Saturday, July 28, 2018

2014 அளுத்கம தர்காநகர் நஷ்டயீடு: பதிவு செய்ய தவறியோர் மீண்டும் விண்ணப்பிக்லாம்

28.07.2018

அளுத்­கம மற்றும் தர்கா நகர் பகு­தி­களில் இடம்­பெற்ற வன்­செ­யல்­க­ளை­ய­டுத்து அப்­ப­கு­தி­களில் இழப்­பீ­டு­களை மதிப்­பீடு செய்­வ­தற்­காக அர­சாங்க அதி­ப­ரினால் மதிப்­பீட்­டுக்­குழு அனுப்­பப்­பட்ட சந்­தர்ப்­பத்தில் தமது வீடு­க­ளி­லி­ருந்தும் வெளி­யி­டங்­க­ளுக்கு இடம் பெயர்ந்­தி­ருந்த பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளுக்கும் புனர்­வாழ்வு அதி­கார சபை நஷ்­ட­ஈடு வழங்­க­வுள்­ளது.

வன்­செ­யல்­க­ளினால் பாதிக்­கப்­பட்டு வெளி­யி­டங்­களில் உற­வி­னர்கள் வீடு­களில் தங்­கி­யி­ருந்­த­தனால் அவ்­வா­றா­ன­வர்­களால் நஷ்­ட­ஈடு கோரி விண்­ணப்­பிக்க முடி­யா­மற்­போ­யுள்­ளது. இது­தொ­டர்பில் பலர் புனர்­வாழ்வு அதி­கார சபைக்கு முறை­யிட்­டுள்­ளார்கள் என புனர்­வாழ்வு அதி­கார சபையின் மேல­திக பணிப்­பாளர் எஸ்.எம்.பதுர்தீன் விடி­வெள்­ளிக்குத் தெரி­வித்தார்.

இவ்­வா­றா­ன­வர்கள் புனர்­வாழ்வு அதி­கார சபையில் நஷ்­ட­ஈடு கோரு­வ­தற்­கான விண்­ணப்­பங்­களைப் பெற்­றுக்­கொள்ள முடி­யு­மென்றும் அவர் கூறினார்.

விண்­ணப்­பங்கள் தேவை­யான ஆவணங்களுடன் கிராம சேவகர் மற்றும் பிரதேச செயலாளரின் சிபாரிசுகளுடன் அனுப்பி வைக்கப்பட வேண்டுமெனவும் தெரிவித்தார்.

Thanks: Vidivelli

0 comments:

Post a Comment