Wednesday, September 26, 2018

2025 இல் இலங்கையை செல்வந்த நாடாக மாற்றியமைக்க முடியும்’

26.09.2018

முதலீட்டாளர்களுக்கு வழங்கப்படும் வட்டி வீதம் அதிகரிக்கப்பட்டிருப்பதால் வெளிநாடுகளில் முதலீடு செய்தவர்கள் பணத்தை மீண்டும் அமெரிக்காவிற்கு எடுத்து சென்றுள்ளதனால், டொலரின் பெறுமதி அதிகரித்துள்ளதாக நிதி அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்தார்.

அமெரிக்க டொலருக்கு நிகராக ரூபாவின் வீழ்ச்சி தொடர்பில் நேற்று (25) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அத்தோடு, ரூபாவின் வீழ்ச்சியை  அரசாங்கம் என்ற ரீதியில் வெற்றிகரமாக முகங்கொடுத்திருந்தாலும்,  ரூபாவின் பெறுமானம் குறைவதை தவிர்ப்பதற்கு அந்நிய செலவாணியை பயன்படுத்தியிருக்கலாமென்றும், எனினும் அதை செய்யவில்லைனெவும், அமைச்சர் மேலும் சுட்​டிகாட்டினார்.

மேலும், இம்முறை ரூபாவின் பெறுமானம் 9  சதவீதத்தால் வீழ்ச்சி கண்டுள்ளதாக தெரிவித்த அமைச்சர், இலங்கையின் பொருளாதாரத்தை பலமாக முன்னெடுத்ததுச் செல்ல நடவடிக்கை எடுப்பதாகவும், 2025 ஆம் ஆண்டில் இலங்கையை செல்வந்த நாடாக மாற்றியமைக்க முடியுமெனவும் தெரிவித்தார்.

0 comments:

Post a Comment