Thursday, July 12, 2018

உலகின் பலம் வாய்ந்த கடவுச்சீட்டு பட்டியல் - இலங்கைக்கு எத்தனையாவது இடம் தெரியுமா?


  July 12, 2018 

உலகின் பலமான கடவுச்சீட்டை கொண்டநாடுகளின் பட்டியலை சர்வதேச குடியுரிமைதொடர்பில் செயற்படுகின்ற ‘ Henley & Partners”நிறுவனம் வெளியிட்டுள்ளது. ஒரு நாட்டின் கடவுச்சீட்டினை பயன்படுத்திஎத்தனை நாடுகளுக்கு செல்ல முடியும் என்றஎண்ணிக்கையினை வைத்து இந்த தரவரிசைஅறிவிக்கப்பட்டுள்ளது.

உலகின் 183 நாடுகளுக்கு ஜப்பான் சிங்கப்பூர் ஆகியநாட்டு கடவுச்சீட்டுகள் மூலம் பயணிக்க முடியம்என்பதை கருத்தில் கொண்டு ஜப்பான் மற்றும்சிங்கப்பூர் முதலாம் இடத்தைபகிர்ந்துகொண்டுள்ளன. குறித்த பட்டியலில்ஜேர்மனி இரண்டாம் இடத்தையும் பிடித்துள்ளஅதேவேளை தென் கொரியா ஸ்பெய்ன் பின்லாந்துபிரான்ஸ் இத்தாலி மற்றும் சுவீடன் ஆகிய நாடுகள்பலமிக்க கடவுசீட்டுகளை கொண்ட நாடுகள்பட்டியலில் 3 இடத்தை பிடித்துள்ளன.

105 நாடுகளை உள்ளடக்கியுள்ள இந்த பட்டியலில்இலங்கைக்கு 94 வது இடம் கிடைத்துள்ளது.அதற்கமைய இலங்கையின் கடவுச்சீட்டினைபயன்படுத்தி 42 நாடுகளுக்கு வீசா இன்றி பயணிக்கமுடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.கடந்த வருடம்89 வது இடத்தில் இருந்த இலங்கை பின்னோக்கிசென்றுள்ளது.

இந்த பட்டியலில் இலங்கை மற்றும் மியன்மார்நாடுகள் 94வது இடத்தினை பகிர்ந்துகொண்டுள்ளன. சோமாலியா, பாகிஸ்தான், சிரியா, ஈரான், மற்றும்ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகள் இந்ததரவரிசையில் பலமற்ற கடவுச்சீட்டுகளைகொண்ட நாடுகளாக பதிவாகியுள்ளது.

இலங்கை பல்வேறு விடயங்களில் முன்னேற்றம்கண்டுள்ள போதிலும் 62 ம் இடத்தில் உள்ள ஸிம்பாப்வே நாட்டை விட பந்தங்கியுள்ளமைசுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

0 comments:

Post a Comment