Thursday, September 27, 2018

திகன கலவரத்திற்கு முறையான விசாரணை தேவை - நாமல் ராஜபக்‌ஷ கோரிக்கை

9/27/2018

திகன கலவரத்தின் பின்னனியில் நல்லாட்சியும் நல்லாட்சி பொலிசாரும் இருந்துள்ளனர் என்ற சந்தேகம் மேலும்  வலுத்துள்ளதால் அதற்கான தனி விசாரணை கமிஷன் ஒன்றை அமைக்க வேண்டும் என ஹம்பாந்தோட்டை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்‌ஷ கோரிக்கை விடுத்துள்ளார்.

நேற்றுமுன்தினம் குருநாகல் பிரதேசத்தில் நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்ட அவர் கருத்து வெளியிடுகையில் மேற்கண்ட விடயத்தை அவர் குறிப்பிட்டார்.

அங்கு மேலும் கருத்து வெளியிட்ட அவர்,

இன்று நல்லாட்சியின் அடியாட்களாக  பொலிஸார் மாறியுள்ளனர்.ஜனாதிபதி மற்றும் முன்னாள் ஜனாதிபதியின் குடுப்ப உறுப்பினர்களை கொலை செய்ய திட்டம் தீட்டிய பிரதி பொலிஸ் மாஅதிபர் தொடர்பான விடயம்  தற்போது ஆதாரங்களுடன் அம்பலமாகியுள்ளது.இந்த பாரதூரமான விடயம் அம்பலமான  பின்னர் அதனை ஒரு பொருட்டாக இந்த அரசோ  பொலிஸ் திணைக்களமோ எடுக்கவில்லை. நாம் கொடுத்த அழுத்தம் காரணமாகவே சம்பவத்துடன் தொடர்புடைய டி ஐ ஜி கட்டாய விடுமுறையில் செல்ல பணிக்கப்பட்டுள்ளார்.நாம் அழுத்தம் கொடுத்திருக்காவிட்டால் இந்த விடயத்தைதும் அரசாங்கம் மூடி மறைத்திருக்கும்.

ஜனாதிபதி மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கொலை சதித்திட்டம் தவிர திகன கலவரம் தொடர்பிலும் பல்வேறுபட்ட தகவல்களை நாமல் குமார வெளியிட்டுள்ளார்.கலவரத்தை கட்டுப்படுத்தாமல் வேடிக்கை பார்த்த பொலிஸாரே கலவரத்தை திட்டமிட்டு  தூண்டிவிட்டு வேடிக்கை பார்த்ததாக பல்வேறு தரப்புகளில் இருந்து குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

திகன கலவரத்தின் பின்னனியில் இந்த அரசாங்கமும் பொலிஸாரும் இருந்துள்ளனர் என்ற சந்தேகம் இன்று மேலும் வலுவடைந்துள்ளது.

அலுத்கமைக்கு விசாரணை வைப்பதாக வாக்குறுதி வழங்கி ஆட்சிக்கு வந்த இந்த அரசாங்கம் கடந்த அரசாங்கத்தில்  நடைபெற்ற சிறு சம்பவங்களுக்கும் விசாரணை கமிஷன் வைத்து எம்மை பழிவாங்குகிறது.

அதே அரசு திகன கலவரம் தொடர்பில் விசாரணை கமிஷன் ஒன்றை வைக்க வேண்டும்.இல்லை என்றால் அந்த கலவரத்தின் முழுப்பொறுப்பையும் ஏற்க வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

வன்னி நியுஸ்

0 comments:

Post a Comment