Wednesday, September 19, 2018

கத்தார் தனியார் நிறுவனங்களின் 5% ஊழியர்கள் EXIT PERMIT இன்றி வெளியேற முடியாது!


  September 20, 2018 

கத்தார் வாழ் வெளிநாட்டு பணியாளர்கள் EXIT PERMIT இன்றி கத்தாரை விட்டு வெளியேற முடியும் என்ற சட்டம் அண்மையில் கொண்டுவரப்பட்டமை அனைவரும் அறிந்ததே.

என்றாலும் ஒவ்வொரு தனியார் நிறுவனங்களினதும் 5 வீதமான ஊழியர்கள் EXIT PERMIT இன்றி வெளியேற முடியாது என்பதாக தெறிவிக்கப்பட்டுள்ளது. நிறுவனங்களின் நிதிக்குப் பொறுப்பாக உள்ள 5 வீதமான ஊழியர்களே இவ்வாறு EXIT PERMIT இன்றி கத்தாரை விட்டு வெளியேற முடியாது.

இந்த 5 வீதமான ஊழியர்கள் யார் என்பதை அந்த நிறுவனமே தீர்மானித்து அதனை கத்தார் அரசாங்கத்துக்கு வழங்க வேண்டும் என கோறிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

மேலும் பணப்பரிமாற்ற நிறுவனங்கள் (Money  Exchange), தங்க ஆபரண விற்பனை நிலையங்கள் (Gold Shop) போன்றவற்றில் பணி புரிபவர்களுக்கும் இது பொருந்தும் என்பதாக கத்தார் செய்திகள் தெரிவிக்கின்றன.

0 comments:

Post a Comment