July 11, 2018
வில்பத்து சரணாலயத்துக்கு வெளியில் முஸ்லிம்கள் மீள்குடியேற்றப்படுவதற்கு எதிராக இனவாதிகள் மேற்கொண்டு வரும் பிரசாரங்களுக்கு மத்தியில் வில்பத்து சரணாலய பகுதிக்குள் குதிரைமலை முனையிலுள்ள முஸ்லிம்களுக்குச் சொந்தமான தொல்பொருள்கள் அழிக்கப்படும் அபாயத்தை எதிர்நோக்கியிருப்பதான தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.
இந்தப் பகுதியில் இருக்கும் குதிரைச் சிலையும், முஸ்லிம் மகான் ஒருவரின் அடக்கஸ்தலமும் சிதிலமடைந்திருக்கும் நிலையில் இவற்றை அகற்றிவிடுவதற்கான முயற்சிகளும் நடைபெற்று வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
கி.பி.543 இல் விஜயன் வந்திறங்கிய தம்பபன்னி பிரதேசத்தை அண்டிய இந்தக் குதிரைமலைப் பிரதேசத்தில் நீண்ட காலத்துக்கு முன்னர் முஸ்லிம்கள் வாழ்ந்ததற்கான அடையாளங்கள் காணப்பட்டுள்ளன. யுத்த காலத்தில் இந்தப் பிரதேசத்திலுள்ள குதிரைச் சிலையுட்பட்ட பல புராதனச் சின்னங்கள் சிதைக்கப்பட்டிருக்கின்றன. இந்தத் துறைமுகத்தைப் பயன்படுத்தி முஸ்லிம்கள் வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட்டதற்கான சான்றுகளும் இருந்திருக்கின்றன.
முஸ்லிம்கள் பூர்வீகமாக வாழும் மன்னார் பிரதேசங்களில் காணப்படுவது போன்ற நீளமான அடக்கஸ்தலமொன்று சிதைவடைந்த நிலையில் குதிரைமலையில் எவ்விதப் பாதுகாப்புமின்றி காணப்படுகிறது. இந்த இடம் தற்பொழுது கடற்படையினரின் குடியிருப்பாக மாறியிருக்கிறது. இதுபோன்ற தொல்பொருட்கள் பாதுகாப்பற்ற நிலையில் இருப்பதனால் முஸ்லிம்களின் பூர்வீகத்தை எடுத்துக் காட்டும் இந்தத் தொல்பொருட்கள் அழிக்கப்படும் அபாயத்தை எதிர்நோக்கியிருக்கின்றன.
படம் உதவி லங்காதீப
Jaffna Muslim
0 comments:
Post a Comment