Friday, September 21, 2018

2 பாலுறுப்புகள், 4 கால்களுடன் பிறந்த குழந்தை....

September 21, 2018 

உத்தரப்பிரதேச மாநிலம் கோரக்பூரில் நான்கு கால்கள் மற்றும் இரண்டு பாலுறுப்புகள் கொண்ட குழந்தை பிறந்தது. ஆனால், பிறந்த இரண்டாவது நாளில் குழந்தை இறந்துவிட்டது.

செப்டம்பர் 15 ஆம் நாளன்று கோரக்பூரின் சகஜ்னவா கிராமத்தில் உள்ள அரச வைத்தியசாலையில் இந்த குழந்தை பிறந்தது.

சம்பந்தப்பட்ட குடும்பத்தின் அருகில் வசிக்கும் ஒரு பெண், "குழந்தைக்கு நான்கு கால்களும், இரண்டு பாலுறுப்புகளும் இருந்தன. ஆனால், மலத்துவாரம் இல்லை. குழந்தையால் மலம் கழிக்க முடியவில்லை. இந்நிலையில், பிறந்த இரண்டு நாட்களுக்குள் குழந்தை இறந்துவிட்டது" என்று கூறினார்.

ஆனால் கருவுற்றிருந்த தாய்க்கு சோனோகிராஃபிக் பரிசோதனைகள் செய்யப்பட்ட போது, அதில் எல்லாமே சரியாக இருப்பதாகவே கூறப்பட்டதாக அந்த பெண் தெரிவிக்கிறார்.

இந்தியாவில், இத்தகைய குழந்தைகளை பார்க்கும் கண்ணோட்டங்கள் மாறுபடுகிறது. இதுபோன்ற குழந்தைகள் பிறப்பது சுபமானது என்று சிலர் சொன்னால், வேறு சிலரோ சாபத்தாலே இப்படி குழந்தைகள் பிறப்பதாக பயப்படுகிறார்கள். விசித்திரமான குழந்தைகள் இவை என்று ஆச்சரியப்படுகின்றனர் மற்றும் சிலர். ஆனால் இது போன்ற குழந்தைகள் பிறப்பது விசித்திரமானதா அல்லது எதாவது நோய் ஏற்பட்ட காரணத்தால் குழந்தைகள் இப்படி பிறக்கின்றன என்று சொல்லலாமா?

ஆனால், இதுபோன்ற குழந்தைகள் பிறப்பது ஆச்சரியமானது அல்ல என்கிறார் டெல்லி மேக்ஸ் வைத்தியசாலையின் சிறுநீரகத் துறை நிபுணர் டொக்டர் கபில் வித்யார்த்தி.

0 comments:

Post a Comment