Wednesday, September 19, 2018

கட்டுநாயக்க விமான நிலையத்தில் அறிமுகப்படுத்தப்படவுள்ள புதிய வசதி


September 20, 2018 

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் மின்சார வாயில் கட்டமைப்பை (e-Gates system) நடைமுறைப்படுத்துவதற்கு அமைச்சரவையின் அங்கீகாரம் கிடைத்துள்ளது.

தற்பொழுது குடிவரவு குடியகல்வு அதிகாரிகளினால் விமான நிலையத்தில் வழங்கப்படும் சேவைக்கு மாற்றாக மின்சார வாயில் கட்டமைப்பை (e-Gates system நடைமுறைப்படுத்துவதன் மூலம் விமான நிலையத்தில் வருகை மற்றும் வெளியேறும் செயற்பாடுகளை முறையாக முன்னெடுக்க முடியும் என்பது தெரியவந்துள்ளது.

இதற்கமைவாக 260 மில்லியன் ரூபா முதலீட்டுடன் 10 மின்சார வாயில் கட்டமைப்பை (e-Gates system) கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் அமைக்கப்படவுள்ளது.

இதற்காக போக்குவரத்து சிவில் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவும், உள்நாட்டு அலுவல்கள் மற்றும் வட மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் எஸ். பி. நாவின்னவும் கூட்டாக சமர்ப்பித்த ஆவணத்துக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

0 comments:

Post a Comment