Monday, December 31, 2018

புது வருட ஆரம்பத்தில் காவல்துறைமா அதிபரின் அதிரடி பணிப்புரை

01.01.2019

சட்டவிரோத துப்பாக்கிகளை மீட்பதற்காக நாடெங்கிலும் 3 மாதங்களுக்கு விசேட சோதனை நடவடிக்கைகளை காவல்துறையினர் ஆரம்பித்துள்ளனர்.

காவல்துறைமா அதிபரின் பணிப்புரைக்கு அமைய இந்த சோதனை நடவடிக்கை ஆரம்பமாகியுள்ளது.

இந்த விசேட சோதனை நடவடிக்கைகள் இன்று முதல் மூன்று மாதகங்களுக்கு அமுல்படுத்தப்படவுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது

புத்தாண்டில் கிளிநொச்சியில் நடந்துள்ள சோகம் -

01.01.2019

வடக்கு தொடரூந்து பாதையில் கிளிநொச்சி – முறிகண்டி பிரதேசத்தில் பல கால்நடைகள் தொடரூந்தில் மோதி உயிரிழந்துள்ளன.

நேற்று இரவு கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த தொடரூந்தில் மோதி இவ்வாறு 27 கால்நடைகள் உயிரிழந்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக பல விலங்குகள் அப்பகுதியில் உள்ள வீதிகள் மற்றும் தொடரூந்து பாதையில் உலாவி வருவதாக பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றன.

இவ்வாறு உலாவி கொண்டிருந்த கால்நடைகளே தொடரூந்தில் மோதுண்டுள்ளதாக எமது செய்தியாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

திருமணத்துக்கு முன்னரே கர்ப்பம்… கொன்று தூக்கில் தொங்கவிட்ட கணவன்! அதிர்ச்சி பின்னணி

01.01, 2019
   
இந்தியாவில் இளம் மனைவியை கொலை செய்து தூக்கில் தொங்கவிட்ட கணவரின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்தவர் தீபிகா (22). இவரும் சவுரவ் என்பவரும் காதலித்து வந்த நிலையில் தீபிகா கர்ப்பமானார்.

இந்நிலையில் இருவரும் பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர். திருமணத்துக்கு பின்னர் சவுரவ் தன்னுடைய கோரமுகத்தை காட்ட தொடங்கினார்.

மனைவி தீபிகாவை வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்த தொடங்கினார் சவுரவ். இதையடுத்து தனது வீட்டாரிடம் சொல்லி வரதட்சணையாக பணம் கொடுத்தார் தீபிகா.

ஆனாலும் திருமணத்தின் போது தருவதாக சொன்ன நாற்காலியை தரவில்லை என மீண்டும் தீபிகாவை அடித்துள்ளார் சவுரவ்.

இந்நிலையில் இரு தினங்களுக்கு முன்னர் தீபிகா குடும்பத்தாருக்கு போன் செய்த சவுரவ், தீபிகா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறினார்.

இதை கேட்டு அதிர்ச்சியடைந்த குடும்பத்தார் பதறியடித்து சம்பவ இடத்துக்கு சென்றனர். அங்கு தீபிகா சடலமாக தூக்கில் தொங்கிய நிலையில் பொலிசாருக்கு தகவல் கொடுத்தனர்.

சம்பவ இடத்துக்கு வந்த பொலிசார் தீபிகா சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர்.

இதனிடையில் தீபிகாவை, சவுரவும் அவர் குடும்பத்தாரும் கொன்றுவிட்டதாக தீபிகா குடும்பத்தார் புகார் கூறினர். பிரேத பரிசோதனை அறிக்கையிலும் தீபிகா உடலில் காயம் இருப்பது தெரிந்தது.

இதையடுத்து சவுரவிடம் பொலிசார் நடத்திய விசாரணையில், மனைவியை கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டு, தூக்கில் தொங்கவிட்டு தற்கொலை நாடகம் ஆடியதை அவர் ஒப்பு கொண்டார்.

இதன் பின்னர் பொலிசார் சவுரவை கைது செய்தனர். தலைமறைவாக உள்ள அவர் குடும்பத்தார் இருவரை தேடி வருகிறார்கள்.

மஹிந்த ராஜபக்சவுக்கு சீன தூதரிடமிருந்து புது வருட 'வாழ்த்து'!


  01.01.2019

மஹிந்த ராஜபக்சவை நேரில் சென்று சந்தித்த இலங்கைக்கான சீன தூதர் செங் யுவன் அவருக்கு விசேட புது வருட வாழ்த்தினை தெரிவித்துள்ளார்.

மஹிந்த ஆட்சியின் போது இலங்கையில் பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களை கையகப்படுத்திக் கொண்ட சீனா, தொடர்ந்தும் அவரோடு நல்லுறவைப் பேணி வருகிறது. கொழும்பு துறைமுக நகரத்தினை சீனாவிடமிருந்து மீளப் பெறப் போவதாக தெரிவித்த ரணில் தரப்பும் பின்னர் அதனை அப்படியே சீன பொறுப்பில் விட்டிருந்தமை நினைவூட்டத்தக்கது.

உலகின் பல அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளை கடன் மூலமாக சீனா கட்டுப்படுத்தி வருவதாக மேற்கு நாடுகள் குற்றஞ்சாட்டி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

தெஹிவளையில் சிக்கிய 330 கோடி ரூபா பெறுமதியான போதைப் பொருள்!

01.01.2019

இலங்கை வரலாற்றிலேயே அதிகளவு பெறுமதியான ஹெரோயின் போதைப் பொருள் நேற்று தெஹிவளையில் கைப்பற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளது ஸ்ரீலங்கா பொலிஸ்.

333.6 கோடி ரூபா பெறுமதியான ஹெரோயினுடன் குறித்த பகுதி வீடொன்றிலிருந்து இரு பங்களதேஷ் பிரஜைகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், இதுவே ஒரே நேரத்தில் கைப்பற்றப்பட்ட பாரிய தொகை போதைப்பொருள் என பொலிஸ் பேச்சாளர் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

2019ஆம் ஆண்டை முதன் முதலாக கோலகலமாக வரவேற்றது எந்த நாடு தெரியுமா? கண்கவரும் கொண்டாட்டங்கள்


31.12.2018

நியூசிலாந்து நாட்டு மக்கள் உலகில் முதன்முதலாக ஆட்டம், பாட்டம், வாணவேடிக்கை என கோலாகலமாக '2019' புத்தாண்டை வரவேற்று இன்று கொண்டாடி மகிழ்ந்தனர்.

பூமிப் பந்தின் கிழக்கு திசையின் கடைக்கோடியில் ஆஸ்திரலேசியா, ஓசியானியா கண்டத்தில் பசிபிக் பெருங்கடல் பகுதியில் அமைந்துள்ள நியூசிலாந்து நாடு உலகில் முதன்முதலாக சூரியன் உதிக்கும் முதல் நாடாக உள்ளது. இந்தியாவுக்கும் நியூசிலாந்துக்கும் இடையில் உள்ள நேர வித்தியாசம் நம்மைவிட ஏழரை மணிநேரம் கூடுதலாகும்.

இந்நிலையில், (இந்திய நேரப்படி இன்று மாலை 4.30 மணியளவில்) நியூசிலாந்தில் நள்ளிரவு 12 மணி ஆனவுடன் அந்நாட்டு மக்கள் ஆட்டம், பாட்டம், வானவேடிக்கை என கோலாகலமாக புத்தாண்டை வரவேற்று மகிழ்ந்தனர். கண்ணை கவரும் வகையில் நடைபெற்ற வானவேடிக்கை நிகழ்ச்சிகள் காண்போரை பரவசத்தில் ஆழ்த்தியது.

நியூசிலாந்துக்கு அடுத்தபடியாக (இந்திய நேரப்படி இன்றிரவு சுமார் 8.30 மணியளவில்) ஜப்பான் நாட்டு மக்கள் உலகிலேயே இரண்டாவதாக புத்தாண்டை கொண்டாடி மகிழ்வார்கள். அதன் பின்னர் சுமார் மூன்றரை மணி நேரத்துக்கு பிறகு நமது நாட்டில் இன்று நள்ளிரவு 12 மணிக்கு புத்தாண்டு பிறக்கவுள்ளது.

2019இல் என்ன நடக்கும்!! மைத்திரியின் அதிரடி அறிவிப்பு..


31.12.2018

எதிர்வரும் ஆண்டில் தான் ஒரு முக்கியமான பிரகடனத்தை செய்யவிருப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அறைகூவல் விடுத்துள்ளார்.

இதன்படி எதிர்வரும் ஆண்டில் ஊழல் அற்ற ஒரு நாட்டை கடியெழுப்புவதற்கே இந்த அறைகூவல் விடுக்கப்படுவதாக அவர் தெரிவித்தார்.

ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன இன்று முற்பகல் கண்டி தலாதா மாளிகைக்கு சென்று வழிபாடுகளில் ஈடுபட்டு பிறக்கவிருக்கும் புத்தாண்டுக்கான ஆசீர்வாதங்களைப் பெற்றுக்கொண்டதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தகவல் கூறுகின்றது.

அதனைத் தொடர்ந்து மல்வத்தை விகாரைக்குச் சென்ற ஜனாதிபதி, மல்வத்தை மகா நாயக்க தேரர் சங்கைக்குரிய திப்பட்டுவாவே ஸ்ரீ சுமங்கல மகா நாயக்க தேரரை சந்தித்து அவரது சுகதுக்கங்களை கேட்டறிந்ததாகவும் மேற்படி ஊடகப் பிரிவு கூறியுள்ளது.

இதன்போது தேரரால் பிரித் பாராயணம் செய்யப்பட்டு பிறக்கும் புத்தாண்டுக்காக ஜனாதிபதிக்கு ஆசீர்வாதம் அளிக்கப்பட்டது.

அஸ்கிரி மகாநாயக்க தேரர் வெளிநாடு சென்றிருப்பதால் அஸ்கிரி கெடிகே மகா விகாரைக்குச் சென்ற ஜனாதிபதி, அஸ்கிரி அனுநாயக்க தேரர் சங்கைக்குரிய வெண்டருவே உபாலி அனுநாயக்க தேரரை சந்தித்து உரையாடினார். இதன்போதும் தேரர் பிரித் பாராயணம் செய்து ஜனாதிபதியை ஆசீர்வதித்தார்.

அஸ்கிரிய கெடிகே விகாரையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டு வரும் அன்னதான மண்டபம் மற்றும் தொல்பொருள் நிலையத்தின் நிர்மாணப் பணிகளையும் ஜனாதிபதி பார்வையிட்டார். அங்கு வருகை தந்திருந்த ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவித்த ஜனாதிபதி, 2019ஆம் ஆண்டை ஊழல் அற்ற ஆண்டாக பிரகடனப்படுத்த உள்ளதாகத் தெரிவித்தார்.

தனது மனசாட்சிக்கு ஏற்ப நேர்மையாக செயற்பட்டு நாட்டை கட்டியெழுப்பும் சவாலை வெற்றிகொள்வதற்கு அனைவரும் ஒன்றுபட வேண்டுமென்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

நோய்வாய்ப்பட்டு கண்டி பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவரும் ராமாஞ்ய மகா நிக்காயவின் மகா நாயக்க தேரர் சங்கைக்குரிய நாபான பேமசிறி நாயக்க தேரரை சந்தித்த ஜனாதிபதி, அவரது சுகதுக்கங்களை கேட்டறிந்ததுடன், அவர் விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்தார்.

மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்க, முன்னாள் அமைச்சர் எஸ்.பி.திசாநாயக்க ஆகியோரும் ஜனாதிபதியுடன் இவ்விஜயத்தில் இணைந்துகொண்டனர்.

புத்தரின் சிலைகளை பொருத்தமான, இடங்களில் மாத்திரமே வைக்க வேண்டும்" - கலகம தம்மரங்சி தேரர்

"

, December 31, 2018 

புத்தரின் சிலைகளை பொருத்தமான இடங்களில் மாத்திரமே வைக்கவேண்டும். கண்ட இடங்களில் வைப்பது புத்த பெருமானுக்கு செய்யும் அகௌரவமாகும். அத்துடன் மாவனெல்லை சம்பவத்துக்கு பின்னணியில் குறுகிய அரசியல் நோக்கம் கொண்டவர்கள் இருக்கலாம். அதனால் சிங்கள முஸ்லிம் மக்கள் முரண்பட்டுக்கொள்ளாமல் சிந்தித்து செயற்படவேண்டும் என கலகம தம்மரங்சி தேரர் தெரிவித்தார்.

சோசலிச மக்கள் முன்னணி இன்று -31- கொழும்பில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து கூறுகையில்,

திகன சம்பவத்தின் பின்னணியில் அரசியல் வாதிகளே இருந்துள்ளதாக நாமல் குமாரவின் வாக்கு மூலங்கள் மூலம் தெரியவந்துள்ளன. அதேபோன்று மாவனெல்லை சம்பவமும் இருந்திருக்கலாம். நாட்டில் இனவாத சம்பவங்களை அரங்கேற்றி அதனை கூட்டு எதிரணி மீது குற்றம் சுமத்தும் நடவடிக்கையே கடந்த காலங்களில் இடம்பெற்றன.

தற்போதும் அரசியல் பின்னணியாக இதனை மேற்கொண்டு எதிர்க்கட்சியினரை இனவாதிகள்போல் காட்டவே சிலர் இதனை செய்திருக்கலாம். அதனால் சிங்கள முஸ்லிம் மக்கள் இவ்வாறான சம்பவங்கள் மூலம் ஆத்திரம் கொள்ளாமல் நிதானமாக செயற்படவேண்டும் என்றார்.

நன்றி
(எம்.ஆர்.எம்.வஸீம்)

:

கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் வேண்டுகோள்…!


DECEMBER 31, 2018

கிழக்கு மாகாணத்திலுள்ள சகல பாடசாலைகளும் தங்கள் இல்ல விளையாட்டுப் போட்டிகளை, எதிர்வரும் ஜனவரி 31ஆம் திகதிக்கு முன்னர் நடத்தி முடிக்க வேண்டுமென, கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் எம்.கே.எம். மன்சூர் தெரிவித்தார்.

இது தொடர்பான சுற்றுநிரூபம் மாகாணத்திலுள்ள சகல வலயக் கல்வி பணிப்பாளர்களுக்கும் அனுப்பி வைத்துள்ளதாகவும், அவர் தெரிவித்தார்.

அச் சுற்றுநிரூபத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

இல்ல விளையாட்டுப் போட்டிகள், பயிற்சிகள் போன்றவற்றை பாடசாலை நேரத்தில் நடத்துவதைத் தவிர்த்துக்கொள்ள வேண்டும். போட்டிக்கான தெரிவுகளை, பாடசாலை நேரத்தில் நடத்த வேண்டுமாகவிருந்தால் குறிப்பிட்ட தினங்களில் பாடவேளைகளை 30 நிமிடங்களாகக் குறைத்து, தெரிவுகளுக்கு மிகுதி நேரத்தைப் பயன்படுத்தலாம்.

வலயமட்டப் போட்டிகள் யாவும் மார்ச் மாதம் 31ஆம் திகதிக்கு முன்னர் நடத்தி முடிக்கப்படல் வேண்டுமெனவும், மாகாண மட்டப்போட்டிகள், ஜுன் மாதம் 10ஆம் திகதிக்கு முன்னர் நடத்தி முடிக்கப்படல் வேண்டுமெனவும், அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், நேரடியாக தேசியமட்டத்தில் நடைபெறும் போட்டிகளுக்கான விண்ணப்பங்களை மார்ச் 31ஆம் திகதிக்கு முன்னரும், மாகாண மட்டப்போட்டிக்கான விண்ணப்பங்களை, ஜனவரி 31ஆம் திகதிக்கு முன்னரும் அனுப்பி வைக்கப்படல் வேண்டும்.

வலயமட்டத்தில் நடத்தப்பட்டு, மாகாணமட்டத்தில் நடத்தப்படும் ஏனைய குழுப்போட்டிகள், மெய்வல்லுநர் போட்டிகளுக்கான விண்ணப்பங்களை, ஏப்ரல் 15ஆம் திகதிக்கு முன்னர் அனுப்பி வைக்கப்படல் வேண்டும் எனவும், அச் சுற்றுநிரூபத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆளுனர்களை விலகக் கோரும் மைத்ரி; ரோஹித மறுப்பு!


31.12.2018

விடுமுறையிலிருந்து நாடு திரும்பிய கையோடு மாகாண ஆளுனர்கள் பலரை பதவி விலகுமாறு ஜனாதிபதி 'கோரிக்கை' விடுத்துள்ளார்.

மீண்டும் அவர்களுக்கான நியமனம் வழங்கப்படும் எனும் நம்பிக்கையில் வடமாகாண ஆளுனர் ரெஜினோல்ட் குரே உட்பட சிலர் தமது இராஜினாமா கடிதங்களை அனுப்பி வைத்துள்ளதாக (இதுவரை) தகவல் அறியமுடிகிறது.

எனினும், கிழக்கு மாகாண ஆளுனர் ரோஹித போகொல்லாகம இது பற்றி தனக்குத் தெரியாது எனவும் தனக்கு அவ்வாறான அறிவுறுத்தல் எதுவும் வரவில்லையெனவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மத்திய கிழக்கு நாடுகளுக்கான கடவுச்சீட்டு விநியோகம் இன்றுடன் நிறைவு

December 31, 2018

அடுத்த ஆண்டு முதல் இலத்திரனியல் முறை மூலம் வெளிநாட்டு கடவுச்சீட்டுக்களை விநியோகிப்பதற்கு குடிவரவு குடியகல்வு திணைக்களம் திட்டமிட்டுள்ளது.
அதன்படி அனைத்து நாடுகளுக்குமாக ஒரேயொரு கடவுச்சீட்டு அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

இதற்கமைவாக மத்திய கிழக்கு நாடுகளுக்கு என இதுவரை காலமும் விநியோகிக்கப்பட்டு வந்த கடவுச்சீட்டு முறை இன்றுடன் நிறுத்தப்படும் என திணைக்களம் தெரிவித்துள்ளது.
நாளை முதல் அனைத்து நாடுகளுக்குமான கடவுச்சீட்டுக்கள் மாத்திரமே வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மதுபோதையில் வாகனம் செலுத்திய 5000 சாரதிகள் கைது

December 31, 2018

கடந்த 13 நாள்களுக்குள் மதுபோதையில் வாகனம் செலுதிய குற்றச்சாட்டின் கீழ் 5000 சாரதிகள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக போக்குவரத்து பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

போதையில் வாகனம் செலுத்துவோரை கைதுசெய்யும் நடவடிக்கை, இன்றிரவு நாடளாவிய ரீதியில் விஸ்தரிக்கப்படும் என்றும் பொலிஸார் தெரிவித்ததுள்ளனர்.
இதேவேளை, மதுபோதையில் வாகனங்களைச் ​செலுத்தினர் என்ற குற்றச்சாட்டின் கீழ், இவ்வருடத்தில்15,000 சாரதிகள் கைதுசெய்யப்பட்டுள்ளனர் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வருடத்தின் முதல் 10 மாதங்களில் மட்டும், மதுபோதையில் வாகனங்களை செலுத்தினர் என்றக் குற்றச்சாட்டின் கீழ் கைதுசெய்யப்பட்ட நபர்களிடமிருந்து அறவிடப்பட்ட தண்டப் பணத்தின் மொத்தப் பெறுமதி 2,700 மில்லியன் ரூபாயாகும் எண்வயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அனைத்து ஆளுநர்களையும் பதவி விலக உத்தரவு!

31.12.2018

அனைத்து மாகாண சபை­க­ளி­னதும் ஆளு­நர்­க­ளையும் இன்­றைய தினத்­துக்குள்  இரா­ஜி­னாமா  செய்­யு­மாறு  ஜனா­தி­பதி  மைத்­தி­ரி­பால சிறி­சேன அறிவுறுத்தியுள்ளார் என்று கூறப்படுகிறது.

ஏற்­க­னவே கிழக்கு, சப்­ர­க­முவ, வட­மத்­திய, வடக்கு,  வடமேல் மத்­திய  மாகாண சபைகள் கலைந்­துள்­ளன. ஊவா , மேல்  மற்றும் தென் மாகா­ணங்கள் கலைக்­கப்­ப­ட­வுள்­ளன.

இந்த நிலை­யி­லேயே   அனைத்து மாகாண சபை­க­ளி­னதும் ஆளு­நர்­களை இன்று  31 ஆம் திக­திக்குள் இரா­ஜி­னாமா செய்­யு­மாறு ஜனா­தி­பதி  பணித்­துள்­ள­தாக தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.  .

  

Sunday, December 30, 2018

உயர் தர பெறுபேறு மீள் பரிசீலனை ஜனவரி 16 ஆம் திகதியுடன் நிறைவு

December 31, 2018

க.பொ.த. உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளை மீள் பரிசீலனை செய்வதற்கான கால எல்லை எதிர்வரும் ஜனவரி மாதம் 16 ஆம் திகதியுடன் நிறைவடைவதாக  பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

இதற்கான விண்ணப்பம் அரச பத்திரிகைகளில் வெளியிடப்படுமென்றும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் பி.சனத் பூஜித்த தெரிவித்துள்ளார்.

இலங்கை பரீட்சை திணைக்களத்தின் இணையத்தளத்திலும் குறித்த விண்ணப்பப்படிவத்தை தரவிறக்கம் செய்து கொள்ள முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.  

நாடு திரும்பினார் ஜனாதிபதி

December 31, 2018

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தாய்லாந்துக்கான தனது தனிப்பட்ட விஜயத்தை முடித்துக் கொண்டு நேற்று (30) இரவு 11.00 மணிக்கு நாட்டை வந்தடைந்துள்ளார்.

ஸ்ரீ லங்கன் விமான சேவையின் யு.எல். 407 என்ற இலக்க விமானத்தில் இவர் இலங்கையை வந்தடைந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கடந்த24 ஆம் திகதி தாய்லாந்து சென்றிருந்தார்.

குடும்ப உறுப்பினர்களுடன் தாய்லாந்து சென்றிருந்த ஜனாதிபதி அந்நாட்டிலுள்ள சமய ஸ்தானங்கள் பலவற்றுக்கு விஜயங்களை மேற்கொண்டிருந்ததாகவும் கூறப்படுகின்றது.
ஓய்வுக்கான சுற்றுலாவாக இது அமைந்திருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

STAR PAY: நீங்கள் டயலொக் பாவனையாளரா? இத மிஸ் பண்ணிடாதீங்க! உடன் அதிகம் பகிருங்கள்.

December 30, 2018 

நீங்கள் டயலொக் பாவனையாளரா?
இம்மாதம் (31 December 2018 ) உங்கள் Star Points வீணாக காலாவதி ஆக விடாமல் இன்றே அதனை ரீலோடாக பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

உங்கள் மொபைலில் #141# என்று டயல் செய்து இலக்கம் 1 ஐ (total balance) தெரிவு செய்யுங்கள்.

இப்பொழுது உங்களுக்கு கிடைந்துள்ள மெத்த Star Points பெறுமதியை அறிய முடியும். இவ்வாறு கிடைத்த உங்கள் Star Points பெறுமதியில் இருந்து 100 ஐ கழியுங்கள். மீதியாக இருக்கும் தொகைதான் நீங்கள் பெறக்கூடிய பணப்பெறுமதி!

உதாரணமாக உங்கள் Star Points 187 எனில் (187-100= 87 ) நீங்கள் பெறக்கூடிய பணப்பெறுமதி 87 ரூபா. இதனை கிரெடிட் ஆக மாற்றுவதற்கு உங்கள் மொபைல் போனில் Star Pay என்று டைப் செய்து ஒரு இடைவெளி விட்டு கிடைத்த மீதி தொகையை டைப் செய்து 141 எனும் இலக்கத்திற்கு செண்ட் பண்ணவும்!

உதாரணம்: Star Pay 87 இதனை 141 எனும் இலக்கத்திற்கு செண்ட் பண்ணவும். இன்றே விரைந்து செயற்படுங்கள் .உங்கள் star points பெறுமதியை recharge பெறுமதியாக மாற்றிக் கொள்ளுங்கள்.

இதனை ஏனையோருக்கும் மறவாமல் Share பண்ணவும்

72 ஆண்டுகளுக்கு முன் பிரிந்த காதல் தம்பதி… முதல் மனைவியை பார்த்ததும் என்ன நடந்தது தெரியுமா?


December 30, 2018
   
1946 ஆம் ஆண்டு திருமண பந்தத்தில் இணைந்த தம்பதியினர் 8 மாதங்களில் பிரிந்துவிட்ட நிலையில் சுமார் 72 ஆண்டுகள் கழித்து சந்தித்துள்ளனர்.

96 வயதான நாராயண நம்பியார் இறுதியில் தனது 86 வயதான மனைவி சாரதாவை சந்தித்துள்ளார்.

திருமணமாகி ஒரு வருடம் கூட சந்தோஷமாக வாழாத இவர்கள் விதியின் வசத்தால் பிரிந்துசென்று தங்களுக்கென்று தனித்தனி வாழ்க்கையை அமைத்துக்கொண்டனர்.

விதியால் பிரிக்கப்பட்ட இவர்களை இவர்களது குடும்பத்தார் அனைவரும் ஒன்று சேர்ந்து சந்திக்கும் வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுத்துள்ளனர்.

1946 இல் நடந்தது என்ன?

1946 ஆம் ஆண்டு நம்பியாரும், சாரதாவும் காதல் திருமணம் செய்துகொண்டனர்.

அப்போது இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சி நடைபெற்று வந்த காலத்தில், நாராயணன் நம்பியார் மற்றும் அவரது தந்தை தாலியன் ராமன் நம்பியார் கும்பாம்பை விவசாயிகள் கலகத்தில் பங்கெடுத்துக் கொள்ள முடிவு செய்தனர்.

விவசாயிகள் எழுச்சியை தங்கள் சொந்த நிலத்தில் கட்டுப்படுத்தி, நிலப்பிரபுத்துவ தலைவர்களிடமிருந்து அதை கைப்பற்ற முடிவு செய்தனர். கும்பாயில், திட்டமிட்ட எழுச்சியானது நிலப்பிரபுத்துவ கொள்கைக்கு எதிராக இருந்தது, அவர்கள் கேரளாவின் கண்ணூர் பல பகுதிகளை கட்டுப்படுத்தினார்.

டிசம்பர் 30, 1946 அன்று மாலை நாராயணன் நம்பியார், தாலியன் ராமன் நம்பியார் மற்றும் 500 க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் வெள்ளிக்கிழமை காலை காரைத்தீடம் நாயனார் வீட்டுக்கு அருகே அணிவகுத்துச் சென்றனர்.

ஆனால், கேரளாவின் நிலப்பிரபுத்துவ ஆட்சியாளர்களின் நலன்களை பாதுகாப்பதற்காக பிரிட்டிஷ் காலனித்துவ ஆட்சியாளர்களால் பணிக்கப்பட்ட மலபார் சிறப்புப் பொலிஸ் (எம்.எஸ்.பி) உறுப்பினர்கள், அவர்களின் திட்டத்தை அகற்றினர்.

அதே நேரத்தில் இரவு முழுவதும் துப்பாக்கி சூடு நடத்தினர். துப்பாக்கிச் சண்டையில் ஐந்து எதிர்ப்பாளர்கள் கொல்லப்பட்டனர், அதே நேரத்தில் ஈ.கே நாராயணன் நம்பியார் மற்றும் அவரது தந்தை தப்பித்து சென்றனர்.

அவர்கள் பின்னர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர், அதன் பின் அவர்கள் கண்ணூர் மற்றும் சேலம் சிறைச்சாலையில் சிறையில் அடைக்கப்பட்டனர். துப்பாக்கிச் சூட்டில் நாராயணன் நம்பியார் 16 துப்பாக்கிச் குண்டுகளை அனுபவித்த போதிலும், அவர் உயிர்வாழ முடிந்தது.

ஆனால் அவரது தந்தை தலிஜன் ராமன் நம்பியார் வன்முறை எதிர்ப்புக்களில் ஈடுபட்டதாக சந்தேகத்தின் பேரில் சிறையில் சுட்டுக் கொல்லப்பட்டார்.

மேலும், டிசம்பர் 31 ஆம் திகதி சாரதாவின் வீட்டுக்கு சென்று அடித்து உதைத்து வன்முறைகள் நடத்தப்பட்டதால், சாரதா தனது தாய் வீட்டுக்கு அனுப்பப்பட்டார்.

8 வருடங்களுக்கு பிறகு 1954 ஆம் ஆண்டு சிறையில் இருந்து நம்பியார் விடுவிக்கப்பட்டார். சிறையில் இருந்து வெளியே வந்த அவர், தனது மனைவி இரண்டாவது திருமணம் செய்துகொண்டார் என்பதை அறிந்துகொண்டார்.

இதனால், மனைவியை தொந்தரவு செய்ய விரும்பாமல் அவர் தனக்கென ஒரு வாழ்க்கையை அமைத்துக்கொண்டார்.

மீண்டும் சந்திப்பு

Santha Kavumbayi என்ற எழுத்தாளர் நாராயண நம்பியாரின் வாழ்க்கையை ஒரு நாவலாக எழுதி வெளியிட்டார். இதன் மூலம் சாரதாவின் மகன் பார்கவன் எழுத்தாளர் மூலம் நாராயணனை சந்தித்து இரண்டு குடும்பங்கள் குறித்து பேசியுள்ளார்.

பிரிந்து சென்ற இவர்கள் மீண்டும் ஒருமுறை சந்தித்துக்கொள்ள வேண்டும் என பார்கவ் விரும்பியுள்ளார். அதன்பொருட்டு கேரளாவில் உள்ள தனது வீட்டில் சந்திப்பிற்கான ஏற்பாட்டினை செய்தார்.

வீட்டுக்கு வந்த நம்பியாருக்கு பல்வேறு வகையான கேரள உணவுகளை சமைத்து சாரதா குடும்பத்தார் பரிமாறியுள்ளனர். தனது மனைவியை பார்த்தவுடன் அவரது தலையில் கை வைத்துள்ளார் நம்பியார். தனது கணவரை சில நொடிகள் பார்த்துவிட்டு உடனே தலைகுனிந்துவிட்டார் சாரதா.

இரு குடும்ப உறுப்பினர்களும் சிறிது நேரம் உரையாடினர். பின்னர் நம்பியார் புறப்பட்டு செல்கையில், தனது மனைவியிடம் நான் செல்கிறேன் என கூறியுள்ளார், அதற்கு பதில் எதுவும் தெரிவிக்காத சாரதா தனது தலையை குனிந்தபடி அமர்ந்திருந்துள்ளார்.

தனது கணவரை முதலில் பார்த்தபோது 13 வயது பெண்போல சாரதா சிறிதுநேரம் வெட்கப்பட்டுள்ளார், அதே நேரம் நம்பியாரும் 18 வயதுக்கு திரும்பியதை போல உணர்ந்துள்ளார்

இப்படியும் ஒரு சம்பவமா?இறந்துபோன இந்தியர்: நாடு கடந்து வந்து சம்பள பாக்கியை கொடுத்து வியக்க வைத்த சவுதி தொழிலதிபர்


December 30, 2018
   
சவுதி அரேபியாவில் தொழிலதிபர் ஒருவர் தன்னிடம் வேலை பார்த்த தொழிலாளியின் சம்பள பாக்கியை வீடு தேடி கொடுத்து உதவியுள்ளது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சவுதி அரேபியாவில் உள்ள ஹெயில் என்ற சிறிய நகரத்தில் மிஸ்பர் அல் சமாரியின் தந்தை நிறுவனம் ஒன்றை நடத்தி வந்தார். வயது முதிர்வு காரணமாக மகனிடம் நிறுவனத்தை நடத்தும் பொறுப்பைக் கொடுத்தார்.

தந்தை நிறுவனத்தை நடத்திவந்தபோது, இந்திய இளைஞர் ஒருவர் அவரிடம் பணியாற்றியுள்ளார்.

இந்திய இளைஞர் அவசரமாகத் தாய்நாடு திரும்ப வேண்டி நிலை ஏற்பட்டது. அப்போது, மிஸ்பர் அல் சமாரியின் தந்தை 6,000 ரியால் (ரூ.1,12,000) இந்திய இளைஞருக்குச் சம்பள பாக்கி வைத்திருந்தார்.

நிறுவனத்தின் நிதிநிலை காரணமாக அந்த இளைஞர் இந்தியா திரும்பியபோது மிஸ்பர் அல் சமாரியின் தந்தையால் சம்பள பாக்கியை உடனடியாக வழங்க முடியவில்லை.

உன்னுடைய பணம் எந்த நேரத்திலும் உன்னை வந்து சேரும், நீ கவலைப்படாமல் செல் சென்று ஆறுதல் கூறி அனுப்பி வைத்துள்ளார்.

இந்தியா திரும்பிய இளைஞர் துரதிர்ஷ்டவசமாக விபத்தில் சிக்கி உயிரிழந்தார்.

இந்தத் தகவல் சவுதி தொழிலதிபருக்குத் தெரியவந்ததும் மனமுடைந்து போனார். உடனடியாக, தன் மகனை அழைத்து இளைஞருக்கு தான் வழங்க வேண்டிய சம்பளப் பாக்கியை எப்படியாவது கொடுத்து விடுமாறு கூறினார்.

தொடர்ந்து, மகன் மிஸ்பர் அல் சமாரி சவுதி தூதரகம் வழியாக இந்தியத் தூதரகத்தைத் தொடர்புகொண்டு இறந்துபோன இளைஞரின் விலாசத்தைக் கண்டுபிடித்தார். பின்னர், 6000 ரியாலுக்கான செக்குடன் இந்தியா வந்த அல் சமாரி இளைஞரின் குடும்பத்தினரிடம் செக்கை வழங்கினார்.

மகன் தன் கடைசி ஆசையை நிறைவேற்றியதைக் காண மிஸ்பர் அல் சமாரியின் தந்தை உயிருடன் இல்லை. மிஸ்பர் அல் சமாரி சவுதி திரும்புவதற்கு முன் வயது முதிர்வு காரணமாக அவரின் தந்தையும் இறந்தும் போனார்.