July 11, 2018
இலங்கை ஏற்றுமதிச் சபைக்கூடாக அரசாங்கம் நடைமுறைப்படுத்துவதற்குத் திட்டமிட்டுள்ள சந்தைப் பிரவேசத்துக்கு உதவும் செயற்திட்டத்தின் கீழ், புதிதாக தொழில் முயற்சியில் ஈடுபடுவோரை ஊக்கப்படுத்தும் வகையில் மீள அறவிடப்படாத நிதியாக ஒரு மில்லியன் ரூபாவில் இருந்து ஐந்து மில்லியன் ரூபா வரை வழங்குவதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக ஏற்றுமதி அபிவிருத்திச் சபையின் தலைவரும் பிரதான நிறைவேற்று அதிகாரியுமான இந்திரா மல்வத்த தெரிவித்தார்.
2025 இல் செல்வந்த நாடாக இலங்கையை மாற்றும் அரசாங்கத்தின் பொருளாதார நோக்கின் ஒரு அம்சமாக இந்த நிதி வழங்கல் அமைகிறது எனவும் 2018 வரவு செலவுத் திட்டத்தில் பிரேரிக்கப்பட்டதன்படி இதற்கென 800 மில்லியன் ரூபாவை திறைசேரி ஒதுக்கி உள்ளது எனவும் அவர் தெரிவித்தார்.
ஆறு மாதங்களில் முடிவடையும் வியாபார முயற்சிகளுக்கு ஒரு மில்லியன் ரூபாவும், 18 மாத கால தொழில் முயற்சிகளுக்கு 01 மில்லியனில் இருந்து 5 மில்லியன் ரூபா வரையும் வழங்கப்படவிருக்கின்றன. இந்த நிதியைப் பெற்றுக் கொள்ள விரும்பும் தொழில் முயற்சியாளர்கள் தமது தொழில் உபாயங்களை உடனடியாக தமக்குச் சமர்ப்பிக்க வேண்டும் எனவும் தவிசாளர் இந்திரா மல்வத்த தெரிவித்தார்.
மேலதிக தகவல்களை 011-3144613 / 0112-303975 என்ற தொலைபேசி இலக்கத்துடனோ www.edb.gov.lk என்ற இணையத்தளம் ஊடாகவோ பெற்றுக் கொள்ள முடியும்.
0 comments:
Post a Comment