Thursday, September 20, 2018

திகன சம்பவம் தொடர்பில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு சட்டமா அதிபர் திணைக்களத்துக்கு உத்தரவு


September 20, 2018

திகன வன்முறை சம்பவம் தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் தொடர்பில் அறிக்கையொன்றை சமர்ப்பிக்குமாறு சட்டமா அதிபர் திணைக்களத்துக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் மீதான முதலாவது விசாரணை நேற்று உச்ச நீதிமன்றத்தில் இடம்பெற்றது. இதன்போதே இந்த உத்தரவு பிறப்பிக்கட்டது.

பொலிஸாரின் செயலற்ற தன்மை தொடர்பில் குறித்த மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டதாக விசாரணையின் போது மனு தாரர் சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி பாயிஸ் முஸ்தபா நீதிமன்றத்தின் கவனத்துக்கு கொண்டுவந்தார். இதனை அடுத்து, இதுவரை பொலிஸார் உரிய நபர்களை கைதுசெய்து விளக்கமாரியலில் வைத்துள்ளதாகவும், அவர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதவும் இதன்போது சட்டமா அதிபர் திணைக்களம்சார்பில் நீதிமன்றத்துக்கு கருத்து முன்வைக்கப்பட்டது.

எனினும் மனுதாரர் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள், பொலிஸாரின் குறித்த நடவடிக்கைகள் திருப்தியில்லை எனவும் கைது செய்யப்படவேண்டியவர்கள் இன்னும் இருக்கிறார்கள் எனவும் நீதிமன்றத்துக்கு சுட்டிக்காட்டினர். இதனை தொடர்ந்து குறித்த சம்பவம் தொடர்பான எடுக்கப்பட்ட நாவடிக்கை தொடர்பில் எதிர்வரும் நவம்பர் மாதம் 21ம் திகதிக்கு முன்னர் நீதிமன்றத்துக்கு அறிக்கை சமர்ப்பிக்குமாறு உச்சநீதிமன்றம் சட்டமா அதிபர் திணைக்களத்துக்கு பணிப்புரை விடுத்தது. இதனை அடுத்து குறித்த வழக்கு எதிர்வரும் டிசம்பர் மாதம் 5ம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

திகன வன்முறை சம்பவத்தின் போது ஈடுபடுத்தப்பட்ட பொலிஸார் அவர்களின் பொறுப்பை உரிய முறையில் மேற்கொள்ளவில்லை என்ற அடிப்படியில் குறித்த 27 அடிப்படை உரிமை மீறல் மனுக்களும் தாக்கல் செய்யப்பட்டதாக சட்டத்தரணி பாரிஸ் சாலி மற்றும் ரஸ்மரா ஆப்தீன் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

– நுஸ்கி முக்தார் –

0 comments:

Post a Comment