Sunday, September 23, 2018

உலக பொருளாதார நெருக்கடியில் இருந்து தப்பியோட முனையவில்லை

September 23, 2018 

அமெரிக்க டொலரின் பெறுமதி அதிகரித்தமையால் ஏற்பட்டுள்ள நெருக்கடிக்கு வெற்றிகரமான முறையில் முகங்கொடுக்க இருப்பதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

நாத்தாண்டிய லூர்து மகா வித்தியாலயத்தில் வள மத்திய நிலையத்தை நேற்று ஆரம்பித்து வைத்து உரையாற்றிய பிரதமர் இது தொடர்பில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் பற்றி பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

கடந்த காலத்தில் சவால்களுக்கு முகங்கொடுத்து முன்னோக்கிச் சென்றதை போன்று டொலரின் பெறுமதி அதிகரித்தமையால் ஏற்பட்டுள்ள நெருக்கடிக்கு வெற்றிகரமான முறையில் முகங்கொடுக்க இருப்பதாக தெரிவித்துள்ளார்.

கல்வி, சுகாதாரம் ஆகியவற்றுக்கான நிதி ஒதுக்கீடு குறைக்கப்பட மாட்டாது. டொலரின் பெறுமதி அதிகரித்துள்ளமை இலங்கைக்கு மாத்திரம் ஏற்பட்டுள்ள பிரச்சினை அல்ல. இத்தாலி நாணயம், ஸ்ரேளிங் பவுன், அவுஸ்திரேலிய டொலர், இந்தோனேசிய ரூபா, கொரிய நாணயம், பிலிப்பைன்ஸ் நாணய, சிங்கப்பூர் டொலர், மலேசிய றிங்கிட் என்பனவற்றின் பெறுமதியும் குறைவடைந்துள்ளது. உலக பொருளாதார நெருக்கடிக்கு வெற்றிகரமாக முகங்கொடுப்பதாகவும் அதிலிருந்து தப்பியோட முனையவில்லை என்றும் தெரிவித்தார்.

(அரசாங்க தகவல் திணைக்களம்)

0 comments:

Post a Comment