோபர் முதலாம் திகதி
சர்வதேச சிறுவர் தினம் நாடு முழுவதிலுமுள்ள பாடசாலைகளில்
கொண்டாடப்பட்டு வருகின்றன 

இதேவேளை இறக்காமம் ரோயல் கல்லூரியில் சிறுவர் தின நிகழ்வும் ஊர்வலமும் இன்று 01
இக் கல்லூரியின் அதிபர்
ஐனுல் றிபாயா நசீர் அவர்களின் தலைமையில் நடை பெருகின்றது இந் நிகழ்வில் கலந்துகொண்ட இறக்காாமம் கோட்டக்கல்வி அதிகாரி யூ.எல். மஃமுது லெவ்வை அதிதியாக கலந்துகொண்டு இந்நிகழ்வை சிறப்பித்ததோடு ஏனைைய அரச அதிகாரிகளும் ஆசிரியர்களும் கலந்து கொண்டு   மிக விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகின்றது.

இத்தினத்தில் சிறுவர்களின் உரிமை,பாதுகாப்பு, நலன்கள் பற்றி பேரூரைகளும், நடைபவணிகளும். நிகழ்ச்சிகளும் விழிப்புணர்வுகளும் நாடுபூராகவும் ஏற்பாடு செய்யப்பட்டு கொண்டாடப்பட்டு வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது

சிறுவர்களினது பாதுகாப்பு தொடர்பில் ஜனாதிபதியின் கருத்து..


01.10.2018

சகல சிறுவர்களினதும் பாதுகாப்பான வாழ்க்கைக்கு மேலும் அர்ப்பணிப்புடன் செயற்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இதனை தெரிவித்துள்ளார்.

இன்று சிறுவர் தினத்தினை முன்னிட்டு ஜனாதிபதி அறிக்கை ஒன்றை வெளியிட்டு இதனை தெரிவித்துள்ளார்.


பிரபல நடிகர் திடீர் என காலமானார்...!!

01.10.2018

பிரபல பாடகரும் நடிகருமான றோனி லீச் திடீர் என காலமானார்.

தனது 65 வது வயதில் குறித்த பிரபல நடிகர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாரடைப்பு காரணமாக அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Hiru

பொருளாதார நெருக்கடி அடுத்த வருடமும் தொடரும்


01.10.2018 

உலக பொருளாதார நெருக்கடி யுத்தம் போன்றதென தெரிவித்துள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, அடுத்த வருடமும் நெருக்கடிகள் தொடரும் என்றார்.

புத்தளம் - வனாதவில்லுவ , பொலிஸ் நிலைய நிலைய நிர்வாக கட்டட தொகுதியை திறந்துவைத்து ​உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் கருத்துரைத்த அவர், வெளிநாட்டு வருவாயை நாட்டுக்குள் தக்கவைத்துக்கொள்ளும் நோக்கத்திலேயே அத்தியாவசியமற்ற பொருட்களின் இறக்குமதியை குறைக்க நிதி அமைச்சுக்கு பணிப்புரை விடுக்கபட்டுள்ளதெனவும் தெரிவித்தார்.

இந்தியா இந்த நடைமுறையை சாதகமாக கையாள ஆரம்பித்துள்ளது. எனவே, நிதி அமைச்சர் மங்கள சமரவீரவிடம்  அத்தியாவசியமற்ற பொருட்களின் இருக்குமதியை குறைக்க அல்லது இரத்துச் நடவடிக்கை எடுக்குமாறு அறிவிரை வழங்கியுள்ளேன் எனவும் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், உலக பொருளாதார நெருக்கடி இவ்வருடத்துடன் நிறைவடையபோவதில்லை அடுத்த வருடமும் நீடிக்கும், “யுத்தம் போன்றது” தொடர்ச்சியாக முகம்கொடுக்க வேண்டியிருக்கும் என்றார்.

இறக்காமம் அஷ்றபியன்ஸ் கிரிக்கெட் சுற்றுப் போட்டி 2018

படங்கள்

30.09.2018

இறக்காமம் அஷ்றபியன் இளைஞர் அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட கிரிக்கெட் சுற்றுப்போட்டி சுமார் 27 அணிகளை கொண்ட இந்த கிரிக்கெட் சுற்றுப்போட்டி சுமார் மூன்று வாரம் கடந்த நிலையில்  இன்று 30 இறுதி சுற்றுப்போட்டிக்கு நான்கு அணிகள் தெரிவு செய்யப்பட்டன.

அந்த வகையில் இரண்டு கிண்ணங்கள் வழங்குவதற்கான குறித்த கிரிக்கெட் சுற்றுப்போட்டியில் நான்கு அணிகளுக்கும் இடையிலான போட்டியின் முடிவில் முதலாவது அணியில் தண்ட போய்ஸ்
1999 O/L அணி வெற்றி பெற்றது.

இதே நேரம் ஏனைய அணியான M.C.பிளாஸ்டர் 1994 O/L அணி வெற்றி பெற்றது வெற்றி பெற்ற அணிகளுக்கு இறக்காமம் மத்திய கல்லூரி அதிபர் ஏ.எச்.ஜெஸீம் அதிபர் அவர்களினால் வெற்றிக்கான கேடயம்  வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது


குடிநீர் போத்தலுக்கான விலைகள்

குடிநீர் போத்தலுக்கான விலைகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.

நுகர்வோர் அதிகார சபையினால் இது குறித்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கமைய, 350 மில்லி லீற்றர் முதல் 499 மில்லி லீற்றர் கொள்ளளவுகொண்ட குடிநீர் போத்தல் ஒன்றின் விலை 26 ரூபாவாக நிரணயம் செய்யப்பட்டுள்ளது.

500 மில்லி லீற்றர் முதல் 749 மில்லி லீற்றர் கொள்ளளவு கொண்ட குடிநீர் போத்தலுக்கான விலை 35 ரூபாவாகவும், 750 மில்லி லீற்றர் முதல் 999 மில்லி லீற்றர் கொள்ளளவுகொண்ட குடிநீர் போத்தலுக்கான விலை 40 ரூபாவாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், ஒரு லீற்றர் முதல் 1.49 லீற்றர் கொள்ளளவு கொண்ட குடிநீர் போத்தலின் விலை 50 ரூபாவாகவும், 1.5 லீற்றர் முதல் 4.99 லீற்றர் கொள்ளளவு கொண்ட குடிநீர் போத்தல் ஒன்றின் விலை 70 ரூபாவாகவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

5 லீற்றர் முதல் 6.99 லீற்றர் கொள்ளளவுகொண்ட குடிநீர் போத்தலின் விலை 150 ரூபாவாகவும், 7 லீற்றர் கொள்ளளவுகொண்ட போத்தலின் விலை 170 ரூபாவாகவும் நுகர்வோர் அதிகார சபையினால் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.