Thursday, July 12, 2018

கத்தாரில் இந்த உணவுப் பொருட்களை யாரும் உண்ண வேண்டாம்! உணவு கட்டுப்பாட்டு மையம் அறிவிப்பு!


 
July 12, 2018 

கத்தார் வாழ் மக்களுக்கு உணவுக் காட்டுப்பாட்டு மையம் முக்கிய அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளது. அதாவது பெல்ஜியம் மற்றும் ஹங்கேரி போன்ற நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு தற்போது கத்தார் சந்தைகளில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ள உறைந்த (Frozen) சோளம் மற்றும் காய்கறிகளை உண்ண வேண்டாம் என்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

லிஸ்டீரியா எனப்படும் பக்டீரியாக்கள் இதில் உள்ளடங்கியிருப்பதாக ஆராய்ச்சிகள் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக தற்போது இந்த பொருட்கள் சந்தைகளிலிருந்து நீக்கப்பட்டு வருகின்றன. இந்தப் பொருட்களின் மாதிரிகள் தற்போது சுகாதார அமைச்சின் பரிசோதனைக் கூடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

மேலும் பொதுமக்கள் யாராவது இது போன்ற பொருட்களை கொள்வனது செய்து இருந்தால், உடனடியாக விற்பனையாளர்களுக்கு மீள கையளிக்கும் படியும், யாரும் உணவுக்காக பாவிக்க வேண்டாம் என்பதாகவும், உணவுக் காட்டுப்பாட்டு மையம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

மேலும் ஏற்கனவே வாங்கி உட்கொண்டவர்கள் யாராவது சாப்பிட்டு 3-5 நாட்களுக்குள் குமட்டல் அல்லது காய்ச்சல் போன்ற அறிகுறிகள் தென்பட்டால் அருகில் உள்ள மருத்துவ நிலையங்களுக்கு செல்லுமாறும் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

0 comments:

Post a Comment