, 11 JULY 2018
கட்டிலில் வலியால் துடித்தாள்... எனக்கு என்ன நடந்ததென்று தெரியவில்லை.. தன்னை விட்டுவிடுமாறு கெஞ்சினாள்...
விடுவதற்கு மனம் இடம்கொடுக்கவில்லை..
மனதை பதறவைக்கும் ஒருவரின் வாய்மூல சாட்சியம்.
தளபாடங்கள் உற்பத்தி செய்யும் இடத்தில் உதவியாளராக பணிபுரிபவர் பிரபாத், அவரின் மனைவி ப்ரியாணி ஒரு பாடகியாவாள்.
இருவரும் பாணந்துறை பகுதியில் வசித்து வந்துள்ளனர்.
இருவரும் திருமணம் செய்துக்கொண்டதன் பின்னர் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்துள்ளனர்.
திருமண வயதில் மகன் ஒருவரும் காணப்பட்ட நிலையில், பெற்றோரான ப்ரியாணி மற்றும் பிரபாத் ஆகியோரின் உழைப்பில் சேமிக்கப்பட்ட பணத்தினை கொண்டு அமோகமான முறையில் திருமணம் செய்து வைத்துள்ளனர்.
ப்ரியாணி பாடகி என்பதால் அவருக்கு பல்வேறு இசை குழுக்களிடம் இருந்து கைபேசிக்கு அழைப்பு வருவது வழமையாகும் .
தொலைபேசி அழைப்புக்கள் வரும் போதெல்லாம் கணவரான பிரபாத் யார்....? என சந்தேகத்துடன் வினவுவதும் வழமையாகும்.
அது மாத்திரமின்றி அனுராதபுரத்தில் அமைந்துள்ள மத வழிப்பாட்டு தளம் ஒன்றிற்கு தியானத்திற்கு செல்வதாக ப்ரியாணி மாதத்தில் ஒருமுறை செல்வதும் வழக்கமாகும்.
இருவருக்கும் இடையில் இவ்வாறான பிரச்சினைகள் தொடர்பில் உரையாடி வாய்த்தர்க்கம் ஏற்பட்ட நிலையில் ப்ரியாணி தனது கணவரான பிரபாத் தனக்கு தொல்லையாக காணப்படுகின்றார் என காவற்துறையில் முறைப்பாடு செய்துள்ளார்.
விசாரணைகளை ஆரம்பித்த காவற்துறை மனைவியை பார்ப்பதற்கு ஒருவருட காலம் செல்ல கூடாது என நீதிமன்றம் வாயிலான தீர்வு ஒன்றிணையும் பெற்று கொடுத்திருந்தனர்.
ஒருவருடம் முடிந்த நிலையில் பிரபாத் தனது மனைவியான ப்ரியாணியை பார்க்க சென்றுள்ளார்.
பார்த்த சந்தர்ப்பத்தில்...........
ப்ரியாணி... என்ன மன்னிச்சிடு ஒருவருஷமா பிரிந்திருந்து கஷ்டத்த அனுபவித்தது போதும் எங்களோட பிரச்சினைய நாங்க ஏன் ஊர் மத்தியில கொண்டு போய் தீர்க்க வேனும்.
கதைத்து கொண்டிருக்கையில் குறுக்கிட்ட ப்ரியாணி ....
பிரபாத்... நல்லா ஒன்ன மட்டும் நீங்க புரிஞ்சிகனும்... எங்களோட பிரச்சினைய மற்றவங்களுக்கு சொல்லி திரிஞ்சதனாலதான் நான் கோபத்தில பொலிஸ்ல சொல்லிட்டன்.
சரி இனிமேல் என்மேல சந்தேகப்படமாட்டீங்க தானே..... அமைதியாக மனைவியின் வார்த்தைகள சேவிமடுத்த பிரபாத்...
தியானம் செய்ய போரதா சொல்ரிங்க.... ஆனா உங்கட போன் எந்த நேரமும் வெய்ட்டிங்கல தான் இருக்கு....நான் எடுத்தா மட்டும் நீங்க கதைக்கிறீங்க இல்ல ஏன்..என்ன காரணம் என்று தெரிஞ்சிகலாமா..?
பதிலளித்த ப்ரியாணி அப்படி எதுவம் கிடையாது, நீங்க என்ன முழுசா நம்புங்க.... இருவரும் ஒருவரை ஒருவர் சமாதானப்படுத்தி கொண்டு மீண்டும் சண்டையின்றி வாழ்வோம் என உறுதி வழங்கி கொண்டனர்.
சிறிது காலம் சென்றதும் ப்ரியாணிக்கு தொலைபேசி அழைப்பு வந்தது.
தொலைபேசியில் உரையாடிய ப்ரியாணி..... சிறுது நேரத்தின் பின்னர், அனுராதபுரத்தில் உள்ள மத வழிபாடு தளம் ஒன்றுக்கு தியானத்திற்கு செல்வதாக கூறி சென்றார்.
பிரபாத்திற்கு மீண்டும் சந்தேகம் தோன்றியது.
தான் மனைவியிடம் போக வேண்டாம் என கூறியும் போகின்றாள் என்றால் தன் மீது அன்பின்மையே காரணம் என நினைத்து கொண்டு மனம் நொந்து வாழ்ந்து கொண்டிருந்தார்.
இந்நிலையிலேயே, மனைவியை கொலை செய்ய வேண்டும் என் தீர்மானத்தினையும் பிரபாத் மேற்கொள்கின்றார்.
சந்தர்ப்பம் பார்த்து கொண்டிருந்த ப்ரியாணியின் கணவர் பிரபாத்திற்கு கடந்த 8 ஆம் திகதி அதற்கான நேரம் அமைகின்றது.
மகன் வீட்டிற்கு சமையல் பொருட்கள் வாங்குவதற்காக கடைக்கு செல்கின்றார்.
மகனின் மனைவி, வீட்டின் முன் சாலையில் அமர்ந்து அதிக சத்தத்துடன் தொலைக்காட்சி பார்த்து கொண்டிருந்தார்.
தியானத்திற்கு செல்வதாய் சென்ற ப்ரியாணி, வீட்டிற்கு திரும்பி தனது அறையில் உள்ள கட்டிலில் ஓய்வு எடுத்து கொண்டிருந்துள்ளார்.
பூனை பாதம் பொருத்தி சத்தமின்றி மனைவியின் அறைக்குள் நுழைந்த பிரபாத் மனைவியின் பாதம் அருகே சென்று அமர்கின்றார்.
மனைவியின் பாதங்களை தன் மடி மீது வைத்து மனைவியின் அசதியை போக்குவதற்கு மெதுவாக பிடித்து விட்டப்படி மனைவியை பார்த்து சில வார்த்தைகள் கேட்கின்றார்.
" ப்ரியாணி உண்மையில் நீ தியானத்திற்கா சென்று வருகின்றாய்.?
எங்களுக்கு திருமணம் முடித்த புதல்வன் ஒருவரும் இருக்கின்றார்.
கொஞ்சம் கூட வெட்கம் என்பது உனக்கு ஏற்படவில்லையா..?
10 நிமிடத்திற்கு ஒருமுறை தொலைபேசி வருகின்றது.
இளைஞர் பருவத்தில் உள்ள மகனுக்கோ அல்லது மருமகளுக்கோ அத்தனை அழைப்புக்கள் வந்ததில்லை.
ஆனால் உனக்கு எங்கிருந்து இத்தனை தொலைபேசி அழைப்புக்கள்.." பாதம் வலிபோக்க பிடித்தகொண்டிருந்தவாறு வினவினார் பிரபாத்.
சற்றும் எதிர் பாராது கோபம் உற்ற ப்ரியாணி கணவர் மீது தகாத வார்த்தை கொண்டு பேசுகின்றார்.
நான் எங்கு சென்றாலும் உங்களுக்கு தேவையில்லை, மூவேளை சாப்பாடு கிடைக்கின்றதா..? சாப்பிட்டு விட்டு வாயை மூடிக் கொண்டு வாழ்வதே உங்களது இறுதி காலத்திற்கு சிறந்ததாகும்.
என்னை கேள்வி கேட்கும் அளவிற்கு உங்களுக்கு தகுதி இல்லை என ப்ரியாணி நிந்தித்த போது, சற்றும் எதிர்பாராத வகையில் கத்தரிக்கோல் ஒன்றின் மூலம் வயிற்று பகுதியை குத்தி கிழிக்கின்றார் பிரபாத்.
கோபம் தீராது ப்ரியாணியின் மார்பகங்களிலும் குத்தியதோடு, கழுத்து பகுதிகளிலும் இரு தடவைகள் முழு பலத்தினையும் பிரயோகித்து குத்துகின்றார். இருந்தும் கோபம் தீரவில்லை.
தலையில் மூன்று தடவைகள் குறித்த கத்தரிக்கோலினால் குத்துகின்றார்.
இதன்போது வலிதாங்க முடியாமல் கட்டிலில் மனைவி துடிப்பதையும், சத்தமிடுவதையும் பிரபாத்தால் கட்டுப்படுத்த முடியவில்லை.
தொலைகாட்சி பார்த்து கொண்டிருந்த மருமகள் சம்பவத்தினை பார்வையிட்டதனை தொடர்ந்து கூச்சலிட்டதுடன், பிரபாத் சம்பவ இடத்தில் இருந்து தப்பிச் சென்றுள்ளார்.
தப்பிச் சென்ற பிரபாத்தை கடந்த திங்கட்கிழமை கைது செய்த காவற்துறை, நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய போது எதிவரும் 23 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு இட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment