11 JULY 2018
கனிய எண்ணெய் கூட்டுத்தாபனத்தின் நட்டத்தை ஈடு செய்வதற்காக எரிபொருள் விலையை மீண்டும் 7 ரூபாவால் அதிகரிக்க வேண்டும் என கனிய எண்ணெய் வளத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.
டீசல் மற்றும் பெற்றோலுக்கு மேலதிகமாக தற்போது மண்ணெண்னை லீற்றர் ஒன்று 70 ரூபாய்க்கு விநியோகிக்கப்படுவதால் இந்த நட்டம் ஏற்படுவதாக அந்த அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
அத்துடன் முன்னதாக அதிகரிக்கப்பட்ட விலை பல மணி நேரத்தின் பின்னர் கைவிட்டமை மற்றும் மீண்டும் நேற்று எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டமை காரணமாக கூட்டுதாபனத்திற்கு 41 கோடி நட்டம் ஏற்பட்டுள்ளதாக அதன் உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை, எரிபொருள் விலை அதிகரிப்பு காரணமாக பேருந்து, முச்சக்கர வண்டி, பாடசாலை மற்றும் அலுவலகங்களிலுக்கு சேவையில் ஈடுபடும் வாகனங்கள் என்பனவற்றின் கட்டணங்கள் அதிகரிக்கப்பட வேண்டும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment