Monday, September 24, 2018

என்டர்பிரைஸ் ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்தின் கீழ் 23 ஆயிரம் பேருக்கு கடனுதவி


September 24, 2018

அரசாங்கத்தின் என்டர்பிரைஸ் ஸ்ரீலங்கா என்ற அரச வட்டி நிவாரணக் கடன் திட்ட வேலைத்திட்டத்தில் இதுவரையில் நிறுவனங்கள் மற்றும் நபர்கள் அடங்கலாக 23 ஆயிரம் பேருக்கு கடனுதவி வழங்கப்பட்டுள்ளது.

ஒரு லட்சம் தொழில் முயற்சியாளர்களை உருவாக்கும் நோக்கில் நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சு இந்தத்திட்டத்தை நடைமுறைப்படுத்தியுள்ளது.

அரச மற்றும் தனியார் வங்கிகள் மூலம் இந்தத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது.

இதுவரையில் நான்காயிரத்து 917 கோடி ரூபாவிற்கும் மேற்பட்ட தொகை கடனாக வழங்கப்பட்டுள்ளது.

கடந்த ஜூன் மாதம் 22 ஆம் திகதி ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோர் தலைமையில் என்டர்பிரைஸ் ஸ்ரீலங்கா என்ற அரசாங்கத்தின் வட்டி நிவாரண கடன் திட்டம் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இதன் கீழ், 16 வட்டி நிவாரணத் திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இதற்கான முழு வட்டி அல்லது வட்டியின் ஒரு பகுதியை அரசாங்கம் சம்பந்தப்பட்ட கடன் பயனாளிகளுக்காக வங்கிகளுக்கு செலுத்துகின்றமை குறிப்பிடத்தக்கது.

0 comments:

Post a Comment