Tuesday, July 24, 2018

12 மாவட்ட பெண்களது ஒரு லட்சம் ரூபாவுக்கும் குறைவான நுண்கடன்கள் ரத்து

, 24 JULY 2018

வரட்சியால் பாதிக்கப்பட்ட 12 மாவட்டங்களின் பெண்கள் பெற்றுக்கொண்ட நுண்கடன்களில் ஒரு லட்சம் ரூபாவுக்கும் குறைவான கடன்களை ரத்துச் செய்ய அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.

நிதி மற்றும் வெகுசன ஊடக அமைச்சின் ஊடக அறிக்கை ஒன்றில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருகோணமலை, அம்பாறை, மட்டக்களப்பு, யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, கிளிநொச்சி, வவுனியா, மன்னார், குருநாகலை, புத்தளம், அனுராதபுரம் மற்றும் பொலன்னறுவை ஆகிய மாவட்டங்களில் வரட்சியால் பாதிக்கப்பட்ட பெண்கள் பெற்றுக்கொண்ட கடன்களே இவ்வாறு தீர்க்கப்படுகின்றன.

இந்த பகுதிகளில் உள்ள பெண்கள் ஒரு லட்சம் அல்லது அதற்கு குறைவான நுண்கடன்களைப் பெற்றுக்கொண்ட பெண்கள் இந்த திட்டத்திற்கு விண்ணப்பிக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தீர்க்கப்படும் கடனின் மூலத் தொகையை அரசாங்கத்தின் திறைச்சேரி செலுத்துவதுடன் அதன் வட்டத்தொகையை நுண்கடன் நிதி நிறுவனங்கள் ஏற்றுக்கொள்ளும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

இதற்கான அமைச்சரவை யோசனையை நிதியமைச்சர் மங்கள சமரவீர முன்வைத்திருந்தார்.

0 comments:

Post a Comment