Friday, August 31, 2018

ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு பிரதமர் விடுத்துள்ள அறிவுறுத்தல்


01.09.2018

அடுத்து இடம்பெறவுள்ள நாடாளுமன்ற அமர்வுகளில் ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் கட்டயமாக பங்கேற்க வேண்டும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில், எதிர்வரும் 3 ஆம் திகதி இடம்பெறவுள்ள ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களின் கூட்டத்திலும் அனைத்து உறுப்பினர்களும் பங்கேற்க வேண்டும் என பிரதமர் அறிவுறுத்தி உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

எதிர்வரும் நவம்பர் மாதம், 2019ஆம் ஆண்டுக்கான பாதீடு நாடாளுமன்றத்தில் விவாதத்திற்கு உட்படுத்தப்பட உள்ளது.

குறித்த காலப்பகுதியில், அரசாங்கம் பல முக்கிய பிரேரணைகளை நாடாளுமன்றில் நிறைவேற்ற தீர்மானித்திருப்பதால், ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களின் பங்கேற்பு கட்டாயமானது என பிரதமரால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதற்கமைய, குறித்த காலப்பகுதியில் நாடாளுமன்ற அமர்வுகளில் பங்கேற்பதை தடுக்கும் வகையிலான நிகழ்வுகளை கலந்துகொள்வதைத் தவிர்க்குமாறும் ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு பிரதமரால் அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

அடையாள அட்டை பெறுவதற்கான கட்டணம் இன்று முதல் அமுல்

September 1, 2018

தேசிய அடையாள அட்டையை பெற்றுக்கொள்வதற்காக அறவிடப்படுகின்ற கட்டணம் இன்று முதல் அமுல் செய்யப்பட்டுள்ளதாக ஆட்பதிவுத் திணைக்களம் அறிவித்துள்ளது.

அதன்படி 15 வயதை எட்டிய முதல் தடவையாக தேசிய அடையாள அட்டையை பெறுவோரிடமிருந்து 100 ரூபா கட்டணம் அறவிடப்படவுள்ளது.

அத்துடன், தேசிய அடையாள அட்டையை திருத்தி, அதன் இணைப்பிரதி ஒன்றை பெற்றுக்கொள்வதற்காக 250 ரூபா அறவிடப்படுவதுடன், காணாமல்போன அடையாள அட்டை ஒன்றின் இணைப் பிரதியை பெற்றுக்கொள்வதற்காக 500 ரூபா அறவிடப்பட உள்ளது .

எவ்வாறாயினும் வசதியின்மை காரணமாக கட்டணத்தை செலுத்த முடியாதோர் பிரதேச செயலாளரிடம் இருந்து பெற்றுக் கொள்ளப்பட்ட "கட்டணம் செலுத்த தேவையில்லை" என்ற உறுதியை விண்ணப்பத்துடன் இணைத்து அனுப்ப வேண்டும் என்றும் ஆட்பதிவுத் திணைக்களம் கூறியுள்ளது.

முதல் முறையாக தமிழ் படத்தில் நடிக்கும் அமிதாப் பச்சன்


September 1, 2018 

பாலிவுட்டில் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நடிகர் அமிதாப் பச்சன். இவர் 60 வருடங்களாக திரைத்துறையில் பல படங்களில் நடித்துள்ளார். ஆனால், இதுவரை தமிழ் படத்தில் நடித்ததில்லை. தற்போது முதல் முறையாக நேரடி தமிழ்ப்படத்தில் நடிக்க இருக்கிறார்.

இந்த படத்திற்கு ‘உயர்ந்த மனிதன்’ என்று பெயர் வைத்திருக்கிறார்கள். இப்படத்தில் இவருடன் எஸ்.ஜே.சூர்யா நடிக்கிறார். திருச்செந்தூர் முருகன் புரொடக்‌ஷன் சார்பில் சுரேஷ் கண்ணன் மற்றும் ஃபைவ் எலிமெண்ட்ஸ் பிக்சர்ஸ் இணைந்து தமிழ், மற்றும் இந்தியில் படமாக்க இருக்கிறார்கள்.

கள்வனின் காதலி படத்தை இயக்கிய தமிழ்வாணன் இந்த படத்தை இயக்குகிறார். மார்ச் 2019ல் படப்பிடிப்பு துவங்க உள்ளது. மற்ற நடிக, நடிகையர் மற்றும் தொழில் நுட்ப கலைஞர் தேர்வு நடைபெற்றுக் கொண்டு இருக்கிறது.

உயர்ந்த மனிதன் படம் குறித்து தமிழ்வாணன் கூறும்போது, ‘எனது கனவு நிறைவேறியது. இதை விட நான் வேறு என்ன கேட்டு பெற்று விட முடியும். உலகெங்கும் புகழ் பெற்று, இந்திய திரை உலகின் முடிசூடா மன்னனாக திகழும் அமிதாப் சாருடன் பணி புரிவது மிக பெரிய பாக்கியம். தமிழில் இவர் நடிக்கும் முதல் படம் என் இயக்கத்தில் தான் என்பதே எனக்கு மிக பெரிய பெருமை’ என்றார்.

"ஒரு துணை இயக்குனராக திரை உலகில் கால் பதிக்கும் காலத்தில் இருந்தே எனக்கு அமிதாப் சார் மீது அளவில்லாத பிரியம். அவருடன் இணைந்து நடிப்பது தான் எனக்கு கிடைத்த மிக பெரிய வரம்" என்கிறார் எஸ்.ஜே.சூர்யா.

கோதுமை மாவின் விலை அதிகரிப்பு

September 1, 2018

கோதுமை மாவின் விலையை அதிகரிப்பதாக பிரிமா நிறுவனம் அறிவித்துள்ளது. < br>
அதன்படி ஒரு கிலோகிராம் கோதுமை மாவின் விலையை 5 ரூபாவால் அதிகரிப்பதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த விலை அதிகரிப்பு நேற்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வருகின்றது.

புத்திஜீவிகளுக்கு அழைப்பு விடுக்கும் கோட்டாபய ராஜபக்ஷ

01.09,2018 

இலங்கையின் அனைத்து தேசப்பற்றுள்ள சக்திகளும் ஒன்றிணைந்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ள "மக்கள் சக்தி கொழும்புக்கு" என்ற அரச எதிர்ப்பு பேரணிக்காக செப்டம்பர் மாதம் 05ம் திகதி ஒன்று கூடுமாறு முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ கூறியுள்ளார்.

அனைத்து தொழிற்சங்கங்கள் மற்றும் புத்திஜீவிகளிடமும் அவர் இந்த வேண்டுகொளை விடுத்துள்ளார்.

நேற்று ஊடகங்களுக்கு வௌியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் கூறப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையின் முழு வடிவத்தை மேலே காணலாம்.

அததெரண

இப்படியுமா ? இரத்தினபுரி பிரதேசத்தை சேர்ந்த பெண் ஒருவருக்கு பேரதிர்ச்சி ஒன்றுறை கொடுப்பது .

01.09.2018

கடந்த காலங்களில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தம் காரணமாக தனது வீட்டை இழந்த பெண்ணுக்கு அரசாங்கம் வித்தியாசமான இழப்பீடு ஒன்றை வழங்கியுள்ளது

இரத்தினபுரி பிரதேசத்தை சேர்ந்த பெண்ணுக்கு 80 ரூபாய் இழப்பீடு காசோலை ஒன்று வழங்கப்பட்டுள்ளது.

இந்த காசோலை சமூகவலைத்தளங்களில் அதிகம் பேசப்பட்டுள்ளது. அந்த 80 ரூபாய் காசோலையை பெற்ற பெண் அதனை பேஸ்புக்கில் பதிவேற்றம் செய்துள்ளார்.

பொது மக்களின் வரிப்பணத்தில் அமைச்சர்கள் கோடி கணக்கில் வாகனங்கள் கொள்வனவு செய்யும் போது, பொது மக்களுக்கு 80 ரூபாய் இழப்பீடு வழங்குதென்பது மிகப்பெரிய அநீதி என இதனை பார்த்த சமூகவலைத்தள செயற்பாட்டார்கள் தெரிவித்துள்ளனர்.

JVPnews

திருமணமாகாத பாராளுமன்ற உறுப்பினர்களின் திருமண நிகழ்வு அலரி மாளிகையில் ..

August 31, 2018

திருமணமாகாத பாராளுமன்ற உறுப்பினர்களின் திருமண நிகழ்வை  அலரி மாளிகையில் நடத்த அனுமதி வழங்குவது பற்றி யோசிக்கலாமென பிரதமர் கூறியதாக சட்டம் ஒழுங்கு ராஜாங்க அமைச்சர் நலின் பண்டார குறிப்பிட்டார். 

தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு கருத்து வெளியிட்ட அவர் பிரதமரிடம் குறித்த விடயம் தொடர்பில் வினவிய போது  தன்னிடம் மேற்கண்டவாறு கூறியதாக குறிப்பிட்டார்.

திருமணமான பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு மீண்டும் திருமணம் செய்ய அலரிமாளிகை வழங்கப்படமாட்டாது  என பிரதமர் தன்னிடம் கூறியதாக அவர் குறிப்பிட்டார்.

விவசாயிகளுக்கு சேதனப் பசளை இலவசம்

August 31, 2018

சேதனப் பசளையை பயன்படுத்தி, விவசாய நடவடிக்கைகளில் ஈடுபடும் விவசாயிகளுக்கு, சேதனப் பசளையை இலவசமாக வழங்குவதற்கான சுற்று நிரூபத்தை, விவசாய அமைச்சு வெளியிட்டுள்ளது.

அடுத்த மாதம் முதல், விவசாயிகளுக்கு சேதனப் பசளை நிவாரணங்களை வழங்க அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

ஞானசார தேரரின் மேன்முறையீட்டு மனு நிராகரிப்பு

August 31, 2018

பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் சார்பில் முன்வைக்கப்பட்ட மேன்முறையீட்டு மனு இன்று (31) மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் நிராகரிக்கப்பட்டது.

நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டில் தேரர் குற்றவாளி என முன்னர் வழங்கப்பட்ட நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக இந்த மனு முன்வைக்கப்பட்டிருந்தது.
கலகொட அத்தே ஞானசார தேரருக்கு இரண்டு குற்றச்சாட்டுகளில் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டு சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தேர்தல் ஆணைக்குழுவினால் பொதுமக்களிடம் வேண்டுகோள்

August 31, 2018

தற்காலிக வாக்காளர் இடாப்பில் தத்தமது பெயர்கள் உள்ளடக்கப்பட்டுள்ளதா என்று உறுதிப்படுத்திக் கொள்ளுமாறு தேர்தல்கள் ஆணைக்குழு பொதுமக்களிடம் வேண்டுடகோள் விடுத்துள்ளது.

வாக்காளர் இடாப்பு மாவட்ட தேர்தல் அலுவலகம், பிரதேச செயலகம், உள்ளூராட்சி மன்றங்கள் மற்றும் கிராம சேவகர் அலுவலகங்களில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதுதவிர தேர்தல்கள் ஆணைக்குழுவின் www.elections.gov.lk இணையத்தளத்திலும் வாக்காளர் இடாப்பில் தமது பெயர்கள் இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளமுடியும் என்று அந்த ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

4 தேரர்களுக்கு பிடியாணை

August 31, 2018

பொதுச் சொத்துகளுக்கு சேதம் விளைவித்தனர் என்ற குற்றச்சாட்டின் கீழ், வண. பெங்கமுவே நாலக்க, இத்தாகந்த சத்தாதிஸ்ஸ, மாளிகாகந்த சுத்தா மற்றும் மடிலே பன்னலோகோ ஆகிய நான்கு தேரர்களுக்கும் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Daily Ceylon

கிழக்கு வலயக்கல்வி பணிப்பாளர்கள் தாய்லாந்தில் நடைபெறும் செயலமர்விற்கு சுற்றுப்பயணம்

August 31, 2018

கிழக்கு மாகாணத்தில் உள்ள ஐந்து வலயக்கல்வி பணிப்பாளர்கள் தாய்லாந்து நடைபெறும் கல்விப்பயிற்ச்சி செயலமர்வில் கலந்து கொள்வதற்காக சுற்றுப்பயணம் மேற்கொள்ளுகின்றார்கள்.

"சர்வதேச கல்விபோக்கும்;புதிய கல்விக்கொள்கையும்" எனும் செயற்திட்டத்தின் மூலம் கிழக்கு மாகாணத்தில் இருந்து தெரிவுசெய்யப்பட்ட ஐந்து வலயக்கல்வி பணிப்பாளர்கள் தாய்லாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம்  வெள்ளிக்கிழமை(31) இரவு கட்டுநாயக்க விமானநிலையத்தில் இருந்து தாய்லாந்து நாட்டுக்கு பயணம் மேற்கொள்கின்றார்கள்.

கிழக்கு மாகாண கல்வித்திணைக்கள பரிபாலனத்தின் கீழுள்ள கிண்ணியா வலயக்கல்வி பணிப்பாளர் திருமதி.நளீம், திருக்கோவில் வலயக்கல்வி பணிப்பாளர் திருமதி.நகுலேஸ்வரி புள்ளநாயகம், தெஹியத்தகண்டி வலயக்கல்வி பணிப்பாளர் தருமசேன, கந்தளாய் வலயக்கல்வி பணிப்பாளர் அபநாயக்க, திருகோணமலை வடக்கு வலயக்கல்வி பணிப்பாளர் றுவான்சேன ஆகிய வலயக்கல்வி பணிப்பாளர்கள் இவ்வாறு தாய்லாந்து நாட்டில் நடைபெறும் கல்விப்பயிற்சியில் கலந்து கொள்ளவுள்ளார்கள்.

முதலாம் திகதி முதல் (1-7) ஏழாம் திகதி வரையும் தாய்லாந்தில் தரித்து நின்று பயிற்சி செயலமர்வில் கலந்துகொள்கின்றார்கள் என கிழக்கு மாகாண மேலதிக கல்விப்பணிப்பாளர் எஸ்.மனோகரன் தெரிவித்தார்.

(க. விஜயரெத்தினம்)

வெல்லாவெளியில் 4 காட்டு யானைகளுக்குள் மாட்டிகொண்ட இளைஞன் ! சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு !

August 31, 2018
 
றாணமடு மாலையர்கட்டு கிராமத்தில் காட்டுயானையினால் தாக்கப்பட்டு இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாலையர்கட்டு கிராமத்தில் இன்று வெள்ளிக்கிழமை (31.8.2018) அதிகாலை 5.30 மணியளவில் அவரது வீட்டு வளாகத்தில் இடம்பெற்றுள்ளது.

வீட்டில் உறங்கி கொண்டிருந்த போது பிரதேசத்தில் காட்டுயானைகள் ஊருக்குள் நுழைவதாக பொதுமக்கள் அல்லோகலப்பட்டு பொதுமக்கள் உயிரை காப்பாற்றுவதற்கு ஓடினார்கள்.

அதே வேளை குறித்த இளைஞரும் ஓடினான். எதிரே வந்த நான்கு யானைகளுக்குள் இளைஞர் அகப்பட்டுக்கொண்டான். இதனால் கோபத்தில் வந்த யானை இளைஞரை அடித்து தூக்கிவீசியது. தலையில் ஏற்பட்ட காயத்தினால் மாலையர்கட்டு கிராமத்தை சேர்ந்த சிவலிங்கம் லயனிதன் (வயது18) என்பவரே ஸ்தலத்தில் காட்டுயானையின் தாக்குதலில் உயிரிழந்துள்ளார்.

காட்டுயானைகள் மட்டக்களப்பு மாவட்டத்தின் எல்லைக்கிராமங்களுக்குள் நுழைந்து பொதுமக்களை தாக்குவதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளார்கள். பிரதேசத்திற்கு பொறுப்பான வனஜீவராசி திணைக்கள பொறுப்பதிகாரிகள் பொதுமக்களை பாதுகாப்பதில் கவனமெடுக்கத் தவறுகின்றார்கள் என வெல்லாவெளி பிரதேச பொதுமக்கள், பொது அமைப்புக்களின் பிரதிநிதி கள் கவலை தெரிவிக்கின்றார்கள். தற்போது பொதுமக்களின் உதவியுடன் சடலம் மீட்கப்பட்டு மத்தியமுகாம் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

மேலதிக விசாரணைகளை வெல்லாவெளி பொலிசார் மேற்கொண்டு வருகின்றார்கள்.

(க. விஜயரெத்தினம்)

அரசாங்கத்திலிருந்து விலக ஸ்ரீ ல.சு.கட்சிக்கு கால அவகாசம்- டிலான் எம்.பி.

August 31, 2018

அரசாங்கத்துக்குள் இருக்கும் ஸ்ரீ ல.சு.கட்சி உறுப்பினர்கள் கட்சியின் வருடாந்த கூட்டத்துக்கு முன்னர் தேசிய அரசாங்கத்திலிருந்து வெளியேறாது போனால், 15பேர் கொண்ட குழு ஐக்கிய தேசியக் கட்சிக்கு எதிரானவர்களுடன் இணைந்து ஸ்ரீ ல.சு.க.யின் அதிகாரத்தைக் கைப்பற்றவுள்ளதாக பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா தெரிவித்தார்.

கட்சியின் புனரமைப்பு நடவடிக்கையின் போது ஸ்ரீ ல.சு.க. அவசியம் அரசாங்கத்திலிருந்து வெளியேற வேண்டும். தற்பொழுதும், பிரேரணையொன்றாக இந்த விடயம் மத்திய செயற்குழுவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

நேற்று (30) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் குறிப்பிட்டார்.  

Daily Ceylon

Thursday, August 30, 2018

இ.போ.ச. ஊழியர்களுக்கு சம்பள அதிகரிப்பும், போனஸ் கொடுப்பனவும்- அமைச்சர் நிமல்

August 31, 2018

இலங்கை போக்குவரத்துச் சேவை ஊழியர்களின் சம்பளத்தை விரைவில் அதிகரிக்க நடவடிக்கை எடுப்பதாக போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.

இ.போ.சபையை இலாபம் உழைக்கும் நிறுவனமாக கொண்டுவர உழைத்தவர்களுக்கு சம்பள உயர்வு வழங்கப்பட வேண்டும் எனவும், இதற்கான பிரேரணையை விரைவில் அமைச்சரவைக்கு கொண்டுவரவுள்ளதாகவும் அமைச்சர் கூறியுள்ளார்.

இதற்கு மேலதிகமாக, வருட இறுதியில் ஊழியர்களுக்கு 10 ஆயிரம் ரூபா போனஸ் வழங்கவும் அமைச்சு கவனம் செலுத்தி வருகின்றது.

இ.போ.சபையில் தற்பொழுது 30463 ஊழியர்கள் உள்ளனர். இதன் ஒருநாள் வருமானம் 100 மில்லியன் ரூபாய் எனவும் அமைச்சர் கூறியுள்ளார். கடந்த 2017 ஆம் ஆண்டு இதன் வருமானம் 1618 மில்லியன் ரூபா எனவும், இந்த தொகை 2018 ஆம் ஆண்டு 2000 மில்லியனாக அதிகரித்துள்ளதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இ.போ.சபையிடம் தற்பொழுது 6100 பஸ்கள் காணப்படுவதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்

கருக்கலைப்பிற்கு விளம்பரமிட்ட வைத்தியர்களுக்கெதிராக வழக்கு..

August 30, 2018

தங்கள் சேவைகளை இணையத்தில் பட்டியலிட்ட இரண்டு பெண் மருத்துவர்கள் பட்டியலில் கருக்கலைப்பையும் சேர்த்ததால் விசாரணைக்குள்ளாகியுள்ளனர்.

ஜேர்மனியைச் சேர்ந்த Natascha Nicklaus மற்றும் Nora Szász என்னும் இருவரும் மகளிர் நல மருத்துவர்கள். தங்கள் சேவைகளை இணையத்தில் பட்டியலிடும்போது அதில் கருக்கலைப்பும் இருந்ததால், ஆதாயத்திற்காக கருக்கலைப்பை விளம்பரம் செய்த குற்றத்திற்காக அவர்கள் மீது கருக்கலைப்பிற்கு எதிராக பிரச்சாரம் செய்யும் Pro-life campaigners என்னும் அமைப்பினர் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

ஆனால் மருத்துவர்கள் தரப்பு அவர்கள் மீது வழக்கு தொடரப்பட்டிருக்கும் குறிப்பிட்ட பிரிவு ஜேர்மன் அரசியல் சாசனச் சட்டத்தின் பல பிரிவுகளுடன் முரண்படுவதால் அவர்கள் வழக்கிலிருந்து விடுவிக்கப்பட வேண்டும் என கோரியுள்ளது.

அதுமட்டுமின்றி சுய ஆதாயத்திற்காக தாங்கள் கருக்கலைப்பை விளம்பரம் செய்யவில்லை என்றும் மருத்துவர்கள் தரப்பு வாதிட்டுள்ளது. தங்கள் நோக்கம் எதிர்பாராமல் கர்ப்பம் தரிக்கும் பெண்களுக்கு ஆதரவாக நிற்பதுதான் என்பதை நோயாளிகளுக்கு தெரிவிப்பதே என்று Nicklaus தெரிவித்துள்ளார்.

அது மட்டுமின்றி ஒரு பெண் கர்ப்பகாலம் முழுவதும் செலுத்தும் மருத்துவ கட்டணத்தை விட கருக்கலைப்பு செய்வதால் கிடைக்கும் வருமானம் மிகக் குறைவு என்றும் அவர் தெரிவித்துள்ளார். அத்துடன் தங்கள் வழக்கு தோற்குமானால் வழக்கை மேல் நீதிமன்றத்திற்கு கொண்டு செல்ல தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

தீபாவளியின் வெற்றி யாருக்கு ? … களத்தில் குதிக்கும் இரு முன்னணி நடிகர்களின் படங்கள்

August 30, 2018 

சர்கார் தளபதி விஜய் நடிப்பில் பிரமாண்டமாக உருவாகியுள்ள படம். இப்படம் ரசிகர்கள் மத்தியில் செம்ம எதிர்ப்பார்ப்பில் உள்ளது.இந்த நிலையில் சர்கார் படம் சோலோவாக தான் ரிலிஸாகும் பாக்ஸ் ஆபிஸில் சாதனையை படைக்கும் என்று எதிர்ப்பார்த்தார்கள்.NGK

தீபாவளிக்கு வருவதாக சொல்லி தற்போது தள்ளிப்போனதாக கூறப்படுகின்றது, இவை எந்த அளவிற்கு உண்மை என்றும் தெரியவில்லை.இப்போது போட்டியில் தனுஷின் என்னை நோக்கி பாயும் தோட்டாவும் இணைந்துள்ளது,

இப்படம் வந்தால் கண்டிப்பாக சர்கார் வசூலுக்கு பாதிப்பு அதிகம் தான் என கூறப்படுகின்றது.

கூட்டு எதிரணியின் பேரணியில் சில ஐ.தே.க.வினரும் இணைவர்"

2018-08-30

கூட்டு எதிரணியினர் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் ஏற்பாடு செய்துள்ள மக்கள் எழுச்சிப் பேரணியில் கூட்டு எதிர்க் கட்சியினர் மாத்திரமல்லாது, ஐக்கிய தேசியக் கட்சியின் ஒரு தரப்பினரும் இணைந்து கொள்ளவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

பொராளை என்.எம்.பெரேர நிலையத்தில் இன்று இடம்பெற்ற கூட்டு எதிரணியின் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

மேலும் கூட்டு எதிரணியின் இந்த பேரணியால் செப்டெம்பர் மாதம் 05 ஆம் திகதி முழுக் கொழும்பும் ஸ்தம்பிதமடைவதனால் அன்றைய தினம் அலுவலகங்களில் தமது தேவைகளை பூர்த்தி செய்வதற்கு எவராவது திட்டமிட்டிருப்பின் அவர்கள் அந்த பணியினை வேறு ஓர் தினத்திற்கு மாற்றிக் கொள்ளுமாறும் கேட்டுக் கொண்டுள்ளார்.

அத்துடன் அன்றைய தினம் பாடசாலைகளை நடத்துவதிலும் சிக்கல் ஏற்படும் என்றும் தெரிவித்த அவர், மக்கள் எழுச்சிப் பேரணியை முடக்குவதற்கு அரசாங்கம் பல்வேறு சதிமுயற்சிகளில் கவனம் செலுத்தி வருவதாகவும் சுட்டிக்காட்டினார்.

(எம்.சி.நஜிமுதீன்)
வீரகேசரி

ஞானசார தேரருக்கு ஏற்பட்ட பரிதாப நிலைமை..


30.08.2018

சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ள பொதுபல சேனாவின் பொது செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர், இன்று சிறி ஜயவர்தனபுர வைத்தியசாலையில் இருந்து வெலிக்கடை சிறைச்சாலை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.

சிறி ஜயவர்தனபுர வைத்தியசாலையின் பணிப்பாளர் இதனைத் தெரிவித்துள்ளார்.

எனினும் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 4ம் திகதி மீண்டும் அவர் சிறி ஜெயவர்தனபுர வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்படவுள்ளார்.

அவருக்கு மேற்கொள்ளப்பட்ட சத்திரசிகிச்சையை அடுத்து, உடல்நிலை குறித்த ஆய்வுக்காக அவர் மீண்டும் அங்கு அழைத்துச் செல்லப்படவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் கடந்த தினம் அவருக்கு 6 ஆண்டுகால கடூழிய சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

தண்டனை அறிவிக்கப்படும் போது, சிறுநீரக தொகுதி கோளாறு காரணமாக அவர் சிறி ஜயவர்தனபுர வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

அர்ஜுன மகேந்திரனை நாட்டுக்கு கொண்டு வர தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன

August 30, 2018 

முன்னாள் மத்திய வங்கியின் ஆளுநர் அர்ஜுன மகேந்திரனுக்கு எதிரான அனைத்து சட்ட நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாக சட்ட மா அதிபர் திணைக்களம் நீதிமன்றத்துக்கு தெரியப்படுத்தியுள்ளது.

அவரை இலங்கைக்கு கொண்டு வருவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தாம்பத்தியம் இன்றி குழந்தை பெற்ற அதிசய ஜோடி!

August 30, 2018

இங்கிலாந்தில் நர்தம் பெர்லேண்ட் பகுதியை சேர்ந்த ஜோடி கெர்ரி ஆலன்-அலி தாம்சன். கடந்த 2014-ம் ஆண்டு இவர்கள் 2 பேரும் ஒரு உணவகத்தில் சந்தித்தனர். பின்னர் இவர்கள் 2 பேரும் திருமணம் செய்யாமல் ஒன்றாக வாழ்ந்தனர். அதே நேரத்தில் தாம்பத்தியம் வைத்துக் கொள்ளாமல் குழந்தை பெற முடிவு செய்தனர்.

அதுகுறித்து இணைய தளத்தில் தேடினர். அப்போது தான் ‘டர்கி பாஸ்டர்’ முறையின் மூலம் குழந்தை பெற முடியும் என தெரியவந்தது. அதன்பின்னர் 3 பவுண்டு செலவில் ஊசி ஒன்றை சூப்பர் மார்க்கெட்டில் வாங்கினர். அதன் பின்னர் ஊசியில் எடுக்கப்பட்ட அலி தாம்சனின் விந்தணுவை கெர்ரி ஆலனின் கர்ப்பபையில் செலுத்தினர்.

இப்படி 4 முறை செய்த போது அவர் கர்ப்பம் அடையவில்லை. தொடர்ந்து 5-வது முறை செய்தபோது கர்ப்பம் அடைந்தார். அதை தொடர்ந்து கடந்த மே 23-ந் திகதி இவர்களுக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. கெர்ரி ஆலன் ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து பெற்றவர். குடும்ப வாழ்வில் அதிகம் கஷ்டப்பட்டதால் திருமண வாழ்வில் அவருக்கு உடன்பாடு இல்லை. அலி தாம்சன் ஓரின சேர்க்கையாளர் என்பதால் திருமணம் செய்ய விரும்பவில்லை.

எனவே தான் ‘டர்கி பாஸ்டர்’ முறையில் குழந்தை பெற்றனர். இந்த முறையில் ஆஸ்பத்திரிக்கு செல்லாமல் வீட்டிலேயே செயற்கை முறையில் கருத்தரித்து குழந்தைபெற முடியும்.