July 13, 2018
நாட்டிலும், நாட்டைச் சூழவுள்ள கடலிலும் காற்றின் வேகம் அதிகரிக்கக்கூடும் என்று வளிமண்டவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. இந்த நிலைமை அடுத்து வரும் சில நாட்களுக்குத் தொடரும் என்று திணைக்களத்தின் வானிலை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதேவேளை மத்திய , சப்ரகமுவ மாகாணங்களில் மழை பெய்யக்கூடும். ஏனைய பிரதேசங்களில் ஓரளவு மழை பெய்யும். நாட்டில் அவ்வப்போது மணிக்கு 50 முதல் 60 கிலோ மீற்றர் வரையிலான வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். கொழும்பிலிருந்து காலி ஊடாக மாத்தறை வரையான கடற்பரப்புகளில் ஓரளவு மழை பெய்யக் கூடும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது தென்மேற்கு திசையிலிருந்து வீசுவதுடன் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 30 – 40 கிலோ மீற்றர் வரை காணப்படும்.
நீர்கொழும்பிலிருந்து புத்தளம், காங்கேசன்துறை மற்றும் திருகோணமலை ஊடாக மட்டக்களப்பு வரையான மற்றும் ஹம்பாந்தோட்டையிலிருந்து பொத்துவில் வரையான கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 60-65 கிலோ மீற்றர் வரை அதிகரித்து வீசக்கூடும். அவ்வேளைகளில் குறித்த கடற்பரப்புகள் மிகவும் கொந்தளிப்பாகக் காணப்படும்.
ஏனைய கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50 கிலோ மீற்றர் வரை அதிகரித்து வீசக்கூடும். ஆகவே கடலில் பயணம் செய்வோரும், மீனவ சமூகமும் அவதானமாகச் செயற்படுமாறு திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.
Daily ceylon
0 comments:
Post a Comment