Thursday, July 26, 2018

மூவரடங்கிய விசேட மேல் நீதிமன்றத்தில் முதலாவது குற்றப்பத்திரிகை தாக்கல்

, 26 JULY 2018

மூவரடங்கிய விஷேட மேல்நீதிமன்றத்தின் முதலாவது வழக்கு விசாரணைக்காக காமினி செனரத், பியதாச குடாபாலகே, நீல் பண்டார ஹபுஹின்ன மற்றும் லசந்த பண்டார ஆகியோருக்கு எதிராக குற்றப்பத்திரங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

எமது செய்தி சேவைக்கு சட்டமா அதிபர் திணைக்களம் இதனை உறுதிப்படுத்தியது.

முன்னாள் ஜனாதிபதி செயலணியின் பிரதானி காமினி செனரத் இலங்கை காப்புறுதி கூட்டுதாபனத்தின் முன்னாள் பணிப்பாளர்களான பியதாச குடாபாலகே மற்றும் நீல் ஹபுகின்ன ஆகியோருக்கு எதிராக அரச பணத்தை முறையற்ற வகையில் கையாண்டமை தொடர்பில் முன்னதாக குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டிருந்தன.

இலங்கை காப்புறுதி கூட்டுதாபனத்திற்கு உட்பட்ட நிறுவனம் ஒன்றின் கீழ் கொள்ளுப்பிட்டி பிரதேசத்தில் நிர்மாணிக்கப்படும் விருந்தக செயற்திட்டத்திற்காக அமைச்சரவை அனுமதியுடன் ஒதுக்கப்பட்ட 185 பில்லியன் ரூபா பணத்தில் 4 பில்லியன் ரூபா சட்டவிரோதமாக ஹம்பாந்தொட்டை பிரதேச விருந்தக செயற்திட்டத்திற்காக பயன்படுத்தியதாக கூறப்படும் சம்பவம் தொடர்பிலே அவர்களுக்கு எதிராக குற்றப்பத்திரங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
Hirunews

0 comments:

Post a Comment