Saturday, September 22, 2018

வாகனம் ஒன்றின் விலை 8 லட்சம் ரூபாவினால் அதிகரிப்பு

September 22, 2018

புதிய வாகனம் ஒன்றின் விற்பனை விலை 8 லட்சம் ரூபாவினால் அதிகரித்துள்ளதாக வாகன இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த அதிகரிப்பு 2.5 லட்சம் ரூபாவிலிருந்து 8 லட்சம் ரூபா வரை காணப்படுவதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
நாளுக்கு நாள் இடம்பெற்று வரும் டொலரின் விலை  அதிகரிப்பு இந்த வாகன விலையுயர்வுக்குக் காரணம் எனவும் அவர்கள் அறிவித்துள்ளனர்.

தொடர்ந்தும் நான்காவது நாளாகவும் டொலரின் விலை நேற்றும் அதிகரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.  

0 comments:

Post a Comment