13.07.2018
இலங்கை மட்டுமல்லாது உலகளாவிய ரீதியில் பெண்கள் தமத அழகை பராமரிப்பதற்கு மிகவும் கவனம் எடுப்பதுடன், தமது நேரத்தையும், பணத்தையும் அதற்கு செலவழிக்கின்றார்கள்.
அந்த வகையில் அழகுக்கு ஆசைப்பட்டு சந்தையில் கிடைக்கும் பொருட்களால் பெண்கள் தமது இயற்கையான அழகை இழந்து அகோரமான தோற்றத்தை பெற்ற சம்பவங்களும் காணப்படுகின்றன.
அவ்வாறு இலங்கையில் நடத்தப்பட்ட ஆய்வில் சில அதிர்ச்சித்தகவல்கள் வெளிவந்துள்ளன.
அந்த வகையில் நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபை சமீபத்தில் திடீர் சோதனை நடவடிக்கை ஒன்றை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதில் மூன்று வகையான கிறீம்கள் கைத்தொழில் தொழில்நுட்ப நிறுவனத்திடம் பரிசோதனைக்காக சமர்ப்பிக்கப்பட்டு அறிக்கையும் பெற்றுள்ளது.
இந்த அறிக்கைக்கு அமைவாக குறித்த சில கிறீம்களில் அடங்கியுள்ள இரசாயனத்தின் அளவு குறிப்பிடத்தக்க அளவிலும் பார்க்க அதிகளவில் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இது ஆபத்து எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் இந்த கிறீம் வகைகளை விற்பனை செய்த வர்த்தகர்கள் கங்கொடவில நீதவான் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தப்பட்டு, இவர்களுக்கு 75 ஆயிரம் ரூபா தண்டப்பணம் விதிக்கப்பட்டதுடன் எச்சரிக்கையும் செய்யப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment