Friday, July 27, 2018

6 லட்சம் பேரை அதிரவைத்த மலேசிய அரசாங்கத்தின் நடவடிக்கை - நீங்களும் அதில் ஒருவரா?

July 27.2018

மலேசியாவில்  சுமார் 6 லட்சம் பேரை சரணடையுமாறு, அந்நாட்டு அரசாங்கம் அதிரடியான உத்தரவை பிறப்பித்துள்ளது.

குறித்த 6 லட்சம் பேரும் சட்டவிரோத குடியேறிகள்  என்று அடையாளப்படுத்தப்பட்டுள்ளனர்.

மலேசியாவில் கடந்த ஜூலை 1ம் தேதி முதல் சட்டவிரோதமாக பணியாற்றும் வெளிநாட்டு தொழிலாளர்களை கண்டறியும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

அதன்படி, இதுவரை 3,000 வெளிநாட்டு தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன், ஏனையோரை கண்டறிய தீவிர நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், சட்டவிரோதமாக குடியேறியவர்கள் ஓகஸ்ட் 30க்குள் சரணடைய வேண்டும் என்றும், இல்லையேல் அவர்களை பணியமர்த்தும் நிறுவனங்களின் பொறுப்பாளர்களும் கைது செய்யப்படுவார்கள் என்றும் மலேசிய அரசாங்கம் எச்சரித்துள்ளது.

கடந்த வருடத்தின் கணக்குப்படி, மலேசியாவில் இந்தோனேசியா, பங்களாதேஷ் மற்றும் மியான்மர் போன்ற வெளிநாடுகளை சேர்ந்த 6 லட்சம் பேர் சட்டவிரோதமாக பணியாற்றி வருகின்றனர்.

எது எவ்வாறாக இருப்பினும் மலேசியாவில் தேயிலை தோட்டங்கள், கட்டுமானப் பணிகள், உணவகங்கள், ஷாப்பிங் மால்கள் உள்ளிட்ட பல இடங்களில் வெளிநாட்டவர்கள் பணியாற்றி வருகின்றனர்.

இவற்றில் சுமார் 20 லட்சம் வெளிநாட்டு தொழிலாளர்கள் பணியாற்றுகின்றனர் என்று, மலேசிய குடிவரவுத்துறை இயக்குனர் ஜெனரல் முஸ்தபர் அலி தெரிவித்துள்ளார்.

0 comments:

Post a Comment