Monday, December 3, 2018

ஜனாதிபதி சட்டத்துக்கு முரணாக செயற்படும் ஒரு தலைவர் என்பது நிரூபணமாகியுள்ளது- JVP

December 4, 2018

நீதிமன்ற தீர்ப்பை கண்டுகொள்ளாமலும், தான்தோன்றித்தனமாகவும் இதன்பிறகும் நடந்து கொள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், மஹிந்த ராஜபக்ஷ கூட்டமும் தயாரானால், அவர்கள் எதிர்பாராத விதத்தில் தோல்வியை பெற்றுக் கொடுக்க பாதையில் இறங்கி போராட தாம் தயார் என மக்கள் விடுதலை முன்னணி அறிவித்துள்ளது.

அக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்க நேற்று (03) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைக் கூறியுள்ளார்.

ஜனாதிபதியினால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல்களில் பெரும்பாலானவை நீதிமன்றத்தினால் நிராகரிக்கப்பட்டு விட்டன. இதன்படி, பார்க்கும் போது ஜனாதிபதி சட்டத்துக்கு முரணாக செயற்பட்ட ஒரு தலைவராக நிரூபணமாகியுள்ளது.

நாம் ஜனாதிபதியிடம் கூறுகின்றோம். பாராளுமன்றத்தை கலைக்கும் வர்த்தமானி அறிவித்தலை வாபஸ் பெறுங்கள். பாராளுமன்றத்திலுள்ள பெரும்பான்மைக்கு ஏற்ப அரசாங்கம் அமைக்க வழிவிடுங்கள் எனவும் அனுரகுமார திஸாநாயக்க மேலும் கூறியுள்ளார்.

0 comments:

Post a Comment