, 22 JULY 2018
பணிப் பெண்ணாக வெளிநாடு சென்ற மஹவ – பொல்பித்திகம – கதுருவௌ பிரதேசத்தைச் சேர்ந்த பெண்ணொருவர் குவைட் வானூர்தி நிலையத்தில் வைத்து காணாமல் போயுள்ளதாக பெண்ணின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
46 வயதான அவர் இரண்டு பிள்ளைகளினது தயார் எனவும் பொருளாதார பிரச்சினை காரணமாக கடந்த 2016ஆம் ஆண்டு வெளிநாடு சென்றதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்தநிலையில், கடந்த 12ஆம் திகதி மீண்டும் நாடு திரும்பும் பொருட்டு அவர் குவைட் வானூர்தி நிலைத்திற்கு வந்த நிலையில் காணாமல் போயுள்ளதாக உறவினர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
அவரை வானூர்தி நிலையத்திற்கு அழைத்து வந்ததாக கூறப்படும், குறித்த வீட்டில் பணியாற்றும் சாரதி மீதே தமக்கு சந்தேகம் நிலவுவதாக உறவினர் ஒருவர் எமது செய்தி சேவைக்குத் தெரிவித்தார்.






0 comments:
Post a Comment