Thursday, July 26, 2018

கோட்டை தொடரூந்து நிலையத்தில் அமைதியின்மை

July.26.2018

தொடரூந்து நிலைய அதிபர்கள், கட்டுப்பாட்டாளர்கள் மற்றும் சாரதிகள் உள்ளிட்ட சில தொழிற்சங்கள் இன்று பிற்பகல் 2 மணி முதல் ஆரம்பித்த திடீர் பணிப்புறக்கணிப்புறக்கணிப்பு காரணமாக பெருமளவான பயணிகள் அசௌரிகயத்திற்கு உள்ளாகினர்.

குறித்த பணிப்புறக்கணிப்பு பிற்பகல் 4.00 மணி வரை முன்னெடுக்கப்பட்டதாக தொடரூந்து கட்டுப்பாட்டாளர்கள் சங்க தலைவர் தெரிவித்துள்ளார்.

தொடரூந்து திணைக்களத்திற்கு சொந்தமான காணி ஒன்று தொடர்பில் இராஜாங்க அமைச்சர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்த கருத்துக்கு எதிர்ப்பு வெளியிட்டே இந்த குறுகிய நேர பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

பணிப்புறக்கணிப்பு இடம்பெற்ற இரண்டு மணிநேர காலப்பகுதியில் கொழும்பு கோட்டை மற்றும் மருதானை முதலான தொடரூந்து நிலையங்களில் பயணத்தை ஆரம்பவிக்கவிருந்த தொடரூந்துகளின் சேவைகள் இடம்பெறவில்லை.

அத்துடன், சில தொடரூந்துகள் பயணத்தின் இடைநடுவிலேயே நிறுத்திவைக்கப்பட்டதாக எமது செய்தித் தொடர்பாளர்கள் தெரிவித்தனர்.

அதேநேரம், கோட்டை மற்றும் மருதானை தொடரூந்து நிலையங்களில் பயண அனுமதிச் சீட்டு வழங்கும் பிரிவு மூடப்பட்டிருந்தது.

இதனால், மருதானை தொடரூந்து நிலையத்தில் பயணிகள் இயல்பற்ற நிலையில், செயற்பட்டமையால் தொடரூந்து நிலையத்தின் உடமைகளுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 comments:

Post a Comment