11 JULY 2018
அரசதுறை நிறைவேற்று அதிகாரிகளின் வேதன பிரச்சினைக்கு தீர்வைப் பெற்றுத்தருமாறு கோரி, இன்றயை தினம் சுகயீன விடுமுறை தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட உள்ளதாக அரசதுறை நிறைவேற்று அதிகாரிகளின் ஒன்றிணைந்த சங்கம் தெரிவித்துள்ளது.
ஆயுர்வேத மருத்துவம், நில அளவைத் திணைக்களம் மற்றும் உள்நாட்டு வருமான வரித் திணைக்களம், கல்வி நிர்வாக சேவை உள்ளிட்ட 19 தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகள் இந்த தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட உள்ளதாக ஒன்றிணைந்த சங்கத்தின் செயலாளர் எச்.ஏ.எல் உதயசிறி தெரிவித்துள்ளார்.
அரசாங்கம் நீதித்துறைக்கு மாத்திரம் 100க்கு 300 சதவீத வேதன உயர்வை மேற்கொண்டுள்ளது.
இதனூடாக அரச பணியாளர்களின் வேதனம் தொடர்பான தேசிய வேதனக் கொள்கையை அரசாங்கம் மீறியுள்ளது.
எனவே, இதற்கு எதிராக தொழிற்சங்க நடவடிக்கை மேற்கொள்வதுடன், இன்று முற்பகல் கொழும்பு கோட்டையில் எதிர்ப்பு போராட்டம் ஒன்றில் ஈடுபட உள்ளதாகவும் அரசதுறை நிறைவேற்று அதிகாரிகளின் ஒன்றிணைந்த சங்கத்தின் செயலாளர் எச்.ஏ.எல் உதயசிறி தெரிவித்துள்ளார்.
0 comments:
Post a Comment