July.13.2018
கொழும்பில் சொகுசு வீடு பெற்றுத் தருவதாக தெரிவித்து கொழும்பு மாவட்ட அபிவிருத்திக் குழு இணைத்தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான முஜிபுர் ரஹ்மானின் பெயரை பயன்படுத்தி பணம் வசூலித்ததாக கூறப்படும் நபர் ஒருவர் வாழைத்தோட்ட பொலிஸாரினால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.
முஜிபுர் ரஹ்மான் எம்.பி. வழங்கிய முறைப்பாட்டையடுத்தே இவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சந்தேகநபர் புதுக்கடை பண்டாரநாயக்க மாவத்தையில் வசிக்கும் ஒருவர் எனவும் குறிப்பிடப்படுகின்றது.
இவர் வாழைத்தோட்ட பிரதேசத்திலுள்ளவர்களிடம் மாத்திரம் சுமார் 50 லட்சத்துக்கும் அதிகமான பணத்தை மோசடி செய்துள்ளதாகவும் பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விசாரணைகளின்போது பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் மற்றும் அவரது அலுவலக செயலாளர் ஆகியோரின் பெயரை பயன்படுத்தி இவ்வாறு குறித்த நபர் மோசடியில் ஈடுபட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
-Vidivelli
0 comments:
Post a Comment