Friday, July 27, 2018

ஸ்ரீ ல.சு.கட்சியுடன் முஸ்லிம்களை இணைக்க புதிய முஸ்லிம் முன்னணி

July 27, 2018

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் முஸ்லிம் வாக்குகளைப் பலப்படுத்தும் வகையில்  முஸ்லிம் முன்னணி என புதிய அமைப்பொன்றை உருவாக்க கட்சி தீர்மானித்துள்ளதாக ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் பேராசிரியர் ரோஹண லக்ஷ்மன் பியதாச தெரிவித்துள்ளார்.

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் புனரமைப்பு வேலைத்திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் உள்ள முஸ்லிம் மக்களின் ஆதரவை கட்சியின் எதிர்கால நடவடிக்கைகளுக்கு நேரடியாக பெற்றுக் கொள்வது இதன் நோக்கம் எனவும் அவர் கூறியுள்ளார்.

மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாக தேர்தலில் வெற்றி பெற்று ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைமைப் பொறுப்பை ஏற்றதன் பின்னர், கட்சியை விட்டும் தூரமாகியிருந்த முஸ்லிம்கள் மீண்டும் கட்சியுடன் நெருக்கமாகியுள்ளதாகவும் பேராசிரியர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அமைச்சர் பைஸர் முஸ்தபாவின் தலைமையின் கீழ் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் முஸ்லிம் முன்னணி அமைக்கப்படவுள்ளதாகவும் இந்த முன்னணியின் வேலைத்திட்டம் கொழும்பிலிருந்து நாடு முழுவதற்கும் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் ரோஹண லக்ஷ்மன் பியதாச குறிப்பிட்டுள்ளார். 

0 comments:

Post a Comment