Friday, July 13, 2018

சாய்ந்தமருதில் சட்டவிரோதமாக கையகப்படுத்திய அரச காணியை மீட்டெடுக்குமாறு, கல்முனை நீதிமன்ற உத்தரவிற்கமைய எல்லை வேலிகள் அகற்றப்பட்டன…!


July.13.2018

சாய்ந்தமருது 8ஆம் பிரிவில், தோணாவை அண்டிய பிரதேச அரச காணியை, சட்டவிரோதமான முறையில் கையகப்படுத்திய தனியாரிடமிருந்து மீட்டெடுக்குமாறு, கல்முனை நீதிமன்றம் கட்டளை பிறப்பிறப்பித்துள்ளதென, சாய்ந்தமருது பிரதேச செயலக குடியேற்ற உத்தியோகத்தர் ஜே.ஏ.ஹஸ்மி தெரிவித்துள்ளார்.

குறித்த அரச காணிக்கு, தனிநபர் ஒருவர் எல்லை வேலியிட்ட சம்பவத்துக்கு எதிராக, சாய்ந்தமருது பிரதேச செயலாளரால், கல்முனை நீதவான் நீதிமன்றத்தில் அரச காணிகளை மீட்டல் சட்டத்தின் கீழ், வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

மேற்படி வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட நீதிமன்றம், அடத்தாகப் பிடிக்கப்பட்ட காணி, அரச காணி எனத் தீர்ப்பு வழங்கியது.
இதனையடுத்து, குறித்த காணியின் எல்லை வேலிகளை அகற்றும் பணி, நேற்று முன்தினம் (10) பிற்பகல் மேற்கொள்ளப்பட்டது.

சாய்ந்தமருது பிரதேச செயலகக் குடியேற்ற உத்தியோகத்தர் ஜே.ஏ.ஹஸ்மி தலைமையில், கிராம உத்தியோகத்தர்களான ஏ.எம்.எம்.அஜ்கர், எம். நஜிபா உள்ளிட்ட பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், கல்முனை நீதவான் நீதிமன்ற உத்தியோகத்தர்கள், பொலிஸ் உத்தியோகத்தர்கள் எனப் பலரும் இந்நடவடிக்கையின் போது சமுகமளித்திருந்தனர்.

0 comments:

Post a Comment