Saturday, June 30, 2018

பிரபல சிங்கள திரைப்பட இயக்குனரும் நடிகருமான ரொய் டி சில்வா மரணம்


July 1, 2018


பிரபல சிங்கள திரைப்பட இயக்குனரும், நடிகருமான ரோய் டி சில்வா தனது 80 ஆவது வயதில் மரணமடைந்துள்ளார்.

ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையில் நேற்று (30) இரவு இவர் மரணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ரோய் அலோசியஸ் பீலிக்ஸ் டி சில்வா எனும் இவர் ரோய் டி சில்வா என்ற பெயரில் பிரபலமடைந்திருந்தார். 1937 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் பிறந்த இவர், 1964 ஆம் ஆண்டு “சுஜாகே ரஹஸ” எனும் திரைப்படத்தின் மூலம் இவர் திரையுலகில் அறிமுகமானார். 

FIFA 2018 - முன்னாள் சாம்பியன்களான அர்ஜெண்டினா - பிரான்ஸ் இன்று மோதல்

July 01 2018 

ரஷ்யாவில் நடைபெறும் 2 வது உலக கிண்ண கால் பந்து போட்டியில் 32 அணிகள் பங்கேற்றன. இதன் லீக் ஆட்டங்கள் கடந்த 28 ஆம் திகதியுடன் முடிவடைந்தது.

இதில் 2 வது சுற்றுக்கு உருகுவே - ரஷ்யா ( ஏ பிரிவு), ஸ்பெயின் - போர்த்துக்கள் (பீ), பிரான்ஸ் - டென்மார்க் (சி), குரோஷியா - அர்ஜென்டினா (டீ), பிரேசில் - சுவிட்சர்லாந்து (இ), சுவீடன் - மெக்சிகோ (எப்), பெல்ஜியம் - இங்கிலாந்து (ஜி), கொலம்பியா - ஐப்பான் (எச்) ஆகிய 16 அணிகள் தகுதி பெற்றன.

நடப்பு சாம்பியனான ஜெர்மனி, சவுதி அரேபியா, எகிப்து, ஈரான், மொராக்கோ, பெரு, அவுஸ்திரேலியா, நைஜீரியா, ஐஸ்லாந்து, செர்பியா, கோஸ்டாரிகா, தென்கொரியா, துனிசியா, பனாமா, செனகல், போலந்து ஆகிய 16 அணிகள் முதல் சுற்றோடு வெளியேறின.

2 வது சுற்று ஆட்டங்கள் இன்று ஆரம்பமாகின்றன. இதில் தோல்வி அடையும் அணி போட்டியில் இருந்து வெளியேறும். இதனால் ஒவ்வொரு ஆட்டமும் பரபரப்பாக இருக்கும். இன்று இரண்டு ஆட்டங்கள் நடக்கின்றன.

இரவு 7.30 மணிக்கு நடக்கும் போட்டியில் சி பிரிவில் முதலிடம் பிடித்த பிரான்ஸ் டீ பிரிவில் 2 ஆம் இடம் பிடித்த அர்ஜென்டினா அணிகள் மோது கின்றன. இரண்டு முறை சாம்பியனான அர்ஜென்டினா லீக் சுற்றில் தொடக்கத்தில் திணறியது. ஐஸ்லாந்துடன் சமநிலை செய்த அந்த அணி குரோஷியாவிடம் தோற்றது.

அடுத்து நைஜீரியாவிடம் போராடி வென்று 2 வது சுற்றுக்குள் நுழைந்தது. அர்ஜென்டினா அணியில் தலைவர் மெஸ்சி நட்சத்திர வீரராக உள்ளார். முதல் 2 ஆட்டத்தில் சொபிக்க தவறிய அவர் கடைசி போட்டியில் ஒரு கோல் அடித்து பார்முக்கு திரும்பி உள்ளார். அவருக்கு ஏஞ்சல்டிமரியா, மார்கஸ் ரோஜோ ஆகியோர் பக்க பலமாக உள்ளனர். இதனால் பலம் வாய்ந்த பிரான்ஸ் அணியை வீழ்த்தி கால் இறுதிக்குள் அர்ஜென்டினா நுழையுமா என்று எதிர் பார்க்கப்படுகிறது.

ஆனால் பிரான்சின் தடுப்பு ஆட்டத்தை உடைத்து கோல் அடிப்பது கடும் சவாலாக இருக்கும். இதில் மெஸ்சி ஜொலிப்பது மிகவும் அவசியம்.

முன்னாள் சாம்பியன் பிரான்ஸ் பலம் வாய்ந்து இருக்கிறது. லீக் சுற்றில் அவுஸ்திரேலியா, பெரு அணிகளை வீழ்த்தியது. டென்மார்க்குடன் சமநிலை செய்தது. அந்த அணிக்கு 2 வது சுற்றில் இருந்துதான் சவால் ஆரம்பமாகிறது. நட்சத்திர வீரர் கிரிஸ்மான் தனது முழு திறமையை இன்றும் நிரூபிக்கவில்லை. பால்போக்பா, பாப்பே, ஆலிவர் ஜுரூட் நல்ல நிலையில் உள்ளனர். பிரான்ஸ் அணி தடுப்பு மற்றும் தாக்குதல் ஆட்டம் என இரண்டிலும் சிறப்பாகவே இருக்கிறது.

இதனால் கால் இறுதிக்குள் நுழையும் வேட்கையுடன் அந்த அணி உள்ளது. முன்னாள் சாம்பியன் அணிகள் மோதுவதால் ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர். இப்போட்டி குறித்து பிரான்ஸ் பயிற்சியாளர் டெஸ்சாம்ப்ன்ஸ் கூறியதாவது, அர்ஜென்டினா மற்றும் மெஸ்சிக்கு எதிராக களத்தில் விளையாடும் போது அவரை தடுக்க பல்வேறு வழிகளை செயல்படுத்த வேண்டும். அவர் ஆட்டத்தில் வித்தியாசத்தை காட்டுவார் என்பதை அறிவோம் என்றார்.

கத்தாரில் ஜுலை இன்று முதல் பெற்றோல் விலை சிறிய மாற்றம் அறிவிப்பு!

.



ஜுலை இன்று  முதல் பொற்றோலின் விலையில் மீண்டும் சிறியதொரு மாற்றத்தைக் கொண்டுவர தீர்மனித்துள்ளதாக கத்தார் எரிசக்தி மற்றும் தொழில் அமைச்சு அறிவித்துள்ளது.

அந்த வகையில் மே மாதம் 2.10 றியால்களாக விற்கப்பட்டு வந்த 95-octane சூபர் பெற்றோல் 5 திர்ஹங்கள் குறைக்கப்பட்டு 2.05 றியால்களாகவும், 2.00 றியால்களாக விற்கப்பட்டு வந்த 91-octane பிரிமியம் பெற்றோல் எந்தவிதமான மாற்றங்களும் இன்றி அரே 2.00 றியால்களாகவும் விற்கப்பட இருக்கின்றன. அதேபோன்று 2.05 றியால்களாக விற்கப்பட்டு வந்த டீசல் விலையிலும் எந்த விதமான மாற்றங்களும் இன்றி  2.05 றியால்களாக விற்கப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேற்படி அறிவித்தலை கத்தார் எரிசக்தி மற்றும் தொழில் அமைச்சு உத்தியோக பூர்வ இணையத்திலும், சமூக வளைதளங்கள் மூலமாகவும் அறிவித்துள்ளது. சர்வதேச சந்தையில் விலை ஏற்ற, இறக்கத்துக்கு ஏற்ப கத்தாரின் எரிபொருள் விலையிலும் மாற்றங்கள் கொண்டு வரப்படும் என்பதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

குறிப்பு - கத்தாரில் பெற்றோலின் விலை 2.50 றியால்களாக அதிகரிக்கப்பட்டள்ளதாக வாட்அப்களில் வதந்திச் செய்தியொன்று பரவி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. இந்த செய்தியில் எந்த உண்மையில் இல்லை.

இலங்கையில் விசா நடைமுறையில் விரைவில் மாற்றம்! அரசாங்கம் அறிவிப்பு


  July 01 2018 

இலங்கையில் விசா நடைமுறையில் விரைவில் மாற்றம் ஏற்படவுள்ளதாக குடிவரவு குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.

விசா கட்டணத்தில் திருத்தம் உள்ளிட்ட பல்வேறு மாற்றங்கள் மேற்கொள்ளப்படவுள்ளதாக குடிவரவு குடியகல்வு திணைக்கள கட்டுப்பாட்டாளர் எம்.என்.ரணசிங்க தெரிவித்துள்ளார்.

இதற்கான புதிய விதிகள் கொண்ட ஒரு வர்த்தமானி அறிவிப்பு விரைவில் வெளியிடவுள்ளதாகவும், அவை, சட்ட மா அதிபரின் அனுமதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையின் விசா முறை நீண்ட காலமாக மேம்படுத்தப்படாமல் உள்ளதாக குடிவரவு குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.

கத்தாரில் வாகனங்களை உடைத்து திருட்டு வேலைகளில் ஈடுபட்டு வந்த கும்பல் அதிரடிக் கைது

.கத்தாரில் வாகனங்களை உடைத்து திருட்டு வேலைகளில் ஈடுபட்டு வந்த கும்பல் அதிரடிக் கைது!

   July, 01.2018




கத்தாரில் வாகனங்களை உடைத்து உள்ளே இருக்கும்  பொருட்களை திருடும் செயற்பாடுகளில் ஈடுபட்டு வந்த 3 ஆபிரிக்க நாட்டவர்கள் அங்கிய கும்பல் ஒன்றை கத்தார் குற்றப் புலனாய்புப் பிரிவினர் கைது செய்துள்ளனர். நாட்டின் பல்வேற பகுதிகளில் இடம்பெற்ற குற்றச் செயல்களுடன் இவர்கள் தொடர்புபட்டவர்கள் என்பதாக ஆரம்ப கட்ட விசாரனைகளில் இருந்து தெரிய வந்துள்ளது.

குற்றப் புலனாய்வு திணைக்களத்துக்கு கிடைக்கப்பட்ட முறைப்பாடுகளின் அடிப்படையில் தீவிர தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு இறுதியில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் வாகன உரிமையாளர்கள், வாகனங்களை பார்க் செய்து விட்டு செல்லும் போது ஒழுங்கான முறையில் முடிவிட்டு செல்லும் படியும், வாகனங்களின் உள்ளே பெறுமதியான பொருட்களை வைக்க வேண்டாம் என்பதாகவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது போன்ற ஏதாவது அசம்பாவிதங்கள் நடைபெற்றால் உடனே 999 என்ற இலக்கத்துக்கு அறிவிக்குமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். 

பேஸ்புக் நட்பினால், கோடீஸ்வர மகளுக்கு நேர்ந்த பரிதாபம் - நீர்கொழும்பில் சம்பவம்







June 30, 2018


.நீர்கொழும்பு பிரதேசத்தில் கோடீஸ்வர வர்த்தகர் ஒருவரின் மகளை கடத்திச் சென்று ஒரு கோடி ரூபாய் கப்பம் கோரியதாக கூறப்படும் விளையாட்டு ஆலோசகர் ஒருவரை நீர்கொழும்பு குற்ற விசாரணைப் பிரிவினர் இன்று கைதுசெய்துள்ளனர்.

கடத்திச் சென்றமை, கப்பம் கோரியமை மற்றும் பாலியல் துஷ்பிரயோகம் செய்தமை ஆகிய குற்றச்சாட்டுக்களின் நீர்கொழும்பை சேர்ந்த 25 வயதான நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

திருமணம் செய்யும் வயது பூர்த்தியாகாத வர்த்தகரின் மகளுக்கும் சந்தேக நபருக்கும் இடையில் முகநூல் ஊடாக காதல் தொடர்பு இருந்ததாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மாகாண சபை தேர்தலில் தமது அணியின் வெற்றி நிச்சயம் - மகிந்த

30 JUNE 2018

மாகாண சபை தேர்தல் எந்தவிதத்தில் நடத்தப்பட்டாலும், அதில் தமது அணி வெற்றி பெறும் என நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

குருநாகல் - மாவத்தகம பிரதேசத்தில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் 16 பேர் கொண்ட குழு என்ற ஒன்று தற்போது இல்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Hiru

ஜனாதிபதி தேர்தலுக்காக அரசாங்க தரப்பில் இருந்து பொது வேட்பாளர்

30 JUNE 2018

அடுத்த ஜனாதிபதி தேர்தலுக்காக அரசாங்க தரப்பில் இருந்து பொது வேட்பாளர் ஒருவர் முன்னிலையாகக்கூடும் என பிரதியமைச்சர் எட்வட் குணசேகர தெரிவித்துள்ளார்.

வடமேல் அபிவிருத்தி பிரதியமைச்சராக சத்திய பிரமாணம் செய்து கொண்ட அவர் இன்றைய தினம் தமது கடமைகளை பொறுப்பேற்றதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட போதே இதனை குறிப்பிட்டுள்ளார்.

தலைமைத்துவத்தை புதிய ஒருவருக்கு வழங்க வேண்டும் என்ற எண்ணம் கட்சியின் தலைவரிடம் உள்ளது.

அதற்கான செயற்பாடுகளை அவர் முன்னெடுக்கிறார்.

தனிப்பட்ட ஒருவரின் கருத்துக்களால் நாட்டின் தலைவரை உருவாக்க முடியாது.

எதிர்காலத்திலும் பொது வேட்பாளர் ஒருவர் முன்னிறுத்தப்படுவார் என பிரதியமைச்சர் எட்வட் குணசேகர தெரிவித்துள்ளார்

நாளை முதல் தேநீர் விலை குறைப்பு


30.06.2018

சமையல் எரிவாயுவின் விலை குறைப்பு காரணமாக, தேநீர் கோப்பை ஒன்றின் விலை 5 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது.

அகில இலங்கை உணவக உரிமையாளர்கள் சங்கம் இதனை தெரிவித்துள்ளது.

கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய அதன் தேசிய அமைப்பாளர் அசேல சம்பத் இதனை தெரிவித்துள்ளார்.

இந்த விலைக்குறைப்பு நாளை முதல் அமுலுக்கும் வரும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதற்கமைய நாளை முதல் தேநீர் கோப்பை ஒன்றின் விலை 15 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படும் என அகில இலங்கை உணவக உரிமையாளர்கள் சங்க தேசிய அமைப்பாளர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார்.

நேற்று நள்ளிரவு முதல் சமையல் எரிவாயுவின் விலை 138 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மாகாண சபை தேர்தல் உடனடியாக நடத்தப்பட வேண்டும்

30.06.2018

மாகாண சபை தேர்தல் உடனடியாக நடத்தப்பட வேண்டும் என்ற ஆவணத்தில் கைச்சாத்திட விருப்பம் வெளியிட்டதாக ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளர் ரோஹன லக்ஷ்மன் பியதாச தெரிவித்துள்ளார்.

கண்டி – கட்டுக்கலை பிரதேசத்தில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் பின்னர் ஊடகங்கள் மத்தியில் உரையாற்றிய போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

இந்த ஆவணத்தில் கைச்சாத்திட ஏனைய அரசியல் கட்சிகள் உரிய பதிலை வழங்கவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தேர்தல்கள் ஆணையாளருடன் இடம்பெற்ற பேச்சுவார்தையின் போது மாகாண சபை தேர்தல் உடனடியாக நடத்தப்பட வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது.

இதற்கான யோசனையையும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியே முன்வைத்ததாகவும் அதன் பொதுச் செயலாளர் ரோஹன லக்ஷ்மன் பியதாச குறிப்பிட்டுள்ளார்.

உலகிலேயே மிக உயரமான சிறுவன் இவன் தான்: வயதை கேட்டா ஷாக் ஆகிடுவீங்க

June 30, 2018

   
சீனாவில் 11 வயது பள்ளி மாணவன் ஒருவன் 6 அடி உயரம் வளர்ந்திருப்பதால், உலகிலேயே உயரமான சிறுவன் என்னும் பெருமையை பெற்றுள்ளான்.
சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் 6ஆம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவன் ரேன் கேயூ. 11 வயதான இவனது தற்போதைய உயரம் 6 அடியாகும்.

இதன் மூலம், உலகிலேயே இந்த வயதில் அதிக உயரம் கொண்ட சிறுவன் என்ற பெருமை இவனுக்கு கிடைத்துள்ளது. இதுகுறித்து ரேன் கேயூ கூறுகையில்,

‘எனக்கு நினைவு தெரிந்த நாளில் இருந்தே என் வயது குழந்தைகளை விட மிக உயரமாகவே இருந்தேன். அதனால் சிலர் என்னுடன் விளையாட தயங்குவார்கள். பள்ளிலும் வயது அதிகமானவன் என்று கருதி புது ஆசிரியர்கள் என்னை வகுப்புக்கு போகச் சொல்வார்கள்.

பள்ளி நாற்காலியில் அமர முடியவில்லை. அதனால் பெரிய நாற்காலி ஏற்பாடு செய்திருக்கிறார்கள். என்னுடன் படிக்கும் சக மாணவர்கள், என் இடுப்பு உயரமே இருக்கிறார்கள்.

சாலைகளில் நடக்கும்போது எல்லோரும் என்னை அதிசயமாக பார்ப்பார்கள். ஆனாலும், இந்த உயரம் தான் கின்னஸ் சாதனை புத்தகத்தில் என்னை இடம்பெற வைத்திருக்கிறது’ என தெரிவித்துள்ளான்.

ரேனின் தாய் இதுதொடர்பாக கூறுகையில், ‘அளவுக்கு அதிகமான உயரத்தால் பயந்துபோய், பல பரிசோதனைகளை மேற்கொண்டோம். ஹார்மோன், பிட்யூட்டரி சுரப்பியில் எதுவும் பிரச்சனை இல்லை என்று கூறிவிட்டார்கள்’ என தெரிவித்துள்ளார்.

பிரதியமைச்சரை யானை துரத்தியது

June 30, 2018 

துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த காட்டு யானைக்கு சிகிச்சையளிக்க சென்ற வனஜீவராசிகள் பிரதியமைச்சர் பாலித தெவரப்பெரும மீது அந்த யானை தாக்குதல் நடத்த முயற்சித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

திம்புலாகல, நவமில்லான, இத்தபிச்சவெவ பிரதேசத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சுமார் 100 மீற்றர் தூரம் வரை பிரதியமைச்சரையும் சிகிச்சையளிக்க சென்ற குழுவினரையும் அந்த யானை துரத்தியுள்ளதாக அத தெரண செய்தியாளர் கூறியுள்ளார்.

அதன்பின்னர் வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளும் வைத்தியர்களும் இணைந்து அந்த யானைக்கு தேவையான சிகிச்சையை செய்துள்ளனர்.

உயர்தர மாணவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி...

30.06.2018

உயர்தர மாணவர்களுக்கு இலவசமாக டெப் கணினி வழங்கும் திட்டத்தினை ஸ்திரமாக நடைமுறைப்படுத்துவதற்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தீர்மானித்துள்ளார். இதற்கமைவான ஆலோசனைகளை கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.

டெப் கணினி வழங்கும் ஆலோசனையை முறைப்படுத்தப்பட்ட திட்டமாக நடைமுறைப்படுத்துவதற்கு கல்வி அமைச்சில் இடம்பெற்ற கூட்டத்திலும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

நல்லாட்சி அரசாங்கம் தேர்தலின் போது உயர்தர மாணவர்களுக்கு இலவச டெப் கணினி வழங்கும் திட்டம் முன்னெடுக்கப்படும் என உறுதியளித்திருந்தது.

ஆனால் குறித்த திட்டத்தினை முனனெடுப்பதில் தேசிய அரசாங்கத்தின் பங்காளிகளுக்குள் இணக்கப்பாடுகள் ஏற்பட வில்லை.


இதன் பின்னர் பிரதமரின் நேரடி தலையீட்டின் கீழ் முறையானதொரு திட்டமாக முன்னெடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் மற்றும் கல்வி அமைச்சரின் தீர்மானத்தின்படி அடுத்த வருடம் முதல் உயர்தர மாணவர்களுக்கு இலவச டெப் கணினி வழங்கும் திட்டம் முன்னெடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இலஞ்சம் பெறும் பொலிஸாருக்கு ஆப்பு!


30.06.2018

வீதிப் போக்குவரத்து கடமைக்குச் செல்லும் போக்குவரத்துப் பொலிஸார் 400 ரூபா பணத்தை மட்டுமே தமது சட்டைப் பையில் எடுத்துச் செல்ல முடியும் என்ற கட்டுப்பாட்டை இலங்கை பொலிஸ் தலைமையகம் நடைமுறைப்படுத்தியுள்ளது.

இலஞ்சம் பெறுவதைத் தடுக்க இந்தக் கட்டுப்பாடு கொண்டு வரப்பட்டுள்ளது எஎன்று பொலிஸ் தலைமையகத் தகவலை சுட்டிக்காட்டி சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

கடமைக்குச் செல்வதற்கு செல்ல முன்னர் சார்ஜன்ட் மற்றும் பொலிஸ் உத்தியோகத்தர் தமது பணப்பையை பொறுப்பதிகாரியிடம் காண்பித்துச் செல்ல வேண்டும்.

மேலும் பொலிஸ் நடமாடும் பிரிவிரினர், வீதிக் கடமையிலிருக்கும் போக்குவரத்துப் பொலிஸாரின் பணப்பையை சோதனையிடுவதற்கும், புதிய நடைமுறையில் அதிகாரமளிக்கப்பட்டுள்ளது என அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனினும் இந்த நடைமுறை தொடர்பான சுற்றறிக்கை வடக்குப் பொலிஸ் நிலையங்களுக்கு கிடைக்கவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, வீதிப் போக்குவரத்து கடமைக்குச் செல்லும் போக்குவரத்துப் பொலிஸார் 300 ரூபா பணத்தை மட்டுமே தமது பணப்பையில் எடுத்துச் செல்ல வேண்டும் என்ற கட்டுப்பாடு ஏற்கனவே நடைமுறையில் உள்ளது.

ஏன் வடக்கு - கிழக்கு இணைப்பிற்கு முஸ்லிம் சமூகம் உடன்பாடில்லை...

   June 30, 2018

வடக்கு கிழக்கு இணைக்கப்பட வேண்டும். வடக்கு கிழக்கிற்கான அரசியல் தீர்வு வழங்கப்பட வேண்டும் என்ற
குரல்கள் மீண்டும் அரசியல் அரங்கில் ஒலிக்கத்தோங்கியுள்ளன.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் மட்டக்களப்பில் நடை பெற்ற ஊடகவியலாளர்களுடனான சந்திப்பில் தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க அமைச்சர் மனோ கணேசன் வடக்கு கிழக்கு இணைக்கப்பட வேண்டுமென்று குறிப்பிட்டிருந்தார்.

அவரின் கருத்தை வழி மொழிந்ததாக தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க பிரதி அமைச்சர் அலிசாகிர் மௌலானா அவர்களும் வடகிழக்கு இணைப்பிற்கு தயக்கமின்றி நாம் ஆதரவு வழங்குவோம் என்பதாக குறிப்பிட்டிருக்கிறார்.

வடக்கு கிழக்குக்கான அரசியல் தீர்வு வழங்கப்பட வேண்டும். தமிழ் மக்களின் பல ஆண்டு கோரிக்கைகளுக்கு அரசாங்கம் தீர்வினை வழங்க வேண்டும். அதனூடாக மீண்டுமொரு இனமோதல் இந் நாட்டில் தவிர்க்கப்பட வேண்டும். அதற்கு எம்மிடம் மாற்றுக் கருத்தில்லை.

ஆனாலும் ஒரு சமூகத்தின் மீது இன்னுமொரு சமூகத்தின் மேலாதிக்கத்தை நிலை நிறுத்தும் வடக்கு கிழக்கு இணைப்பிற்கு முஸ்லிம் சமூகம் உடன்பாடில்லை என்பதை முஸ்லிம் சமூகத்தின் பிரதிநிதி என்ற வகையில் பிரதி அமைச்சர் அலிசாகிர் மௌலானா அவர்களும் தமிழர் அரசியல் தலைமைகளும் புரிந்து கொள்ள வேண்டும்.

அரசியல் தீர்வென்பது நிரந்தர தீர்வாக அமைய வேண்டும் என்றால் அது எல்லா சமூகத்தவர்களுக்கும் நீதியை பெற்றுக் கொடுக்கின்ற தீர்வாக அமையப் பெற வேண்டும்.

வடக்கும் கிழக்கும் இணைக்கப்படுகின்ற போது முஸ்லிம் சமூகம் தமிழர் சமூகத்தால் அரசியல் மற்றும் நிர்வாக ரீதியாக அடக்கி ஒடுக்கி ஆளப்படுகின்ற நிலை உருவாகுமென்பதில் எந்த ஜயமும் இல்லை.

வடக்கு கிழக்கு இணைக்கப்படாமல் பிரிந்திருக்கும் இன்றைய சூழ் நிலையிலும் கூட, வடக்கு கிழக்கில் முஸ்லிம்கள் தமிழர்களால் அடக்கி ஒடுக்கி ஆளப்படுகிறார்கள்.

தமிழர் பகுதிகளுக்குள் முஸ்லிம்கள் தமது தேவைகளுக்காக காணிகளை கொள்வனவு செய்ய முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது. அவ்வாறு காணிகளை கொள்வனவு செய்தாலும் அக் காணிகளுக்குள் தமது வாழ்விடங்களை அமைத்து வாழ முடியாத பயிர் செய்கைகளை செய்யமுடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது.

அதே போல தமிழர் பகுதிகளுக்குள் தமது வியாபார நிலையங்களை அமைத்து வியாபாரத்தை மேற்கொள்ள முடியாத நிலை முஸ்லிம்களுக்கு இருக்கிறது.

தமிழர் ஆளுகைக்குற்பட்ட சந்தைகளில் பல ஆண்டுகளாக தொழில் செய்து வந்த முஸ்லிம் வியாபாரிகள் தமிழர் தரப்பினரால் துரத்தப்பட்ட சம்பவங்களும் நடந்தேரியுள்ளன.

யுத்தத்தினால் இடம்பெயர்ந்த முஸ்லிம்கள் தமிழர் பகுதிகளுக்குள் இருக்கின்ற தமது சொந்த நிலங்களுக்குள் கூட மீள் குடியேறி வாழ முடியாத நிலையில் இருக்கிறார்கள்.  அவ்வாறு மீள் குடியேற முனைந்தால் முஸ்லிம்களின் மீது தாக்குதல்கள் மேற்கொள்ளப்படுகின்றன. நிர்வாக ரீதியான அடக்குதல்கள் நடந்தேருகின்றன.

இவ்வாறான அடக்கு முறைகளை முஸ்லிம் சமூகம் வடக்கும் கிழக்கும் பிரிந்திருக்கும் நிலையிலேயே தமிழர் தரப்பிலிருந்து சந்தித்து வருகிறது.

இவ்வாறு ஒரு சமூகத்தை அரசியல் மற்றும் நிர்வாக ரீதியாக அடக்கியாள முற்படுகின்ற சமூகத்துடன் தனது மேலாதிக்கத்தை இன்னுமொரு சமூகத்தின் மீது நிலை நிறுத்த முற்படுகின்ற சமூகத்துடன் எவ்வாறு முஸ்லிம் சமூகம் ஒன்றிணைந்து விட்டுக் கொடுப்புடன் வாழ்வது என்பதை பிரதி அமைச்சர் அலிசாகிர் மௌலானா அவர்களும் தமிழர் தலைமைகளும் மீண்டுமொரு முறை சிந்திக்க வேண்டும்.

வடக்கு கிழக்குக்கான அரசியல் தீர்வு தொடர்பிலான முன்னெடுப்புக்களும் பேச்சுக்களும் இடம்பெறுகின்ற நிலையில் முஸ்லிம் சமூகம் இவ்வாறான புல்லுருவிகளின் கருத்துக்களுக்கு பின் நிற்காமல் வடக்கு கிழக்கு பிரிந்திருக்க வேண்டுமென்ற நிலைப்பாட்டிலும் முஸ்லிம்களுக்கான அரசியல் தீர்வு விடையங்களிலும் எமதுரிமைகளை பெற்றிட ஒன்றிணைந்து குரலெலுப்ப வேண்டுமென்பது எமது கோரிக்கையாக இருக்கிறது.

நன்றி

முஹம்மத் ஹம்ஸா கலீல்
காத்தான்குடி

நாஸா உட்பட அமெரிக்காவின் ஆய்வு நிலையங்களில் பணியாற்றும் ஹெம்மாதகமை விஞ்ஞானி நவாஸ் இப்ராஹிம்.


  June 30, 2018

நாஸா வில் பணிபுரிந்த ஹெம்மாதகமை மண் ஈன்றெடுத்த சான்றோர்கள் அறிஞர்கள், அறிவியல்
உலகில் தடம்பதித்தவர்கள் வரிசையில் ஹெம்மாதகமயை பிறப்பிடமாக கொண்ட நவாஸ் இப்ராஹிம் அவர்கள் பள்ளிபோர்வை முஸ்லிம் வித்தியாலயம், அல் அஸ்ஹர் கல்லூரி, கொழும்பு ஸாஹிராக்கல்லூரிகளின் பழைய மாணவராவார்.

1984ம் ஆண்டு சாதரணர தரத்தில் அல் அஸ்ஹர்  கல்லூரியில் சிறந்த பெறுபேறுகளை பெற்று உயர் தரம் கற்பதற்காக கொழும்பு ஸாஹிரா கல்லூரியில் கணிதத்துறையை  தேரந்தெடுத்த அவர்கள்  சிறந்த பெறுபேறுகளை பெற்று பேரதனை பழ்கலை கலகத்தில் இரசாயனவியலில் தனது உயர்கல்வியை தொடர்ந்தார்.

நான்கு வருட இரசாயனவியல் பாட நெறியை வெற்றிகரமாக முடித்த அவர், தொடர்ந்து Msc கற்கையில் பழ்கலைகழககத்தின் முதல் தர பெறுபேறுகளை பெற்று பல்கலை போற்றும் சிறந்த மாணவனாக தேர்நதெடுக்கப் பட்டதோடு, சுமார் நான்கு வருடங்கள் பல்கலைகழக விரிவுரையாளராகப் பணியாற்றினார். இக்காலகட்டத்தில் இவர் தனது முதலாவது கண்டு பிடிப்பை அறிமுகப்படுத்தினார். வைக்கோல் சக்தியின் மூலம் ஜெனறேட்டர் ஒன்றை இயக்கி தனது புதுகண்டுபிடிப்பு துறையில் தடம் பதித்தார்.

நான்குவருடம் முதல்தர விரிவுரையாளராக கடயைாற்றிய பின்னர், தனது  கலாநிதி படிப்பிற்காக ஐக்கிய அமெரிக்கா பல்கலைகழகத்திற்கு புலமை பரிசில் பெற்று சென்றார். அங்கு ஆயவுகளை மேற்கொண்டு கலாநிதியாகவும் விஞ்ஞானியாகவும் உயர்ந்தார்.

பலவேறு ஆய்வுகள் செய்து பல புதிய விடயங்களை கண்டு பிடித்து அமெரிக்காவிின் சிரேஷ்ட  விஞ்ஞானிகளில் ஒருவரானார்.

ஒரு வருடம் நாசா மையத்தில் பணிபுரிந்த விஞ்ஞானி நவாஸ் அவர்கள், வின்வெளி ஆராயச்சியாளர்களுக்கான  பெரும்  இரத்தப்பரிசோதனைகூட  இயந்திரங்களை மாற்றியமைத்து கிரடிட் காட் அளவினாலான இரத்தப்பரிசோதனை இயந்திரத்தை கண்டு பிடித்ததன் மூலம் நாசாவிலும் தனது பங்களிப்பை செலுத்தினார்.

தற்போது அமெரிக்காவின் பிரபல மருத்துவ ஆய்வு நிலையமொன்றில் ஐம்பது விஞ்ஞானிகளுக்கு  தலைமை விஞ்ஞானியாக பணியாற்றுகிறார்.

இரசாயனவியல் விஞ்ஞானியான நவாஸ் இப்ராஹம் அவர்கள் அதனை பகுப்பாய்வதோடு அதனை பிரித்தரிவதன் மூலம் புதிய இரசாயனவியல் மற்றும் மருத்துவ கண்டுபிடிப்புகளை கண்டறியும் ஆய்வுகளை மேற் கொண்டு மனித குலத்தின் வாழ்விற்கான ஆராய்ச்சிகளை செயது வருகிறார். என்பது குறிப்பிடத்தக்கது.

தமது விஞ்ஞானிகள் குழுவின் மூலம் புற்று நோய் மற்றும் நீரிழவு நோய்களுக்கான புதிய ஆய்வில் வெற்றிகரமான முன்னேற்றங்களை அடைந்துள்ளனர். வாரம்தோறும் வழங்க வேண்டிய மருத்துவத்தை ஆறு மாதம் ஒருவருடம் என நீடித்த காலம் பயன் படும் மருத்துவ ஆய்வுகளை முன்னெடுத்து வருகிறார்.

அளப்பரிய கண்டு பிடிப்புகளை மனித குலத்து்கு வழங்கிய நவாஸ் இப்ராஹீம் பற்றி சில வார்த்தைகள் கூறவது இவ்விடத்தில் பொறுத்தம் என்று கருதுகிறேன்.

ஐந்து பிள்ளைகள் கொண்ட குடும்பத்தில் இளையவரான இவர் குக்கிராமமொன்றில் எளிமைமிகு குடும்பத்தில் பிறந்து கல்வி கற்காத உடன்பிறப்புகளின் ஒத்துழைப்பாலும் உதவியாலும் உயர்ந்தவர் என்பது எமக்கெல்லாம் ஓர் முன்மாதிரியாகும்.

கல்விக்கு வறுமை ஒருபோதும் தடையில்லை என்பது இவர் ஒரு நடமாடும் சாடசி.

உலகின் உன்னத நாகரீகமும் அறிவியலும் நிறைந்த நாட்டில் ஒரு சிரேஷ்ட விஞ்ஞானியாக திகழ்வதற்கு அவர் கொண்ட இலக்கும் அதில் காட்டிய உறுதியும் முன்மாதிரி மிக்கது.

குறுகிய விடுமுறை ஒன்றில் இலங்கை வந்துள்ள விஞ்ஞானி நவாஸ் இப்ராஹிம் வேலைப்பழுக்கலலுக்களுக்கு மத்தியிலும் தான் ஆரம்பக்கல்வி பெற்ற பள்ளிபோருவை முஸ்லிம் வித்தியாலத்தில்  மாணவர்களுடனும்  தான் கற்ற ஆசிரியர்ளுடனும் ஒரு கலந்துரையாடலில் ஈடு பட்டார்

மேலும் அல் அஸ்ஹர் கல்லூரியில்  OBA, SDC யுடனான சந்திப்பும் உயர்தர மாணவர்களுக்கான வழிகாட்டல் நிகழ்வொன்றும் நடைபெற்றது.

ஹெம்மாதகமை மண்ணுக்கும் இலங்கைதிருநாட்டிற்கும் தான் கற்ற கல்லூரிக்கும் பெருமைகள் ஈட்டித்தந்ததுடன் மனித குல ஆரோக்கியவாழ்வுக்கு தன்னை அர்ப்ணித்து முழு மனிதசமூகதிற்கும் சேவை செய்யும் பாக்கியம் பெற்ற சிரேஷ்ட விஞ்ஞானி நவாஸ் இப்ராஹிம் மேலும் மேலும் வளர  உளமார வாழ்த்துகிறோம்.

மேலும் அண்மையில் நீதிபதியாக பணியற்ற ராபி ஹனீபா அவர்களது தாய் மாமனாரே விஞ்ஞானி நவாஸ் இப்ராஹிம் அவர்கள்.

நன்றி

- BY: நியாஸ் சாலி -