Thursday, September 20, 2018

யாழ்ப்பாணத்தில் ஆவா குழுவை கட்டுப்படுத்த ராணுவத்தினர் எடுக்கவுள்ள அதிரடி நடவடிக்கை

21.09.2018

தம்மால் ஆவா குழுவை இரண்டு நாட்களுக்குள் அடக்க முடியுமென இராணுவம் தெரிவித்துள்ளது.யாழ்ப்பாண மாவட்டத்திற்கான இராணுவ தளபதி மேஜர் ஜெனரல் தர்சன ஹெட்டியாராச்சி இதனைத் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் சட்டம் ஒழுங்கை மதிக்கும் வகையிலேயே, தாம் பொறுமையாக இருப்பதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்

யாழ்ப்பாணம் – பலாலியில் அமைந்துள்ள, யாழ்ப்பாண மாவட்டத்திற்கான இராணுவ தலைமையகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்பொன்றின் போதே மேஜர் ஜெனரல் தர்சன ஹெட்டியாராச்சி இதனைக் குறிப்பிட்டார்.

இலங்கையில் தற்போது சட்டம் ஒழுங்கு அதிகாரம் பொலிஸாரிடம் உள்ளது.அதன் காரணமாகவே, அந்த அதிகாரத்தில் தாம் தலையிடுவதில்லை எனத் தெரிவித்த யாழ்ப்பாண மாவட்டத்திற்கான இராணுவ தளபதி யாழ்ப்பாணத்தில் உள்ள ஆவா குழு போன்ற கோஷ்டிகளை அடக்குவது தமக்கு பெரிய சவால் இல்லை எனவும் கூறியுள்ளார்.

பொலிஸாரால் அவர்களை அடக்க முடியாது என இராணுவத்தின் உதவியை கோரப்படுமிடத்து தாம் உதவத் தயாராக இருப்பதாகவும் மேஜர் ஜெனரல் தர்சன ஹெட்டியாராச்சி குறிப்பிட்டுள்ளார்.

தற்போதைய சூழ்நிலையில் வன்முறையில் ஈடுபடும் இளைஞர்களை இராணுவத்தினர் கைது செய்து பொலிஸாரிடம் ஒப்படைக்கும் பட்சத்தில், இராணுவம் தமிழ் இளைஞர்களை கைது செய்வதாக என இராணுவத்தின் மீது குற்றச்சாட்டுக்களை முன்வைக்கும் சூழ்நிலை காணப்படுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.தமது பொறுமைக்கு இதுவே காரணமென தெரிவித்த மேஜர் ஜெனரல் தர்சன ஹெட்டியாராச்சி,

எனினும் இந்த நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்கு ஜனாதிபதி தமக்கு அனுமதியளிப்பார் என, தாம் எதிர்பார்ப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

0 comments:

Post a Comment