JULY 2018 -
தமிழகத்தில் வசிக்கின்ற ஈழ ஏதிலிகள், எதிர்காலம் கேள்விக்குறியாக்கப்பட்ட நிலையில் வாழ்ந்துவருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலக சோசலிச இணையத்தளம் வெளியிட்டுள்ள கட்டுரையொன்றில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் இடம்பெற்ற வன்முறைகளால் 1980ம் ஆண்டுக்குப் பின்னர் இந்தியாவிற்கு ஏதிலிகளாக சென்ற 1 லட்சத்துக்கு 30 ஆயிரம் பேர் அங்கு எதிலிகளாக தங்கியுள்ளனர்.
தமிழகத்தில் உள்ள 100 ஏதிலிகள் முகாம்களில் 60 ஆயிரம் ஈழ ஏதிலிகள் தங்கியுள்ளனர்.
கேரளாவிலும் கர்நாடகாவிலும் 42 ஆயிரம் பேர் வரையில் வசித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர்களுக்கு இன்னும் இந்திய குடியுரிமை வழங்கப்படவில்லை.
அவர்கள் தொடர்பில் தமிழகத்தின் முக்கிய அரசியல் கட்சிகளான திராவிட முன்னேற்றக் கழகம் மற்றும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்பன முதலைக்கண்ணீர் வடிப்பதாகவும், அந்த கட்சிகளால் ஏதிலிகளின் வாழ்வில் எந்த நல்ல மாற்றங்களும் ஏற்படுத்தப்படவில்லை என்றும் அந்த இணையத்தளம் தெரிவித்துள்ளது.
மேலும் குறித்த ஏதிலிகள் மிகவும் மோசமான வகையில் நடத்தப்படுவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
ஏதிலிகள் முகாம்கள் தடுப்பு முகாம்கள் போன்று செயற்படுவதாகவும், அங்கு வசிக்கின்ற மக்கள் எந்நேரமும் காவற்துறைக் கண்காணிப்பில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment