Sunday, July 29, 2018

நாட்டுக்கு எப்படியான ஜனாதிபதி தேவை- அத்துரலிய ரத்ன தேரர் விளக்கம்

July 29, 2018

நாட்டின் அடுத்த ஜனாதிபதியைத் தெரிவு செய்வதற்கு தேவையான கொள்கைகளை வகுத்து அதனை மக்கள் மயப்படுத்தும் வேலைத்திட்டமொன்றை முன்னெடுப்பது தனது அடுத்த கட்ட நடவடிக்கை என பாராளுமன்ற உறுப்பினரும் ஹெல உறுமய கட்சியின் மத்திய சபை உறுப்பினருமான அத்துரலிய ரத்ன தேரர் தெரிவித்துள்ளார்.

அடுத்த ஜனாதிபதி நாட்டின் மீது அன்புள்ள, நிலையான அபிவிருத்தித் திட்டங்கள் குறித்து உறுதியான நிலைப்பாடுள்ள, மக்களின் ஏழ்மையை கண்களால் கண்ட, ஒரு ஆற்றல் மிக்க தலைவராக இருக்க வேண்டும் என நான் நினைக்கின்றேன் எனவும் தேரர்  கூறியுள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் தேரர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.  

0 comments:

Post a Comment