Sunday, September 23, 2018

இறக்காமத்தில் அஸ்ரபின் நட்புக்கான கிரிக்கெட் சுற்றுப்போட்டி 2018 (படங்கள்)

23.09.2018

இறக்காமம் அஸ்ரப் மத்திய கல்லூரியில் கல்வி கற்ற பழைய மாணவர்கள் தமது பசுமையான நினைவுகளை மீட்டி பார்ப்பதற்கும் , ,
ஆன்மீக விழுமியம் உள்ள கல்விச் சமூகம் ஒன்றை கட்டியெழுப்புவதற்கும் நண்பர்களின் சமூக உறவை வலுப்படுத்துவதற்கும்    இறக்காமம் அஷ்ரப்பியன் மாணவர்காளால் கிரிக்கெட்சுற்றுப்போட்டி
நேற்று 22 ஏற்பாடு செய்யப்பட்டது.

இறக்காமம் குளக்கரைக்காட்சி மைதானத்தில் நடைபெற்ற   .
இந் நிகழ்வில் 2001 வருடம் 

G C E (O/L) வகுப்புக்கு கற்பித்துக்கொடுத்த ஆசிரியர்களான தமிழ்ப்பாட ஆசிரியர் ஐ.ஹுஸைன்தீன் (ஊடகவியலாளர்) அவர்களும் , சமூகவியல் வரலாறு ஆசிரியர்   எஸ்.எல். நிஸார்.(ISA ) அவர்களும் ,ஆங்கிலப்பாட ஆசிரியர் எம்.கே.எம்.முனாபீர்  அவர்களும்  அதிதிகளாக கலந்து கொண்டு சிறப்பித்த போது அவர்களை அனைத்து மாணவர்களும் இன்முகத்துடன் வரவேற்றனர்.

அத்துடன் 2001வருட G C E (OL) மாணவர்களின் விளையாட்டு இல்லம் கற்பித்த ஆசிரியர்களால் வைபவரீதியாக திறக்கப்பட்டது. 

அத்தோடு அஷ்ரபியன்ஸ்" நண்பர்களின் பொதுப்பணியையும் சமூக உணர்வையும் பாராட்டி வாழ்த்துப்பத்திரம் 2001 வருடமாணவர்கள் சார்பாக வாசிக்கப்பட்டு இந்த  .வாழ்த்துப்பத்திரமானது ஐ.ஹுஸைன்தீன் ஆசிரியர் அவர்களால்  எழுதி வாசிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

0 comments:

Post a Comment