Saturday, September 22, 2018

அரசாங்கம் பதவியில் இருந்து விலகவேண்டும்

22.09.2018

இலங்கை ரூபா பெறுதியின் வீழ்ச்சியை கட்டுப்படுத்த முடியாவிட்டால், அரசாங்கம் பதவியில் இருந்து விலகவேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றில் வைத்து அவர் இதனை தெரிவித்துள்ளார்.

நாளுக்கு நாள் ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியை கண்டுள்ளது.

தமது அரசாங்கம் பதவியில் இருந்து விலகும் போது, அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி 131.40 ரூபாவாக இருந்தது.

ஆனால் தற்போது, 170 ரூபாவாக அதன் பெறுமதி வீழ்ச்சி கண்டுள்ளது.

உரிய தலைமைத்துவம் அரசாங்கத்தில் இல்லாமையே இதற்கான காரணம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ரூபாவின் வீச்சியை கட்டுப்படுத்த வேண்டுமாயின் அரசாங்கத்தை தம்மிடம் ஒப்படைக்க வேண்டும் எனவும் மஹிந்த ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்.

Hiru news

0 comments:

Post a Comment