Saturday, September 29, 2018

பிறப்புச் சான்றிதழில் சிங்களம், தமிழ், முஸ்லிம் என இன ரீதியாக குறிப்பிடுவதை தவிர்த்து இலங்கையர் என குறிப்பிட யோசனை.

  September 29, 2018

பிறப்புச் சான்றிதழில் சிங்களம், தமிழ், முஸ்லிம் என இன ரீதியாக அடையாளப்படுத்துவதை
மாற்றம் செய்து இலங்கையர்கள் என அடையாளப்படுத்தும் நடைமுறையை எதிர்காலத்தில் ஆரம்பிக்க வேண்டும் என உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் வஜிர அபேவரத்தன யோசனை முன்வைத்துள்ளார்.

யாழ்ப்பாணம் சாவகச்சேரியில் நேற்று இடம்பெற்ற ஜனாதிபதியின் மக்கள் சேவை நிகழ்வில் ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இந்தப் புதிய யோசனையை முன்வைத்துள்ளார்.

சிங்களம், தமிழ், முஸ்லிம்கள் என பிரிந்திருப்பதை தவிர்த்து, மனிதர்கள் என்ற அடிப்படையில் அனைவரும் செயற்பட்டால் இலங்கையை ஒன்றிணைக்க முடியும்.

இந்த நிலையில், பிறப்புச் சான்றிதழ் வழங்குவது தமது அமைச்சின் செயற்பாடாகும்.

இந்த நிலையில், இயலுமானால், பிறப்புச் சான்றிதழில் சிங்களம், தமிழ், முஸ்லிம் என்று இன ரீதியாக அடையாளப்படுத்துவதை தவிர்த்து, இலங்கையர் என எதிர்காலத்தில் அடையாளப்படுத்த வேண்டும் என உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.

இதேநேரம், ஐனாதிபதியின் மக்கள் சேவை உத்தியோக பூர்வ பணி யாழ்ப்பாணம் சங்கானையில் இன்று நடைபெறவுள்ளது.

0 comments:

Post a Comment