Thursday, September 20, 2018

தகவல் அறியும் சட்டம் தற்பொழுது அடிப்படை உரிமை


September 20, 2018 

தற்பொழுது நடைமுறையில் உள்ள தகவலை அறியும் சட்டத்தின் மூலம் பெரும்பாலான தகவல்களை பெற்றுக்கொள்ள முடியும் என்று அரசாங்க தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் சட்டத்தரணி சுதர்சன குணவர்தன தெரிவித்தார்.

ஊடகத்துறை அமைச்சில் இன்று இடம்பெற்ற செய்தியாளர்களுடனான சந்திப்பின் போதே அவர் இந்த விடையத்தை குறிப்பிட்டார்.

தகவல் அறியும் சட்டம் தற்பொழுது அடிப்படை உரிமையாக அரசியல் யாப்பிற்குள் உள்வாங்கப்பட்டுள்ளது. இதேபோன்று தகவல்களை பெற்றுக்கொள்ளும் அழுத்தத்தை மேற்கொள்வதற்கு இந்த சட்டம் பெரிதும் உதவுகிறது.

உரிய வகையில் தகவல்கள் வழங்கப்படாத பட்சத்தில் அதனை மேன் முறையீடு மூலம் பெற்றுக்கொள்ள முடியும் என்றும் அரசாங்க தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் சட்டத்தரணி சுதர்சன குணவர்தன தெரிவித்தார்.

நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சின் மேலதிக செயலாளர் திருமதி திலக ஜயசுந்தர (அபிவிருத்தி மற்றும் திட்டமிடல்), தேசிய ஊடக மத்திய நிலையத்தின் தகவல் வலயத்தின் பணிப்பாளர் சட்டத்தரணி ஜகாத் லியனாராச்சி ஆகியோர் இதில் கலந்துகொண்டனர்.

அரசாங்க தகவல் திணைக்களம்

0 comments:

Post a Comment