12.07.2018
பிரித்தானியாவில் வசிக்கின்ற இலங்கை உள்ளிட்ட வெளிநாடுகளைப் பூர்வீகமாக கொண்ட பெற்றோரின் பிள்ளைகளது கடவுச் சீட்டை புதுப்பிக்கும் போது, மரபணுப் பரிசோதனை மேற்கொள்ளப்பட வேண்டியது கட்டாயமாக கடைபிடிக்கப்படவுள்ளது.
பிரித்தானிய உள்துறை செயலகத்தை மேற்கோள் காட்டி அந்த நாட்டின் ஊடகம் ஒன்று இந்த செய்திய வெளியிட்டுள்ளது.
அண்மையில் இலங்கையைச் சேர்ந்த பெண் ஒருவர் தமது பிள்ளையின் கடவுச் சீட்டை புதுப்பிக்கும் போது, குறித்தப் பெண்ணுக்கு பிரித்தானிய குடியுரிமை இல்லாத போதும், அவரது பிள்ளைக்கு பிரித்தானிய குடியுரிமை வழங்கப்பட்டமை அவதானிக்கப்பட்டது.
அத்துடன் அவரது பிள்ளையின் தந்தையும் பிரித்தானிய குடியுரிமையைக் கொண்டவர் என்று கடவுச் சீட்டில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இதேபோன்று மற்றுமொரு பெண் தொடர்பிலும் பதிவாகி இருந்தது.
இவ்வாறான நிலைமையால், பிரித்தானியா உள்துறை செயலகம், குடியுரிமை வழங்கப்படும் விடயத்தில் குழப்பம் ஏற்பட்டுள்ளதாக சந்தேகம் கொண்டுள்ளது.
இந்தநிலையில் கடவுச் சீட்டை புதுப்பிக்கும் சிறார்களுக்கும் அவர்களின் பெற்றோருக்கும் மரபணுப்பரிசோதனை மேற்கொள்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
0 comments:
Post a Comment