Saturday, December 29, 2018

அம்பாறை மாவட்ட செயலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட உன்னதமான கலைஞர்கள் ஒன்றுகூடல் 2018

30.12.2018 (படங்கள்)

அம்பாறை மாவட்ட செயலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட உன்னதமான
கலைஞர்கள் ஒன்றுகூடல் நிகழ்வு  அட்டாளைச்சேனை மகாவித்தியாலய தேசிய பாடசாலை கேட்போர் கூட மண்டபத்தில் நேற்று(29)இடம்பெற்றது.

இந்நிகழ்வு ஜனாப் டி.எம்.ரிஸ்வான் மாவட்ட கலாசார உத்தியோகத்தர் அவர்களின் ஆலோசனையின் பேரில் கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் வழிகாட்டல் மற்றும் அனுசரணையில் அம்பாறை மாவட்ட செயலகத்தினால் மாவட்டத்திலுள்ள 13 தமிழ் மொழி மூல பிரதேச செயலகங்களை உள்ளடக்கி கலை கலாசார விழுமியங்களை வளர்த்து பாதுகாத்து அதனை அடுத்த  சந்ததியினருக்கு கொண்டு சென்று பாடுபடும் உன்னதமான கலைஞர்களை கௌரவிக்கும் நோக்கில் ஏற்பாடு  செய்யப்பட்டுள்ள கலைஞர்கள் ஒன்று கூடல் ஆகும்.

இந்நிகழ்வில் அம்பாறை மாவட்ட செயல தமிழ் பிரிவில் உள்ள கலைஞர்கள் கலந்துகொண்டு பலவகையான தங்களது திறமைகளை வெளிக்காட்டி இருந்தனர்.

அதேநேரம்  இறக்காமம் பிரதேச செயலகத்தில் இருந்து இறக்காமம் பிரதேச கலாச்சார உத்தியோகத்தர்களினால் 13 கலைஞர்கள்  தெரிவு செய்யப்பட்டு கலைஞர்களுக்கான  தேசிய அடையாள  அட்டை  வழங்கிவைக்கப்பட்டதோடு இதில் கலந்து கொண்ட சகல கலைஞர்களுக்கு பாராட்டுக்களும் கௌரவிப்பு ஞாபக சின்னங்கள் வழங்கிவைக்கப்பட்டது.

மேலும் இந்நிகழ்வு தலைமை
கே. விமலநாதன் அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் அவர்களினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந் நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்ட டி. எம். எல். பண்டாரநாயக்க அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர்

மாவட்ட அரசாங்க அதிபர் ஏ.பீர் முஹம்மத் உபதலைவர் மாவட்ட கலாசார அதிகார சபை

மேலதிக மாவட்ட அரசாங்க அதிபர் எஸ் நாகராஜா பொருளாளர் மாவட்ட கலாசார அதிகார சபை
மற்றும் அம்பாறை மாவட்ட 13 தமிழ் பிரதேச சபை செயலாளர்களும் கலந்துகொண்டு இந்நிகழ்வில் கௌரவிக்கப் பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

0 comments:

Post a Comment