Friday, July 27, 2018

பொது மக்களுக்கான ஓர் செய்தி...!!

, 28 JULY 2018

பலங்கொட - சமனலவத்த பிரதேசத்தினை சேர்ந்த காணாமல்போன   10 வயது சிறுவனை கண்டால் அறிவிக்க இரு தொலைபேசி இலக்கங்கள் காவற்துறையினால் வழங்கப்பட்டுள்ளது.

பலங்கொட காவற்துறை நிலைய பொறுப்பதிகாரியின் கைபேசி இலக்கத்திற்கு  0718 591 388 அல்லது பலங்கொட காவற்துறை நிலைய பொறுப்பதிகாரியின் அலுவலக இலகத்திற்கு  045 22 87 422 தகவல் வழங்குமாறு கோரப்பட்டுள்து.

குறித்த சிறுவன் காணாமல் சென்று இன்றுடன் 09 நாட்கள் என்பதுடன் இதுவரையில் எவ்விதமான தகவலும் கிடைக்கபெறவில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் சிறுவனை தேடும் நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருதவாக குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த 20 ஆம் திகதி குறித்த சிறுவன் காணாமல் போயுள்ளமை குறிப்பிடத்தக்கது.

0 comments:

Post a Comment