12 JULY 2018
வடக்கில் நிலக்கண்ணி வெடி அகற்றும் பணிகளுக்கு வழங்கும் ஒத்துழைப்புகள் காரணமாக, பல குடும்பங்கள் தங்களது சொந்த இடங்களில் மீள்குடியேற வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்திருப்பதாக பிரித்தானியா தெரிவித்துள்ளது.
கொழும்பில் உள்ள பிரித்தானிய உயர்ஸ்தானிகரகத்தின் டுவிட்டர் பதிவு ஒன்றில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹலோ ட்ரஸ்ட் நிறுவனத்தின் ஊடாக இலங்கையில் நிலக்கண்ணி வெடிகளை அகற்றும் நடவடிக்கைகள் பிரித்தானிய அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படுகிறது.
தற்போது உலகில் மிகவும் அதிக அளவில் நிலக்கண்ணிவெடிகள் பதிக்கப்பட்ட இடங்களுள் ஒன்றான முகமாலையில் கண்ணிவெடி அகற்றும் பணிகள் இடம்பெற்று வருகின்றன.
2010ம் ஆண்டு முதல் இந்த பணிகளுக்காக பிரித்தானியா இலங்கைக்கு 7 மில்லியன் பவுண்ட்களை வழங்கியுள்ளது.
0 comments:
Post a Comment