Tuesday, September 25, 2018

நிந்தவூரில் கிரிகெட் ஆடுகளம். காடையர்களால் சேதமாக்கப்பட்டது இது ஒரு வெறுக்கத்தக்க ஈனச்செயல்.


  September 25, 2018

தற்போது நிந்தவூர் அஷ்ரப் ஞாபகாத் பொது விளையாட்டு மைதானத்தில் மர்ஹும் எம்.எச்.எம்.அஷ்ரப்
அவர்களின் ஞாபகாத்தமாக நடைபெற்றுவரும் மென்பந்து மின்னொளி கிரிக்கெட் சுற்றுப் போட்டியின் மூன்றாவது நாளான (24 ) நேற்றைய ஆட்ட நிறைவின் பின் மைதானத்தில் யாரும் இல்லாத நேரத்தில் சில காடையர் கூட்டத்தால் மைதானத்தின் ஆடுகளம் சேதமாக்கப்பட்டுளது.

உண்மையில் இதுவொரு ஈனச் செயலாகவும் சமூகம் வெறுக்கத்தக்க செயலாகவும் உள்ளது. நிந்தவூரின் எதிர்கால இளைஞர்களின் விளையாட்டு செயற்திறனை மேன்படுத்துவதற்காக அமைக்கப்பட்ட இப்பொது மைதானத்தை கட்டிப் பாதுகாக்வேண்டிய பொறுப்பு நம் அனைவரையும் சாரும். ஆகவே இம்மைதானத்தின் ஆடுகளத்தை சேதப்படுத்திய கயவர்கள் யாராகயிருந்தாலும் சமூகத்தின் முன் அடையாளப்படுத்தி பாராபச்சமின்றி தகுந்த நடவடிக்கை எடுக்கப்பவேண்டும்.

இச்செயலை செய்தவர்கள் யாரென்பதை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க நிந்தவூர் விளையாட்டுக் கழக சம்மேளனங்கள் ஒன்றிணைந்து செயற்பட உறிதியாயுள்ளது.

நன்றி

முஹம்மட் ஜெலீல்,
நிந்தவூர்.

0 comments:

Post a Comment