Sunday, July 29, 2018

ஐரோப்பிய நாடுகளுக்கு முஸ்லிம் பெண்கள் செல்வது கவனம்- எமிரேட்ஸ் அமைச்சு

July 30. 2018

ஐரோப்பிய ஒன்றி நாடுகளுக்கு விஜயங்களை மேற்கொள்ளும் முஸ்லிம் பெண்கள் அந்நாட்டில் அமுலிலுள்ள சட்டங்களை மதித்து  செயற்படுமாறு எமிரேட்ஸ் வெளிவிவகார அமைச்சு அறிவித்தல் ஒன்றின் மூலம் அந்நாட்டுப் பெண்களைக் கேட்டுள்ளது.

ஒஸ்டிரியா, பெல்ஜியம், பிரான்சு, சுவிட்சர்லாந்து, ஓலாந்து, ஜேர்மன், ஸ்பெய்ன், இத்தாலி மற்றும் பல்கேரியா போன்ற நாடுகளில் முகத்தை மூடி ஆடை அணிவது தடை செய்யப்பட்டுள்ளது. இதனால் இவற்றைப் பின்பற்றி நடந்துகொள்ளுமாறும் அவ்வமைச்சு கோரியுள்ளது.
பெரும்பாலான நாடுகளில் முஸ்லிம் பெண்களுக்கு ஹிஜாப் ஆடை அணிவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சு மேலும் கூறியுள்ளது.

டென்மார்க் அரசாங்கமும் எதிர்வரும் ஆகஸ்ட் 01 ஆம் திகதி முதல் நிகாப் ஆடையை முஸ்லிம் பெண்களுக்கு தடை செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. 

0 comments:

Post a Comment