Wednesday, September 26, 2018

அப்பத்தின் விலையும் அதிகரிப்பு

26.09.2018

அப்பம் ஒன்றின் விலையை 3 ரூபாவினால் அதிகரிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அகில இலங்கை சிற்றுண்டி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இதற்கமைய, தற்போது 12 ரூபாவாக விற்பனை செய்யப்படும் அப்பம் ஒன்றின் விலை 15 ரூபாவாக நாளை முதல் அதிகரிப்படுகிறது.

இதேநேரம், முட்டை அப்பத்தின் விலையில் எவ்வித அதிகரிப்பு மேற்கொள்ளப்படவில்லை என்றும் அந்த சங்கம் குறிப்பிட்டுள்ளது.

இதனிடையே, 12.5 கிலோகிராம் எடைகொண்ட சமையல் எரிவாயுவின் விலை இன்று நள்ளிரவு முதல் 195 ரூபாவினால் அதிகரிக்கப்படவுள்ளது.

சமையல் எரிவாயு நிறுவனங்களுக்கு இதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் அதிகார சபை தெரிவித்துள்ளது.

குறித்த நிறுவனங்கள் விடுத்த கோரிக்கைக்கு அமைய சமையல் எரிவாயுவின் விலையை அதிகரிக்க அமைச்சரவை அனுமதி வழங்கியமைக்கு அமைய, விலை நிர்ணயம் செய்யும் பொறுப்பு வாழ்க்கைச் செலவுகள் குழுவிற்கு வழங்கப்பட்டது.

இந்த நிலையில், சமையல் எரிவாயுவின் விலையை 195 ரூபாவினால் அதிகரிக்க வாழ்க்கைச் செலவுகள் குழு கடந்த தினம் தீர்மானித்திருந்தது.

இதற்கமைய, ஆயிரத்து 538 ரூபாவிற்க விற்பனையாகும் 12.5 கிலோ கிராம் எடைகொண்ட சமையல் எரிவாயுவின் விலை இன்று நள்ளிரவு முதல் ஆயிரத்து 733 ரூபாவாக அதிகரிக்கப்படவுள்ளது.

0 comments:

Post a Comment