Friday, July 27, 2018

சவுதி மதினா விமான நிலையத்தில் 185,360 ஹஜ் யாத்ரீகர்கள் வருகை!


 July 27, 2018

நடப்பு ஹஜ் யாத்திரைக்காக ஜித்தா மற்றும் மதினா விமான நிலையங்களுக்கு ஹஜ் யாத்ரீகர்கள் வந்து குவிந்தவண்ணமுள்ளனர். மதினா விமான நிலையத்தின் வாயிலாக கடந்த திங்கட்கிழமை நிலவரப்படி சுமார் 185,360 வந்திறங்கியுள்ள நிலையில் சுமார் 159,599 பேர் மட்டுமே தொடர்ந்து இங்கேயே தங்கியுள்ளனர், எஞ்சியவர்கள் புனித மக்கா நகருக்கு சென்றுவிட்டனர்.

மதினா விமான நிலையம் மணிக்கு 3,800 பயணிகள் வருகை மற்றும் 3,500 பயணிகளின் புறப்பாடுகளை கையாளும் திறன்மிக்கவை. மதினா விமான நிலையத்தில் ஹஜ் பயணிகளுக்காக 14 லவுஞ்சுகளுடன் 192 இமிக்கிரேசன் கவுன்டர்களும், 18 நுழைவாயில், 10 கன்வேயர் பெல்ட்டுகளும் உள்ளன. மதினா விமான நிலையத்தில் ஒரே நேரத்தில் 26 விமானங்களை நிறுத்த முடியும்.

மதினா விமான நிலையத்தில் இதுவரை துருக்கியிலிருந்து 38,318 பேர்கள், இந்தோனேஷியாவிலிருந்து 34,968 பேர்கள், இந்தியாவிலிருந்து 25,267 பேர்கள், பாகிஸ்தானிலிருந்து 21,585 பேர்கள், ஆப்கானிஸ்தானிலிருந்து 10,518 பேர்களும் ஹஜ் யாத்திரைக்காக வந்திறங்கியுள்ளனர். தனியார் ஹஜ் ஏற்பாட்டு நிறுவனங்களின் ஹஜ் வழிகாட்டி குழுக்களின் தலைவர் ஹாத்திம் பாலி அவர்கள், இந்த வருடம் சுமார் 1.8 மில்லியன் ஹஜ் பயணிகள் மதினா விமான நிலையம் வழியாக வருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதாக கூறினார்.

ஜித்தா விமான நிலையம் வழியாக கடந்த ஞாயிற்றுக்கிழமை வரை 54,619 ஹஜ் யாத்ரீகர்கள் 278 விமானங்கள் மூலம் பல நாடுகளிலிருந்தும் வந்திறங்கியுள்ளனர். இது கடந்த ஆண்டைவிட 28% அதிகமாகும்.

Source: Saudi Gazette

0 comments:

Post a Comment